ஒன்பதாம்-திருமுறை-திருவிசைப்பா

025 கோல மலர்நெடுங்கண்

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

கோல மலர்நெடுங்கண் கொவ்வை 

  வாய்க்கொடி ஏரிடையீர்

பாலினை இன்னமுதைப் 

  பரமாய பரஞ்சுடரைச்

சேலுக ளும்வயல்சூழ் தில்லை 

  மாநகர்ச் சிற்றம்பலத்(து)

ஏலவுடை எம்இறையை 

  என்றுகொல் காண்பதுவே.  1 

 

 

காண்பதி யான் என்றுகொல் 

  கதிர்மாமணி யைக்கனலை

ஆண்பெண் அருவுருவென்(று) 

  அறிதற்கு அரி தாயவனைச்

சேண்பணை மாளிகைசூழ் 

  தில்லைமாநகர்ச் சிற்றம்பலம்

மாண்புடை மாநடஞ்செய் மறையோன் 

  மலர்ப் பாதங்களே.  2 

 

 

கள்ளவிழ் தாமரைமேல் 

  கண்டயனொடு மால்பணிய

ஒள்ளெரி யின்நடுவே உருவாய்ப்பரந் 

  தோங்கிய சீர்த்

தெள்ளிய தண்பொழில்சூழ் 

  தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்

துள்ளெரி யாடுகின்ற 

  ஒருவனை உணர்வரிதே.  3 

 

 

அரிவையோர் கூறுகந்தான் அழகன் 

  எழில் மால்கரியின்

உரிவைநல் உத்தரியம் 

  உகந்தானும் பரார்தம்பிரான்

புரிபவர்க்(கு) இன்னருள்செய் 

  புலியூர்த்திருச் சிற்றம்பலத்(து)

எரிமகிழ்ந் தாடுகின்ற 

  எம்பிரான்என் இறையவனே.  4 

 

 

இறைவனை என்கதியை 

  என்னுள்ளே உயிர்ப்பாகி நின்ற

மறைவனை மண்ணும் விண்ணும் 

  மலிவான் சுடராய் மலிந்த

சிறையணி வண்டறையும் தில்லை 

  மாநகர்ச் சிற்றம்பலம்

நிறையணி யாம் இறையை 

  நினைத்தேன் இனிப் போக்குவனே.  5 

 

 

நினைத்தேன் இனிப்போக்குவனோ நிமலத் 

  திரளை நினைப்பார்

மனத்தி னுளேயிருந்த 

  மணியைமணி மாணிக்கத்தைக்

கனைத்திழி யுங்கழனிக் 

  கனகங்கதிர் ஒண்பவளம்

சினத்தோடு வந்தெறியும் 

  தில்லைமாநகர்க் கூத்தனையே.  6 

 

 

கூத்தனை வானவர்தம் கொழுந்தைக் 

  கொழுந்தாய் எழுந்த

மூத்தனை மூவுருவின் 

  முதலைமுத லாகிநின்ற

ஆத்தனைத் தான்படுக்கும் அந்தணர் 

  தில்லை அம்பலத்துள்

ஏத்தநின் றாடுகின்ற 

  எம்பிரானடி சேர்வன்கொலோ  7 

 

 

சேர்வன்கொலோ அன்னைமீர் 

  திகழும்மலர்ப் பாதங்களை

ஆர்வங்கொளத் தழுவி அணிநீ(று) 

  என் முலைக்கணியச்

சீர்வங்கம் வந்தணவும் 

  தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து)

ஏர்வங்கை மான்மறியன் எம்பிரான் 

  என்பால் நேசனையே.  8 

 

 

நேசமு டையவர்கள் நெஞ்சுளே 

  யிடங்கொண் டிருந்த

காய்சின மால்விடையூர் 

  கண்ணுதலைக் காமருசீர்த்

தேசமிகு புகழோர் 

  தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து)

ஈசனை எவ்வுயிர்க்கும் 

  எம்மிறைவன்என்(று) ஏத்துவனே.  9 

 

 

இறைவனை ஏத்துகின்ற 

  இளையாள்மொழி இன்றமிழால்

மறைவல நாவலர்கள் 

  மகிழ்ந்தேத்து சிற்றம்பலத்தை

அறைசெந்நெல் வான்கரும்பின் 

  அணியாலைகள் சூழ்மயிலை

மறைவல ஆலிசொல்லை 

  மகிழ்ந்தேத்துக வானெளிதே.  10 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

ஏனாதிநாத நாயனார்
View Details
இடங்கழி நாயனார்
View Details
கரிக்குருவிக்கு உபதேசம் செய்தல்
View Details