பத்தாம்-திருமுறை

3ம் தந்திரம் - 21. சந்திர யோகம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

எய்து மதிக்கலை சூக்கத்தி லேறியே

எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்

எய்துங் கலைபோல ஏறி இறங்குமாந்

துய்யது சூக்கத்து தூலத்த காயமே  1 

 

 

ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்

ஆகின்ற ஈரெட்டா டாறிரண் டீரைந்துள்

ஏகின்ற வக்கலை யெல்லா மிடைவழி

ஆகின்ற யோகி அறிந்த அறிவே  2 

 

 

ஆறாத தாங்கலை ஆதித்தன் சந்திரன்

நாறா நலங்கினார் ஞாலங் கவர்கொளப்

பேறாங் கலைமுற்றும் பெருங்கால் ஈரெட்டு

மாறாக் கதிர்க்கொள்ளு மற்றங்கி கூடவே  3 

 

 

பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை

பத்தினொ டாறும் உயர்கலை பான்மதி

ஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்கலை

அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே  4 

 

 

எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட்

சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ்சூழ்கலை

கட்டப் படுமீ ரெட்டா மதிக்கலை

ஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாவே  5 

 

 

எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டுந் தீக்கதிர்

சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையெனக்

கட்டப் படுந்தார கைகதிர் நாலுள

கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே  6 

 

 

எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்

சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலஞ்

செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்

நல்லோர் திருவடி நண்ணிநிற் போரே  7 

 

 

அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத்

தங்கிய தாரகை யாகுஞ் சசிபானு

வங்கிய தாரகை யாகும் பரையொளி

தங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே  8 

 

 

தரணி சலங்கனல் கால்தக்க வானம்

அரணிய பானு அருந்திங்கள் அங்கி

முரணிய தாரகை முன்னிய ஒன்பான்

பிரணவ மாகும் பெருநெறி தானே  9 

 

 

தாரகை மின்னுஞ் சசிதேயும் பக்கத்துத்

தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்

தாரகை பூவிற் சகலத்தி யோனிகள்

தாரகைத் தாரகை தானாஞ் சொரூபமே  10 

 

 

முற்பதி னைஞ்சின் முளைத்துப் பெருத்திடும்

பிற்பதி னைஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும்

அப்பதி னைஞ்சும் அறியவல் லார்க்கட்குச்

செப்பரி யாங்கழல் சேர்தலு மாமே  11 

 

 

அங்கி எழுப்பி யருங்கதிர் ஊட்டத்துத்

தங்குஞ் சசியால் தாமம்ஐந் தைந்தாகிப்

பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத்

திங்கள் கதிரங்கி சேர்க்கின்ற யோகமே  12 

 

 

ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற

நின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள்

கன்றிய காலன் 1கருத்துழி வைத்தபின்

சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே  13 

 

 

அங்கி மதிகூட வாகும் கதிரொளி

அங்கி கதிர்கூட வாகு மதியொளி

அங்கி சசிகதிர் கூடவத் தாரகை

தங்கி யதுவே சகலமு மாமே 14 

 

 

ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை

பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து

நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில்

ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே  15 

 

 

காணும் பரிதியின் காலை இடத்திட்டு

மாணும் மதியதன் காலை வலத்திட்டுப்

பேணியே யிவ்வாறு பிழையாமற் செய்வீரேல்

ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே  16 

 

 

பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில்

ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்

மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்குங்

காலைக்குச் சங்கு கதிரவன் தானே  17 

 

 

கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்

பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்

அதிரவ னண்டப் புறஞ்சென் றடர்ப்ப

எதிரவ னீச னிடமது தானே  18 

 

 

உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை

அந்திக்கு மந்திர மாரும் அறிகிலார்

அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின்

தந்தைக்கு முன்னே 3மகன்பிறந் தானே  19 

 

 

ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்

ஓதியும் ஏதும் அறியாத ஊமர்fகள்

ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீரேல்

வேதியன் அங்கே வெளிப்படுந் தானே  20 

 

 

பாம்பு மதியைத் தினலுறும் பாம்பினைத்

தங்கு கதிரையுஞ் சோதித் தனலுறும்

பாம்பு மதியும் பகைதீர்த் துடங்கொளீஇ

நீங்கல் கொடானே நெடுந்தகை யானே 21 

 

 

அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப்

பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று

நயந்தரு பூரணை உள்ள நடத்தி

வியந்தரு பூரணை மேவுஞ் சசியே  22 

 

 

சசியுதிக் கும்அள வுந்துயி லின்றிச்

சசியுதித் தானேல் தனதூண் அருந்திச்

சசிசரிக் கின்றள வுந்துயி லாமற்

சசிசரிப் பின் கட்டன் கண்டுயில் கொண்டதே  23 

 

 

ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள்

நாழிகை யாக நமனை அளப்பர்கள்

ஊழி முதலாய் உயர்வார் உலகினில்

தாழவல் லார் இச் சசிவன்ன ராமே  24 

 

 

தண்மதி பானுச் சரிபூமி யேசென்று

மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு

வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்

தண்மதி வீழ்வள விற்கண மின்றே  25 

 

 

வளர்கின்ற ஆதித்தன் தங்கலை யாறுந்

தளர்கின்ற சந்திரன் தங்கலை யாறு

மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி

அலர்ந்து விழுந்தமை யாரறி வாரே  26 

 

 

ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து

போம்வழி எங்கணும் போகாது யோகிக்குக்

காமுற இன்மையிற் கட்டுண்ணு மூலத்தில்

ஓமதி யத்துள்விட் டுரையுணர் வாலே  27 

 

 

வேறுறச் செங்கதிர் மெய்க்கலை யாறொடுஞ்

சூறுற நான்குந் தொடர்ந்துற வேநிற்கும்

ஈறிலி னன்கலை யீரைந்தொ டேமதித்

தாறுட் கலையுள் அகலுவா வாமே  28 

 

 

உணர்விந்து சோணி உறவினன் வீசும்

புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில்

உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில்

உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே  29 

 

 

விடாத மனம்பவ னத்தொடு மேவி

நடாவு சிவசங்கின் நாதங் கொளுவிக்

கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு

படாதன இன்பம் பருகார் அமுதமே  30 

 

 

அமுதப் புனல்வரு மாற்றங் கரைமேற்

குமிழிக் குட்சுட ரைந்தையுங் கூட்டிச்

சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்கு

நமன்இல்லை நற்கலை நாள்இல்லை தானே  31 

 

 

உண்ணீ ரமுத முறுமூ றலைத்திறந்

தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத்

தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலங்

கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே  32 

 

 

மாறு 1மதியும் 2மதித்திரு மாறின்றித்

தாறு படாமல் தண்டோடே தலைப்படில்

ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும்

பாறு படாஇன்பம் பார்மிசை பொங்குமே 33

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

இடியாப்ப சித்தர்
View Details
வன்னி மரம்ரூபவ் கிணறுரூபவ் சிவலிங்கம் சாட்சி
View Details
கல்லானைக்குக் கரும்பு கொடுத்தல்
View Details