பத்தாம்-திருமுறை

3ம் தந்திரம் - 16. வாரசரம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம்

ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்

வள்ளிய பொன்னே வளரும் பிறையிடந்

தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே  1 

 

 

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றுந்

தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்

ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று

வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே  2 

 

 

செவ்வாய் வியாழஞ் சனிஞாயி றேஎன்னும்

இவ்வா றறிகின்ற யோகி இறைவனே

ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்

டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே  3 

 

 

மாறி வருமிரு பான்மதி வெய்யவன்

ஏறி இழியுந் இடைபிங் கலையிடை

ஊறும் உயிர்நடு வேயுயி ருக்கிரந்

தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே  4 

 

 

உதித்து வலத்திடம் போகின்ற போது

அதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும்

உதித்தது வேமிக வோடிடு மாகில்

உதித்த விராசி யுணர்ந்துகொ ளுற்றே 5 

 

 

நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி

அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி

இடுகின்ற வாறுசென் றின்பணி சேர

முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே  6 

 

 

ஆயும் பொருளும் அணிமலர் மேலது

வாயு விதமும் பதினா றுளவலி

போய மனத்தைப் பொருகின்ற வாதாரம்

ஆயவு நாளு 1முகுர்த்தமு மாமே 7

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

சாவளிகே சிவலிங்கேஸ்வர சித்தர்
View Details
சோமாசி மாற நாயானார்
View Details
காரைக்காலம்மையார்
View Details