எட்டாம்-திருமுறை-திருக்கோவையார்

008 நாணநாட்டம்

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

மைவார் கருங்கண்ணி செங்கரங் கூப்பு மறந்துமற்றப்

பொய்வா னவரிற் புகாதுதன் பொற்கழற் கேயடியேன்

உய்வான் புகவொளிர் தில்லைநின் றோன்சடை மேலதொத்துச்

செவ்வா னடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறுபிறைக்கே.   1

 

அக்கின்ற வாமணி சேர்கண்டன் அம்பல வன்மலயத்

திக்குன்ற வாணர் கொழுந்திச் செழுந்தண் புனமுடையாள்

அக்குன்ற வாறமர்ந் தாடச்சென் றாளங்க மவ்வவையே

ஒக்கின்ற வாரணங் கேயிணங் காகு முனக்கவளே.  2

 

செந்நிற மேனிவெண்ணீறணி வோன்தில்லை யம்பலம்போல்

அந்நிற மேனிநின் கொங்கையி லங்கழி குங்குமமும்

மைந்நிற வார்குழல் மாலையும் தாதும் வளாய்மதஞ்சேர்

இந்நிற மும்பெறின் யானுங் குடைவ னிருஞ்சுனையே. 3

 

பருங்கண் கவர்கொலை வேழப் படையோன் படப்படர்தீத்

தருங்கண் ணுதற்றில்லை யம்பலத் தோன்தடமால்வரை வாய்க்

கருங்கண் சிவப்பக் கனிவாய் விளர்ப்பகண் ணாரளிபின்

வருங்கண் மலைமலர் சூட்டவற் றோமற்றவ் வான்சுனையே.   4

  

காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர்

ஆகத்து ளோருயிர் கண்டனம் யாமின்றி யாவையுமாம்

ஏகத்தொருவ னிரும்பொழி லம்பல வன்மலையில்

தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய் வருமின்பத் துன்பங்களே.  5

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

திருவாதவூரருக்கு உபதேசித்தல்
View Details
பொற்கிழி அளித்தல்
View Details
கரிக்குருவிக்கு உபதேசம் செய்தல்
View Details