பத்தாம்-திருமுறை

2ம் தந்திரம் - 23. மயேசுர நிந்தை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்

ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்

ஆண்டான் அடியரை வேண்டாது பேசினோர்

தாம்தாம் விழுவது தாழ்நர காகுமே. 1

 

 

ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே

ஞானியை வந்திப் பவனுமே நல்வினை

யான கொடுவினை தீர்வார் அவன்வயம்

போன பொழுதே புகுஞ்சிவ போகமே.  2 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

வேப்பிலைக்கட்டிச் சித்தர்
View Details
ஸ்ரீ சந்தனு பீலி கிருஷ்ண மகானு பாவுலு சித்தர்
View Details
திருமூலர்
View Details