பத்தாம்-திருமுறை

5ம் தந்திரம் - 19. நிராசாரம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு

சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி

யமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங்

கமையறிந் தாருட் கலந்துநின் றானே.  1 

 

 

பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி

தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்

நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர்

ஏங்கி உலகில் இருந்தழு வாரே.  2 

 

 

இருந்தழு வாரும் இயல்புகெ ட்டாரும்

அருந்தவ மேற்கொண்டங் கண்ணலை எண்ணில்

வருந்தா வகைசெய்து வானவர் கோனும்

பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே.  3 

 

 

தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர்

பாரறி வாளர் படுபயன் றானுண்பர்

காரறி வாளர் கலந்து பிறப்பர்கள்

நீரறி வார்நெடு மாமுகி லாமே.  4 

 

 

அறிவுடன் கூடி அழைத்தோர் தோணி

பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங்

குறியது கண்டுங் கொடுவினை யாளர்

செறிய நினைக்கிலர் சேவடி தானே.  5 

 

 

மன்னும் ஒருவன் மருவு மனோமயன்

என்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள்

துன்னி மனமே தொழுமின் துணையிலி

தன்னையும் அங்கே தலைப்பட லாமே.  6 

 

 

ஓங்காரத் துள்ளளி உள்ளே உதயமுற்

றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்

சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்

நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.  7 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

உரோம முனி சித்தர்
View Details
பூசலார் நாயனார்
View Details
ஸ்ரீ பெருமானந்த சித்த சுவாமிகள்
View Details