எட்டாம்-திருமுறை-திருக்கோவையார்

007 குறையுறவுணர்தல்

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

மடுக்கோ கடலின் விடுதி மிலன்றி மறிதிரைமீன்

படுக்கோ பணிலம் பலகுளிக் கோபரன் தில்லைமுன்றிற்

கொடுக்கோ வளைமற்று நும்மையர்க் காயகுற் றேவல்செய்கோ

தொடுக்கோ பணியீ ரணியீர் மலர்நுஞ் சுரிகுழற்கே.  1

 

அளியமன் னும்மொன் றுடைத்தண்ண லெண்ணரன் தில்லையன்னாள்

கிளியைமன் னுங்கடி யச்செல்ல நிற்பிற் கிளரளகத்

தளியமர்ந் தேறின் வறிதே யிருப்பிற் பளிங்கடுத்த

ஒளியமர்ந் தாங்கொன்று போன்றொன்று தோன்று மொளிமுகத்தே.2

 

பிழைகொண் டொருவிக் கெடாதன்பு செய்யிற் பிறவியென்னும்

முழைகொண் டொருவன்செல் லாமைநின் றம்பலத் தாடுமுன்னோன்

உழைகொண் டொருங்கிரு நோக்கம் பயின்றஎம் மொண்ணுதல்மாந்

தழைகொண் டொருவனென்னாமுன்ன முள்ளந் தழைத்திடுமே. 3

 

மெய்யே யிவற்கில்லை வேட்டையின் மேன்மன மீட்டிவளும்

பொய்யே புனத்தினை காப்ப திறைபுலி யூரனையாள்

மையேர் குவளைக்கண் வண்டினம் வாழுஞ்செந் தாமரைவாய் 

எய்யே மெனினுங் குடைந்தின்பத் தேனுண் டெழிறருமே.  4  

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

மதுரை நகர் அமைத்தல்
View Details
வளையல் விற்றல்
View Details
அப்பூதியடிகள்
View Details