பத்தாம்-திருமுறை

01 பாயிரம் - 07. திருமந்திரத் தொகைச் சிறப்பு

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்

ஞாலம் அறியவே நந்தி அருளது

காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்

ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே.  1 

 

 

வைத்த பரிசே வகைவகை நன்னூலின்

முத்தி முடிவிது மூவா யிரத்திலே

புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது

வைத்த சிறப்புத் தருமிவை தானே.  2 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

படையுடன் சோழனை மடுவில் வீழ்த்தல்
View Details
பொன் முத்திரையர் (ஸ்ரீ ஸ்வர்ண பைரவர்)
View Details
தடாதகைப் பிராட்டியாரின் பிறப்பு
View Details