பத்தாம்-திருமுறை

5ம் தந்திரம் - 16. சாயுச்சியம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

சைவஞ் சிவனுடன் சம்பந்த மாவது

சைவந் தனையறிந் தேசிவஞ் சாருதல்

சைவஞ் சிவந்தன்னைச் சாராமல் நீங்குதல்

சைவஞ் சிவானந்தஞ் சாயுச் சியமே.  1 

 

 

சாயுச் சியஞ்சாக் கிராதீதஞ் சாருதல்

சாயுச் சியமுப சாந்தத்துத் தங்குதற்

சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச்

சாயுச் சியமனத் தானந்த சத்தியே.  2 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

பாண்டியனுக்காக தண்ணீர் பந்தல் அமைத்தல்
View Details
கோச் செங்கட் சோழ நாயனார்
View Details
இயற்பகை நாயனார்
View Details