எட்டாம்-திருமுறை-திருக்கோவையார்

021 காவற்பிரிவு

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள்

வீப்பான் வியன்தில்லை யானரு ளால்விரி நீருலகங்

காப்பான் பிரியக் கருதுகின் றார்நமர் கார்க்கயற்கட்

பூப்பால் நலமொளி ரும்புரி தாழ்குழற் பூங்கொடியே. 1

 

 

சிறுகட் பெருங்கைத்திண் கோட்டுக் குழைசெவிச் செம்முகமாத்

தெறுகட் டழியமுன் னுய்யச்செய் தோர்கருப் புச்சிலையோன்

உறுகட் டழலுடை யோனுறை யம்பலம் உன்னலரின்

துறுகட் புரிகுழ லாயிது வோவின்று சூழ்கின்றதே.  2

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
View Details
வட ஆலவாய் தோன்றல்
View Details
ஸ்ரீ பெருமானந்த சித்த சுவாமிகள்
View Details