எட்டாம்-திருமுறை-திருக்கோவையார்

011 குறைநயப்புக் கூறல்

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

தாதேய் மலர்க்குஞ்சி யஞ்சிறை வண்டுதண் டேன்பருகித்

தேதே யெனுந்தில்லை யோன்சே யெனச்சின வேலொருவர்

மாதே புனத்திடை வாளா வருவர்வந் தியாதுஞ்சொல்லார்

யாதே செயத்தக் கதுமது வார்குழ லேந்திழையே.  1

 

 

வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம் மிக்கென்ன மாயங்கொலோ

எரிசேர் தளிரன்ன மேனியன் ஈர்ந்தழை யன்புலியூர்ப்

புரிசேர் சடையோன் புதல்வன்கொல் பூங்கணை வேள்கொலென்னத்

தெரியே முரையான் பிரியா னொருவனித் தேம்புனமே. 2

 

 

நீகண்ட னையெனின் வாழலை நேரிழை யம்பலத்தான்

சேய்கண் டனையன்சென் றாங்கோ ரலவன்தன் சீர்ப்பெடையின்

வாய்வண் டனையதொர் நாவற்கனிநனி நல்கக்கண்டு

பேய்கண் டனையதொன்றாகிநின் றானப் பெருந்தகையே.  3

 

 

சங்கந் தருமுத்தி யாம்பெற வான்கழி தான்கெழுமிப்

பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகழிப் பாறுலவு

துங்க மலிதலை யேந்தலி னேந்திழை தொல்லைப்பன்மா

வங்கம் மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே.  4

 

 

புரங்கடந் தானடி காண்பான் புவிவிண்டு புக்கறியா

திரங்கிடெந் தாயென்றிரப்பத்தன் னீரடிக் கென்னிரண்டு

கரங்கடந் தானொன்று காட்டமற் றாங்கதுங் காட்டிடென்று

வரங்கிடந் தான்தில்லை யம்பல முன்றிலம் மாயவனே.  5

 

 

உள்ளப்படுவன வுள்ளி யுரைத்தக் கவர்க்குரைத்து

மெள்ளப் படிறு துணிதுணி யேலிது வேண்டுவல்யான்

கள்ளப் படிறர்க் கருளா அரன்தில்லை காணலர்போல்

கொள்ளப்படாது மறப்ப தறிவிலென் கூற்றுக்களே. 6

 

 

மேவியந் தோலுடுக் குந்தில்லை யான்பொடி மெய்யிற்கையில்

ஓவியந் தோன்றுங் கிழிநின் னெழினென் றுரையுளதால்

தூவியந் தோகையன் னாயென்ன பாவஞ்சொல் லாடல்செய்யான்

பாவியந் தோபனை மாமட லேறக்கொல் பாவித்ததே. 7

 

 

பொன்னார் சடையோன் புலியூர் புகழா ரெனப்புரிநோய்

என்னா லறிவில்லை யானொன் றுரைக்கிலன் வந்தயலார்

சொன்னா ரெனுமித் துரிசுதுன் னாமைத் துணைமனனே

என்னாழ் துயர்வல்லை யேற்சொல்லுநீர்மை இனியவர்க்கே.  8

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

பூசலார் நாயனார்
View Details
அமர்நீதி நாயனார்
View Details
ஸ்ரீ நடன கோபால நாயகி சுவாமிகள்
View Details