எட்டாம்-திருமுறை-திருக்கோவையார்

005 இருவரு முள்வழி அவன் வரவுணர்தல்

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

பல்லில னாகப் பகலைவென் றோன்தில்லை பாடலர்போல்

எல்லிலன் நாகத்தொ டேனம் வினாயவன் யாவன்கொலாம்

வில்லிலன் நாகத் தழைகையில் வேட்டைகொண் டாட்டமெய்யோர்

சொல்லில னாகற்ற வாகட வானிச் சுனைப்புனமே. 1

 

ஆழமன் னோவுடைத் திவ்வையர் வார்த்தை யனங்கன்நைந்து

வீழமுன் னோக்கிய வம்பலத் தான்வெற்பி னிப்புனத்தே

வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற வாய்ப்பின்னும் மென்றழையாய்

மாழைமென் னோக்கி யிடையாய்க் கழிந்தது வந்துவந்தே.  2

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

சித்தர் சாங்கதேவர்
View Details
கலசப்பாக்கம் மலப்பீடான் சித்தர் (பூண்டிச்சித்தர்)
View Details
சிறப்புலி நாயனார்
View Details