பத்தாம்-திருமுறை

3ம் தந்திரம் - 20. அமுரிதாரணை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

உடலிற் கிடந்த வுறுதிக் குடிநீர்க்

கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும்

உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்

நடலைப் படாதுயிர் நாடலு மாமே  1 

 

 

தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்

ஒளிதரு மோராண்டில் ஊனமொன் றில்லை

வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்குங்

களிதருங் காயங் கனகம தாமே  2 

 

 

நூறு மிளகு நுகருஞ் சிவத்தினீர்

மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்

தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்

மாறும் இதற்கு மறுமயி ராமே  3 

 

 

கரையரு கேநின்ற கானல் உவரி

வரைவரை என்பர் மதியிலா மாந்தர்

நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு

நரைதிரை மாறு நமனுமங் கில்லையே  4 

 

 

அளக நன்னுத லாயோ ரதிசயங்

களவு காயங் கலந்தஇந் நீரிலே

மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்

இளகும் மேனி இருளுங் கபாலமே  5 

 

 

வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்

நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்

ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்

சோதி மருந்திது சொல்லவொண் ணாதே  6 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

சோழனது படையை முறியடித்தல்
View Details
திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
View Details
மச்ச முனி
View Details