பத்தாம்-திருமுறை

2ம் தந்திரம் - 25. பெரியாரைத் துணைக்கோடல்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்

பாடவல் லாரொளி பார்மிசை வாழ்குவன்

தேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும்

கூடவல் லாரடி கூடுவன் யானே.  1 

 

 

தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்

மாமனத்து அங்குஅன்பு வைத்தது இலையாகும்

நீஇடர்ப் பட்டிருந்து என்செய்வாய் நெஞ்சமே

போமிடத் து என்னொடும் போதுகண் டாயே.  2 

 

 

அறிவார் அமரர் தலைவனை நாடிச்

செறிவார் பெறுவர் சிலர்தத்1 துவத்தை

நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்

பெரியார் உடன்கூடல் பேரின்ப மாமே.  3 

 

 

தார்சடை யான்தன் தமராய் உலகினில்

போர் புகழான் எந்தை பொன்னடி சேருவர்

வாயடை யாவுள்ளம் தேர்வார்க்கு அருள்செய்யும்

கோவந்தடைந் து அந்நெறி கூடலு மாமே.  4 

 

 

உடையான் அடியார் அடியா ருடன்போய்

படையார் அழலான் பதிசென்று புக்கே

கடையார நின்றவர் கண்டறி விப்ப

உடையான் வருகென ஓலம் என் றாரே.  5 

 

 

அருமைவல் லான்கலை ஞானத்துள் தோன்றும்

பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்

உரிமைவல் லோன்உணர்ந்து ஊழி இருக்கும்

திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே. 6

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

மானக்கஞ்சாற நாயனார்
View Details
பசுமடத்துக் கோனார்ச் சித்தர்
View Details
திருமூல நாயனார்
View Details