அ௫ளியவர் : மாணிக்கவாசகர்
திருமுறை : எட்டாம் திருமுறை
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
திருச்சிற்றம்பலம்
மின்னார் உருவம் மேல்விளங்க
வெண்கொடி மாளி கைசூழப்
பொன்னார் குன்றம் ஒன்று வந்து
நின்றது போலும் என்னாத்
தென்னா என்று வண்டு பாடும்
தென்தில்லை அம்ப லத்துள்
என்னார் அமுதை எங்கள்
கோவை என்றுகொல் எய்துவதே 1
ஓவா முத்தீ அஞ்சு வேள்வி
ஆறங்க நான்மறையோர்
ஆவே படுப்பார் அந்த ணாளர்
ஆகுதி வேட்டுயர் வார்
மூவா யிரவர் தங்க ளோடு
முன் அரங்(கு) ஏறிநின்ற
கோவே உன்றன் கூத்துக் காணக்
கூடுவ தென்று கொலோ 2
முத்தீ யாளர் நான் மறையர்
மூவா யிர வர்நின்னோ(டு)
ஒத்தே வாழும் தன்மை யாளர்
ஓதிய நான்மறையைத்
தெத்தே யென்று வண்டு பாடும்
தென்தில்லை அம்பலத்துள்
அத்தா உன்றன் ஆடல் காண
அணைவதும் என்றுகொலோ 3
மானைப் புரையும் மடமென்
நோக்கி மாமலை யாளோடும்
ஆனைஞ் சாடும் சென்னி
மேலோர் அம்புலி சூடும்அரன்
தேனைப் பாலைத் தில்லை
மல்கு செம்பொனின் அம்பலத்துக்
கோனை ஞானக் கொழுந்து
தன்னைக் கூடுவது என்றுகொலோ 4
களிவான் உலகில் கங்கை
நங்கை காதலனே ! அருளென்(று)
ஒளிமால் முன்னே வரங்கி
டக்க உன்னடியார்க்(கு) அருளும்
தெளிவார் அமுதே ! தில்லை
மல்கு செம்பொனின் அம்பலத்துள்
ஒளிவான் சுடரே ! உன்னை
நாயேன் உறுவதும் என்றுகொலோ 5
பாரோர் முழுதும் வந்தி
றைஞ்சப் பதஞ்சலிக்(கு) ஆட்டுகந்தான்
வாரார் முலையாள் மங்கை
பங்கன் மாமறையோர் வணங்கச்
சீரான் மல்கு தில்லைச்
செம்பொன் அம்பலத்(து) ஆடுகின்ற
காரார் மிடற்றெங் கண்டனாரைக்
காண்பதும் என்றுகொலோ 6
இலையார் கதிர்வேல் இலங்கைவேந்தன்
இருபது தோளும்இற
மலைதான் எடுத்த மற்றவற்கு
வாளொடு நாள்கொடுத்தான்
சிலையால் புரமூன்(று) எய்த
வில்லி செம்பொனின் அம்பலத்துக்
கலையார் மறிபொன் கையி
னானைக் காண்பதும் என்றுகொலோ 7
வெங்கோல் வேந்தன் தென்னன்
நாடும் ஈழமும் கொண்டதிறல்
செங்கோற் சோழன் கோழி
வேந்தன் செம்பியன் பொன்னணிந்த
அங்கோல் வளையார் பாடி
யாடும் அணிதில்லை அம்பலத்துள்
எங்கோன் ஈசன் எம்மி
றையை என்றுகொல் எய்துவதே. 8
நெடியா னோடு நான்
முகனும் வானவரும் நெருங்கி
முடியான் முடிகள் மோதி
உக்க முழுமணி யின்திரளை
அடியார் அலகி னால்தி
ரட்டும் அணிதில்லை அம்பலத்துக்
கடியார் கொன்றை மாலை
யானைக் காண்பதும் என்றுகொலோ 9
சீரான் மல்கு தில்லைச்
செம்பொன் அம்பலத் தாடிதன்னைக்
காரார் சோலைக் கோழி
வேந்தன் தஞ்சையர் கோன்கலந்த
ஆரா இன்சொற் கண்டரா
தித்தன் அருந்தமிழ் மாலை வல்லார்
பேரா வுலகிற் பெருமை
யோடும் பேரின்பம் எய்துவரே. 10
திருச்சிற்றம்பலம்