பத்தாம்-திருமுறை

1ம் தந்திரம் - 14. வானச் சிறப்பு

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

அமுதூறு மாமழை நீரத னாலே

அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்

கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை

அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே.  1 

 

 

வரையிடை நின்றிழி வான்நீர் அருவி

உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்

நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்க்

கரையில்லை எந்தை கழுமணி யாறே.  2 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

பெருமிழலைக் குறும்ப நாயனார்
View Details
உரோம முனி சித்தர்
View Details
அதிபத்த நாயனார்
View Details