பத்தாம்-திருமுறை

2ம் தந்திரம் - 15. மூவகைச்சீவ வர்க்கம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

சத்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கி

ஒத்த இருமாயா கூட்டத் திடைப்பூட்டிச்

சுத்தம தாகுந் துரியம் புரிவித்துச்

சித்தம் புகுந்து சிவமய மாக்குமே.  1 

 

 

விஞ்ஞானர் நால்வரு மெய்ப்பிரள யாகலத்

தஞ்ஞானர் மூவருந் தாங்கு சகலத்தின்

அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்

விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே.  2 

 

 

விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர்

தஞ்ஞானர் அட்டவித் தேசுரஞ் சார்ந்துளோர்

எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்

மெய்ஞ் ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே.  3 

 

 

இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை

இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்

இரண்டாகு நூற்றெட்டு ருத்திரர் என்பர்

முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.  4 

 

 

பெத்தத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது

ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்

மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார்

சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே.  5 

 

 

சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்

அவமாகார் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்

பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்

நவமான தத்துவம் நாடிக்கண் டோரே.  6 

 

 

விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்

தஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்

அஞ்ஞானர் அச்சக லத்தர் அகலராம்

விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே.  7 

 

 

வெஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடியே

தஞ்ஞான கன்மத்தி நால்சுவர் யோனிபுக் 

கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய் 

மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே.  8 

 

 

ஆணவந் துற்ற வவித்தா நனவற்றோர்

காணிய விந்துவா நாத சகலாதி

ஆணவ மாதி யடைந்தோ ரவரன்றே

சேணுயர் சத்தி சிவதத் துவமாமே.  9 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

சேரனுக்கு நிருபம் கொடுத்தல்
View Details
ஆலவாயில் எல்லை வகுத்தல்
View Details
ஸ்ரீ நடன கோபால நாயகி சுவாமிகள்
View Details