பத்தாம்-திருமுறை

2ம் தந்திரம் - 21. சிவ நிந்தை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே

அளிவுறு வார்அம ராபதி நாடி

எளியனென்று ஈசனை நீசர் இகழில்

கிளியொன்று பூஞையால் கீழது வாகுமே.  1 

 

 

முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்

விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்

அளிந்தமுது ஊறிய ஆதிப் பிரானைத்

தளிந்தவர்ககு அல்லது தாங்கஒண் ணாதே.  2 

 

 

அப்பகை யாலே அசுரரும் தேவரும்

நற்பகை செய்து நடுவே முடிந்தனர்

எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்

பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே.  3 

 

 

போகமும் மாதர் புலவி அதுநினைந்து

ஆகமும் உள்கலந்து அங்குஉள ராதலில்

வேதிய ராயும் விகிர்தனாம் என்கின்ற

நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே.  4

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

கழறிற்றறிவார் நாயனார்
View Details
சப்தகந்தலிங்க சித்தர்
View Details
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
View Details