நான்காம்-திருமுறை

021 முத்து விதான

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : ஆரூர்

திருச்சிற்றம்பலம்

 

முத்து விதான மணிப்பொற்

  கவரி முறையாலே

பத்தர்க ளோடு பாவையர்

  சூழப் பலிப்பின்னே

வித்தகக் கோல வெண்டலை

  மாலை விரதிகள்

அத்தன் ஆரூர் ஆதிரை

  நாளால் அதுவண்ணம்.  1 

 

 

நணியார் சேயார் நல்லார்

  தீயார் நாடோ றும்

பிணிதான் தீரும் என்று

  பிறங்கிக் கிடப்பாரும்

மணியே பொன்னே மைந்தா

  மணாளா என்பார்கட்

கணியான் ஆரூர் ஆதிரை

  நாளால் அதுவண்ணம்.  2 

 

 

வீதிகள் தோறும் வெண்கொடி

  யோடுவி தானங்கள் 

சோதிகள் விட்டுச் சுடர்மா

  மணிகள் ஒளிதோன்றச்

சாதிக ளாய பவளமு

  முத்துத் தாமங்கள்

ஆதி ஆரூர் ஆதிரை

  நாளால் அதுவண்ணம்.  3 

 

 

குணங்கள் பேசிக் கூடிப்

  பாடித் தொண்டர்கள்

பிணங்கித் தம்மிற் பித்தரைப்

  போலப் பிதற்றுவார்

வணங்கி நின்று வானவர்

  வந்து வைகலும்

அணங்கன் ஆரூர் ஆதிரை

  நாளால் அதுவண்ணம்.  4 

 

 

நிலவெண் சங்கும் பறையும்

  ஆர்ப்ப நிற்கில்லாப்

பலரு மிட்ட கல்ல

  வடங்கள் பரந்தெங்குங்

கலவ மஞ்ஞை காரென்

  றெண்ணிக் களித்துவந்

தலம ராரூர் ஆதிரை

  நாளால் அதுவண்ணம்.  5 

 

 

விம்மா வெருவா விழியாத்

  தெழியா வெருட்டுவார்

தம்மாண் பிலராய்த் தரியார்

  தலையான் முட்டுவார்

எம்மான் ஈசன் எந்தை

  எனப்பன் என்பார்கட்

கம்மான் ஆரூர் ஆதிரை

  நாளால் அதுவண்ணம்.  6 

 

 

செந்துவர் வாயார் செல்வன

  சேவடி சிந்திப்பார்

மைந்தர்க ளோடு மங்கையர்

  கூடிம யங்குவார்

இந்திர னாதி வானவர்

  சித்தர் எடுத்தேத்தும்

அந்திரன் ஆரூர் ஆதிரை

  நாளால் அதுவண்ணம்.  7 

 

 

முடிகள் வணங்கி மூவா

  தார்கண் முன்செல்ல

வடிகொள் வேய்த்தோள் வான்அர

  மங்கையர் பின்செல்லப்

பொடிகள் பூசிப் பாடுந்

  தொண்டர் புடைசூழ

அடிகள் ஆரூர் ஆதிரை

  நாளால் அதுவண்ணம்.  8 

 

 

துன்பம் நும்மைத் தொழாத

  நாள்கள் என்பாரும்

இன்பம் நும்மை யேத்து

  நாள்கள் என்பாரும்

நும்பின் எம்மை நுழையப்

  பணியே என்பாரும்

அன்பன் ஆரூர் ஆதிரை

  நாளால் அதுவண்ணம்.  9 

 

 

பாரூர் பௌவத் தானைப்

  பத்தர் பணிந்தேத்தச்

சீரூர் பாடல் ஆடல்

  அறாத செம்மாப்பார்ந்

தோரூர் ஒழியா துலகம்

  எங்கும் எடுத்தேத்தும்

ஆரூ ரன்றன் ஆதிரை

  நாளால் அதுவண்ணம். 10

 

திருச்சிற்றம்பலம்