பத்தாம்-திருமுறை

3ம் தந்திரம் - 11. அட்டமா சித்தி

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

பணிந்தெண் திசையும் பரமனை நாடித்

துணிந்தெண் திசையுந் தொழுதெம் பிரானை

அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி

தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே  1 

 

 

பரிசறி வானவர் பண்பன் அடியெனத்

துரிசற நாடியே தூவெளி கண்டேன்

அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி

பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே  2 

 

 

குரவன் அருளிற் குறிவழி மூலன்

பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்

தெரிதரு சாம்பவி கேசரி சேரப்

பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே  3 

 

 

காயாதி பூதங் கலைகால மாயையில்

ஆயா தகல அறிவொன் றனாதியே

ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்

வீயாப் பரகாயம் மேவலு மாமே  4 

 

 

இருபதி னாயிரத் தெண்ணூறு பேதம்

மருவிய கன்ம மாமந்த யோகந்

தருமிவை காய உழைப்பாகுந் தானே

அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே 5 

 

 

மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின்

உதய மதுநா லொழியவோ ரெட்டுப்

பதியுமஈ ராறாண்டு பற்றறப் பார்க்கில்

திதமான ஈராறு சித்திக ளாமே  6 

 

 

நாடும் பிணியாகு நஞ்சனஞ்சூழ்ந்தக்கால்

நீடுங் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்

பீடொன்றி னால்வாயாச் சித்திகள்பே தத்தின்

நீடுங் தூரங்கேட்டல் நீண்முடி வீராறே  7 

 

 

ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாந்

தாழா நடைபல யோசனை சார்ந்திடுஞ்

சூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை

தாழான ஒன்பதிற் றான்பர காயமே  8 

 

 

ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்

ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி

சீரொன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்று

ஏருன்று வியாபியாய் நிற்றல்ஈ ராறே  9 

 

 

தானே அணுவுஞ் சகத்துத்தன் நொய்ம்மையும்

மானாக் 2கனமும் பரகாயத் தேகலுந்

தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்

ஆனாத வுண்மையும் 3வியாபியு மாம்எட்டே 10 

 

 

தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர்

வாங்கிய காலத்து மற்றோர் குறையில்லை

யாங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக் 

கோங்கி வரமுத்தி1 முந்திய வாறே 11 

 

 

முந்திய முந்நூற் றறுபது காலமும்

வந்தது நாழிகை வான்முத லாயிடச்

சிந்தை 1செயச்செய மண்முதல் தேர்ந்தறிந்

துந்தியுள் நின்று உதித்தெழு மாறே  12 

 

 

சித்தந் திரிந்து சிவமய மாகியே

முத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்

சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்

சித்தம் பரத்தில் திருநடத் தோரே  13 

 

 

ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன

ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்செயன்

ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட

ஒத்த வுடலும் உயிரும் இருந்ததே  14 

 

 

இருக்குந் தனஞ்செயன் ஒன்பது காலில்

இருக்கும் இருநூற் றிருபத்து மூன்றாய்

இருக்கு 1முடலி லிருந்தில வாகில்

இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே  15 

 

 

வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்

வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்

வீங்கிய வாதமுங் கூனு 1முடமதாய்

வீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே  16 

 

 

கண்ணில் வியாதி யுரோகந் தனஞ்செயன்

கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்

கண்ணினிற் கூர்மன் கலந்தில நாதலாற்

கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே  17 

 

 

நாடியின் ஓசை நயனம் இருதயந்

தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத்

தேவருள் ஈசன் திருமால் பிரமனும்

ஓவற நின்றங் குணர்ந்திருந் தாரே 18 

 

 

ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்

ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்

ஒன்பது நாடி ஒடுங்கவல் லார்கட் (கு)

ஒன்பது 1காட்சி யிலைபல வாமே  19 

 

 

ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல

வாங்கி இரவி மதிவழி ஓடிடத்

தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட

ஆங்கது சொன்னோம் 1அருவழி யோர்க்கே  20 

 

 

தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி

வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்

துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால்

விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே  21 

 

 

ஓடிச்சென் றங்கே ஒருபொருள் கண்டவர்

நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர்

தேடிச்சென் றங்கே தேனை முகந்துண்டு

பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே  22 

 

 

கட்டிட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது

மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்

கட்டிட்டு நின்று களங்கனி யூடுபோய்ப்

பொட்டிட்டு நின்று பூரண மானதே 23 

 

 

பூரண சத்தி ஏழுமூன் றறையாக

ஏரணி கன்னியர் எழுநூற்றஞ் சாக்கினார்

நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங்

காரண மாகிக் கலந்து விரிந்ததே  24 

 

 

விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை

கரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற்

பரந்து குவிந்தது பார்முதற் பூதம்

இரைந்தெழு வாயு விடத்தில் ஒடுங்கே 25 

 

 

இடையொடு பிங்கலை என்னும் இரண்டு

மடைபடு வாயுவு மாறியே நிற்குந்

தடையவை 1யாறேழுந் தண்சுட ருள்ளே

மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே 26 

 

 

ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கில்

மடங்கி அடங்கிடும் வாயு வதனுள்

மடங்கி மடங்கிடு மன்னுயி ருள்ளே

நடங்கொண்ட 1கூத்தனும் நாடுகின் றானே 27 

 

 

நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்

தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு

பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு

மாடி ஒருகை மணிவிளக் கானதே  28 

 

 

அணுமாதி சித்திக ளானவை கூறில்

அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை

இணுகாத வேகார் பரகாய மேவல்

அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே  29 

 

 

எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்

கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்

ஒட்டா நடுநாடி மூலத்த னல்பானு

விட்டான் மதியுண்ண வும்வரு மேலதே  30 

 

 

சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்

புத்திக ளானவை எல்லாம் புலப்படுஞ்

சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை

சத்தி அருள்தரத் தானுள வாகுமே  31 

 

 

 

எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப்

பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்

இட்டம துள்ளே இறுக்கல் பரகாட்சி

எட்டு வரப்பு மிடந்தானின் றெட்டுமே  32 

 

 

மந்தர மேறு மதிபானு வைமாற்றிக்

கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்

தந்தின்றி நற்கா மியலோகஞ் சார்வாகும்

அந்த வுலகம் அணிமாதி யாமே  33 

 

 

முடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டில்

அணிந்த அணிமாகை தானாம் இவனுந்

தணிந்தவப் பஞ்சினுந் தானொய்ய தாகி

மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே  34 

 

 

ஆகின்ற வத்தனி நாயகி தன்னுடன்

போகின்ற தத்துவம் எங்கும் புகல தாய்ச்

சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்

மாய்கின்ற தையாண்டின் மாலகு வாகுமே  35 

 

 

மாலகு வாகிய மாயனைக் கண்டபின்

தானொளி யாகித் தழைத்தங் கிருந்திடும்

பாலொளி யாகிப் பரந்தெங்கு நின்றது

மேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே  36 

 

 

மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்

தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்

கைப்பொரு ளாகக் கலந்திடு மோராண்டின்

மைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே  37 

 

 

ஆகின்ற காலொளி யாவது கண்டபின்

போகின்ற காலங்கள் போவது மில்லையாம்

மேனின்ற காலம் வௌiயுற நின்றன

தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே  38 

 

 

தன்வழி யாகத் தழைத்திடுஞானமுந்

தன்வழி 1யாகத் தழைத்திடும் வையகந்

தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாந்

தன்வழி தன்னரு ளாகிநின் றானே 39

 

 

நின்றன தத்துவ நாயகி தன்னுடன்

கண்டன பூதப் படையவை யெல்லாங்

கொண்டவை யோராண்டு கூட இருந்திடில்

விண்டது வேநல்ல பிராத்தி யதாகுமே 40

 

 

ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்

பாகின்ற பூவிற் பரப்பவை காணலா

மேகின்ற காலம் வெளியுற நின்றது

போகின்ற காலங்கள் போவது மில்லையே  41 

 

 

போவதொன் றில்லை வருவது தானில்லை

சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை

தாமத மில்லை தமரகத் தின்னொளி

யாவது மில்லை யறிந்துகொள் வார்க்கே  42 

 

 

அறிந்த பராசத்தி யுள்ளே அமரில்

பறிந்தது பூதப் படையவை யெல்லாங்

குவிந்தவை யோராண்டு கூட இருக்கில்

விரிந்தது பரகாய மேவலு மாமே 43

 

 

 

ஆன விளக்கொளி யாவ தறிகிலர்

மூல விளக்கொளி முன்னே யுடையவர்

கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு

மேலை விளக்கொளி வீடெளி தாநின்றே  44 

 

 

 

நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்

கண்டன பூதப் படையவை எல்லாங்

கொண்டவை யோராண்டு கூடி யிருந்திடிற்

பண்டையவ் வீசன் தத்துவ மாகுமே  45 

 

 

ஆகின்ற சந்திரன் 1தன்னொளி யாயவன்

ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும்

ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்

ஆகின்ற சந்திரன் தானவ னாமே  46 

 

 

தானே படைத்திட வல்லவ னாயிடுந்

தானே யளித்திட வல்லவ னாயிடுந்

தானே சங்காரத் தலைவனு மாயிடுந்

தானே யிவனெனுந் தன்மைய னாமே  47 

 

 

தன்மைய தாகத் தழைத்த கலையினுள்

பன்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை

வன்மைய தாக மறித்திடில் ஓராண்டின்

மென்மைய தாகிய மெய்பொருள் காணுமே  48 

 

 

 

மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின்

நற்பொரு ளாகிய நல்ல வசித்துவங்

கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெல்லாந்

தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே  49 

 

 

தன்மைய தாகத் தழைத்த பகலவன்

மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்

பொன்மைய தாகப் புலன்களும் போயிட

நன்மைய தாகிய நற்கொடி காணுமே  50 

 

 

நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்

அக்கொடி யாகம் அறிந்திடில் ஓராண்டு

பொற்கொடி யாகிய புவனங்கள் போய்வருங்

கற்கொடி யாகிய காமுக னாமே  51 

 

 

காமரு தத்துவ மானது வந்தபின்

பூமரு கந்தம் புவனம தாயிடும்

மாமரு வுன்னிடை மெய்த்திடு மானனாய்

நாமரு வுமஔ நாயக மானதே  52 

 

 

நாயக மாகிய நல்லொளி கண்டபின்

தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும்

போயக மான புவனங்கள் கண்டபின்

பேயக மாகிய பேரொளி காணுமே  53 

 

 

பேரொளி யாகிய பெரியஅவ் வேட்டையும்

பாரொளி யாகப் பதைப்புறக் கண்டவன்

தாரொளி யாகத் தரணி முழுதுமாம்

ஓரொளி யாகிய காலொளி காணுமே  54 

 

 

காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்

காலது அக்கொடி நாயகி தன்னுடன்

காலது ஐஞ்நூற் றொருபத்து மூன்றையுங்

காலது வேண்டிக் கொண்டஇவ் வாறே  55 

 

 

ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்

ஆறது ஆயிர முந்நூற் றொடைஞ்சுள

ஆறது வாயிர மாகு மருவழி

ஆறது வாக வளர்ப்ப திரண்டே  56 

 

 

இரண்டினின் மேலே சதாசிவ நாயகி

இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்

இரண்டது ஆயிரம் ஐம்பதோ டொன்றாய்த்

திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே  57 

 

 

அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி

அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது

அஞ்சது வன்றி இரண்டது வாயிரம்

அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே  58 

 

 

ஒன்றது வாகிய தத்துவ நாயகி

ஒன்றது கால்கொண் டூர்வகை சொல்லிடில்

ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்

ஒன்றது காலம் எடுத்துளும் முன்னே  59 

 

 

முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்

முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின்

முன்னுறும் ஐம்பத் தொன்றுடன் அஞ்சுமாய்

முன்னுறு வாயு முடிவகை யாமே 60 

 

 

ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்

ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில்

ஆய்வரும் ஐஞ்நூற்று முப்பதொ டொன்பது

மாய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே  61 

 

 

இருநிதி யாகிய எந்தை யிடத்து

இருநிதி வாயு இயங்கு நெறியில்

இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்

இருநிதி வாயு இயங்கும் எழுத்தே  62 

 

 

எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்

எழுகின்ற வாயு இடமது சொல்லில்

எழுநூற் றிருபத் தொன்பா னதுநாலாய்

எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே  63 

 

 

ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும்

ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிட

எட்டது கால்கொண் டிடவகை 1யொத்தபின்

ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே  64 

 

 

சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்

சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச்

சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத்

துந்திச் சமாதி யுடையொளி யோகியே  65 

 

 

அணங்கற்ற மாதல் அருஞ்சன நீவல்

வணங்குற்ற கல்விமா ஞான மிகுத்தல்

சுணங்குற்ற வாயர் சித்திதூரங் கேட்டல்

நுணங்கற் றிரோதல்கால் வேகத்து நுந்தலே  66 

 

 

மரணஞ் சரைவிடல் வண்பர காயம்

இரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல்

அரணன் திருவுற வாதன்மூ வேழாங்

கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே 67

 

 

ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து

பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை

காதலில் அண்ணலைக் காண இனியவர்

நாதன் இருந்த நகரறி வாரே.  68 

 

 

மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்

கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து

சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்

பாலித்த சத்தி பரைபரன் பாதமே  69 

 

 

ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று

மீதான தற்பரை மேவும் பரனொடு

மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி

ஓதா அசிந்தமீ தானந்த யோகமே  70 

 

 

மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித்

துதிசெய் பவரவர் தொல்வா னவர்கள்

விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப்

பதியது காட்டும் பரமன்நின் றானே  71 

 

 

கட்டவல் லார்கள் கரந்தெங்குந் தானாவர்

மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து 

பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு 

2நட்டறி வார்க்கு நமனில்லை தானே 72

 

திருச்சிற்றம்பலம்