ஐந்தாம்-திருமுறை

085 மட்டு வார்குழ லாளொடு

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : சிராப்பள்ளி

திருச்சிற்றம்பலம்

 

மட்டு வார்குழ

  லாளொடு மால்விடை

இட்ட மாவுகந்

  தேறும் இறைவனார்

கட்டு நீத்தவர்க்

  கின்னரு ளேசெயுஞ்

சிட்டர் போலுஞ்

  சிராப்பள்ளிச் செல்வரே.  1 

 

 

அரிய யன்றலை

  வெட்டிவட் டாடினார்

அரிய யன்றொழு

  தேத்தும் அரும்பொருள்

பெரிய வன்சிராப்

  பள்ளியைப் பேணுவார்

அரிய யன்றொழ

  அங்கிருப் பார்களே.  2 

 

 

அரிச்சி ராப்பகல்

  ஐவரா லாட்டுண்டு

சுரிச்சி ராதுநெஞ்

  சேயொன்று சொல்லக்கேள்

திருச்சி ராப்பள்ளி

  யென்றலுந் தீவினை

நரிச்சி ராது

  நடக்கும் நடக்குமே.  3 

 

 

தாயு மாயெனக்

  கேதலை கண்ணுமாய்ப்

பேய னேனையும்

  ஆண்ட பெருந்தகை

தேய நாதன்

  சிராப்பள்ளி மேவிய

நாய னாரென

  நம்வினை நாசமே.  4 

 

 

இப்பதிகத்தில் 5-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  5 

 

 

இப்பதிகத்தில் 6-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  6 

 

 

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  7 

 

 

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  8 

 

 

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  9 

 

 

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 10

 

திருச்சிற்றம்பலம்