ஆறாம்-திருமுறை

072 அலையார் புனற்கங்கை

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஆறாம் திருமுறை

  தலம் : வலஞ்சுழி

திருச்சிற்றம்பலம்

 

அலையார் புனற்கங்கை நங்கை காண

அம்பலத்தில் அருநட்ட மாடி வேடந்

தொலையாத வென்றியார் நின்றி யூரும்

நெடுங்களமும் மேவிவிடை யைமேற் கொண்டு

இலையார் படைகையி லேந்தி யெங்கும்

இமையவரும் உமையவளும் இறைஞ்சி யேத்த

மலையார் திரளருவிப் பொன்னி சூழ்ந்த

வலஞ்சுழியே புக்கிடமா மருவி னாரே.  1 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

திருவல்லம் பாம்பணையான் சித்தர்
View Details
சங்கப் பலகையளித்தல்
View Details
சத்தி நாயனார்
View Details