பத்தாம்-திருமுறை

5ம் தந்திரம் - 06. கிரியை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

பத்துத் திசையும் பரமொரு தெய்வமுண்

டெத்திக்கி லவரில்லை என்பதின் அமலர்க்

கொத்துத் திருவடி நீழல் சரணெனத்

தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.  1 

 

 

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்

வானுறு மாமல ரிட்டு வணங்கினும்

ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது

தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.  2 

 

 

கோனக்கன் றாயே குரைகழல் ஏத்துமின்

ஞானக்கன் றாகிய நடுவே யுழிதரும்

வானக்கன் றாகிய வானவர் கைதொழு

மானக்கன் றீசன் அருள்வள்ள மாமே.  3 

 

 

இதுபணிந் தெண்டிசை மண்டிலம் எல்லாம்

அதுபணி செய்கின் றவள் ஒரு கூறன்

இதுபணி மானுடர் செய்பணி யீசன்

பதிபணி செய்வது பத்திமை காணே.  4 

 

 

பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்

சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்

உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற்

சித்தங் குருவரு ளாற்சிவ மாகுமே.  5 

 

 

அன்பின் உருகுவன் நாளும் பணிசெய்வன்

செம்பொன்செய் மேனி கமலத் திருவடி

முன்புநின் றாங்கே மொழிவ தெனக்கருள்

என்பினுட் சோதி இலங்குகின் றானே.  6 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

இளையான்குடி மாற நாயனார்
View Details
வெள்ளம் தடுத்தல்
View Details
மாயக் குதிரைகள் விற்றல்
View Details