பத்தாம்-திருமுறை

6ம் தந்திரம் - 08. அவ வேடம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்

வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந்

தேடியுங் காணீர் சிவனவன் தாள்களே.  1 

 

 

ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடை

ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்

மான நலங்கெடும் அப்புவி யாதலால் 

ஈனவர் வேடங் கழிப்பித்தல் இன்பமே.  2 

 

 

இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்துள்ள

நன்செயல் புன்செய லாலந்த நாட்டிற்காம்

என்ப இறைநாடி நாடோறும் நாட்டினின்

மன்பதை செப்பஞ்  செயின்வையம் வாழுமே.  3 

 

 

இழிகுலத் தோர்வேடம் பூண்பர்மே லெய்த

வழிகுலத் தோர்வேடம் பூண்பர்தே வாகப்

பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்

கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே.  4 

 

 

பொய்த்தவஞ் செய்வார் புகுவர் நரகத்துப்

பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற்

பொய்த்தவம்மெய்த்தவம் போகத்துட்போக்கியஞ்

சத்திய ஞானத்தால் தங்குந் தவங்களே.  5 

 

 

பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக

மெய்வேடம் பூண்போர்மிகு பிச்சைகைக்கொள்வர்

பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்

உய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே.  6 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

புகழ்ச் சோழ நாயனார்
View Details
சுந்தரநாதனுக்கு பொற்கிழி கிடைக்கச் செய்தல்
View Details
வாயிலார் நாயனார்
View Details