பத்தாம்-திருமுறை

2ம் தந்திரம் - 06. சக்கரப்பேறு

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்

கால்போதகங் கையினோ டந்தரச் சக்கர

மேல்போக வெள்ளி மலைஅம ராபதி

பார்போக மேழும் படைத்துடை யானே.  1 

 

 

சக்கரம் பெற்றுநல் தாமோ தரந்தானும்

சக்கரந் தன்னைத் தரிக்கவொண் ணாமையால்

மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்

தக்கநற் சக்தியைத் தாங்கூறு செய்ததே.  2 

 

 

கூறது வாகக் குறித்துநற் சக்கரங்

கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்

கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்

கூறது செய்து தரித்தனன் கோலமே. 3 

 

 

தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்

தக்கன்றன் வேள்வியில் தாமோ தரன்தானுஞ்

சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட

அக்கி உமிழ்ந்தது வாயுக் கிரத்திலே.  4 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

பாம்பாட்டிச் சித்தர்
View Details
கலிய நாயனார்
View Details
ஸ்ரீ நடன கோபால நாயகி சுவாமிகள்
View Details