நான்காம்-திருமுறை

105 தன்னைச் சரணென்று

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : புகலூர்

திருச்சிற்றம்பலம்

 

தன்னைச் சரணென்று தாளடைந் 

  தேன்றன் அடியடையப்

புன்னைப் பொழிற்புக லூரண்ணல் 

  செய்வன கேண்மின்களோ

என்னைப் பிறப்பறுத் தென்வினை 

  கட்டறுத் தேழ்நரகத்

தென்னைக் கிடக்கலொட் டான்சிவ 

  லோகத் திருத்திடுமே.  1 

 

 

பொன்னை வகுத்தன்ன மேனிய 

  னேபுணர் மென்முலையாள்

தன்னை வகுத்தன்ன பாகத்தனே 

  தமியேற் கிரங்காய்

புன்னை மலர்த்தலை வண்டுறங் 

  கும்புக லூரரசே

என்னை வகுத்திலை யேலிடும் 

  பைக்கிடம் யாதுசொல்லே.  2 

 

 

இப்பதிகத்தில் 3-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  3 

 

 

பொன்னள வார்சடைக் கொன்றையி 

  னாய்புக லூரரசே

மன்னுள தேவர்கள் தேடு 

  மருந்தே வலஞ்சுழியாய்

என்னள வேயுனக் காட்பட் 

  டிடைக்கலத் தேகிடப்பார்

உன்னள வேயெனக் கொன்றுமி 

  ரங்காத உத்தமனே.  4 

 

 

இப்பதிகத்தில் 5-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.  5 

 

 

இப்பதிகத்தில் 6-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.  6 

 

 

இப்பதிகத்தில் 7-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.  7 

 

 

இப்பதிகத்தில் 8-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.  8 

 

 

இப்பதிகத்தில் 9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.  9 

 

 

ஓணப் பிரானும் ஒளிர்மா 

  மலர்மிசை உத்தமனுங்

காணப் பராவியுங் காண்கின் 

  றிலர்கர நாலைந்துடைத்

தோணற் பிரானை வலிதொலைத் 

  தோன்தொல்லை நீர்ப்புகலூர்க்

கோணப் பிரானைக் குறுகக் 

  குறுகா கொடுவினையே.  10 

 

திருச்சிற்றம்பலம்