பத்தாம்-திருமுறை

3ம் தந்திரம் - 03. நியமம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்

சோதியை ஆங்கே சுடுகின்ற அங்கியைப்

பாதியுள் மன்னும் பரசத்தி யோடுடன்

நீதி 1யுணர்ந்து நியமத்த னாமே.  1 

 

 

தூய்மை 1அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை

வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை

காமங் களவு கொலையெனக் காண்பவை

நேமியீ ரைந்து நியமத்த னாமே.  2 

 

 

தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்

சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி

மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து

நிவம்பல செய்யின் நியமத்த னாமே.  3 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

சண்டேசுர நாயனார்
View Details
இந்திரன் பழிதீர்த்தல்
View Details
கலசப்பாக்கம் மலப்பீடான் சித்தர் (பூண்டிச்சித்தர்)
View Details