பத்தாம்-திருமுறை

2ம் தந்திரம் - 01. அகத்தியம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து

கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்

நடுவுள அங்கி அகத்திய நீபோய்

முடுகிய வையத்து முன்னிரென் றானே.  1 

 

 

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்

அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு

மங்கி உதய வடபால் தவமுனி

எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே.  2 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

பாண்டியனுக்காக தண்ணீர் பந்தல் அமைத்தல்
View Details
புலிப்பாணி சித்தர்
View Details
பெருமிழலைக் குறும்ப நாயனார்
View Details