பத்தாம்-திருமுறை

2ம் தந்திரம் - 16. பாத்திரம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

திலமத் தனையே சிவஞானிக்கு ஈந்தால்

பலமுத்தி சித்தி பரபோக மும்தரும்

நிலமத் தனைபொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்

பலமும்அற் றேபர போகமும் குன்றுமே.  1 

 

 

கண்டிருந் தாருயிர் உண்டிடுங் காலனைக்

கொண்டிருந் தாருயிர் கொள்ளும் குணத்தனை

நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்

சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே.  2 

 

 

கைவிட்டி லேன்கரு வாகிய காலத்து

மெய்விட்டி லேன்விகிர் தன்அடி தேடுவன்

பொய்விட்டு நானே புரிசடை யானடி

நெய்விட் டிலாத விடிஞ்சிலு மாமே.  3 

 

 

ஆவன ஆவ அழிவ அழிவன

போவன போவ புகுவ புகுவன

காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்

ஏவன செய்யும் இளங்கிளை யோனே.  4 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

புகழ்ச் சோழ நாயனார்
View Details
வெள்ளையானை சாபம் தீர்த்தல்
View Details
கல்லானைக்குக் கரும்பு கொடுத்தல்
View Details