மூன்றாம்-திருமுறை

099 முரசதிர்ந் தெழுதரு

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : மூன்றாம் திருமுறை

  தலம் : முதுகுன்றம்

திருச்சிற்றம்பலம்

 

முரசதிர்ந் தெழுதரு முதுகுன்ற மேவிய

  பரசமர் படையுடை யீரே

பரசமர் படையுடை யீருமைப் பரவுவார்

  அரசர்கள் உலகில்ஆ வாரே.  1 

 

 

மொய்குழ லாளொடு முதுகுன்ற மேவிய

  பையர வம்மசைத் தீரே

பையர வம்மசைத் தீருமைப் பாடுவார்

  நைவிலர் நாடொறும் நலமே.  2 

 

 

முழவமர் பொழிலணி முதுகுன்ற மேவிய

  மழவிடை யதுவுடை யீரே

மழவிடை யதுவுடை யீருமை வாழ்த்துவார்

  பழியொடு பகையிலர் தாமே.  3 

 

 

முருகமர் பொழிலணி முதுகுன்ற மேவிய

  உருவமர் சடைமுடி யீரே

உருவமர் சடைமுடி யீருமை யோதுவார்

  திருவொடு தேசினர் தாமே.  4 

 

 

இப்பதிகத்தில் 5ம் செய்யுள் மறைந்து போயின.  5 

 

 

இப்பதிகத்தில் 6ம் செய்யுள் மறைந்து போயின.  6 

 

 

இப்பதிகத்தில் 7ம் செய்யுள் மறைந்து போயின.  7 

 

 

முத்தி தருமுயர் முதுகுன்ற மேவிய

  பத்து முடியடர்த் தீரே

பத்து முடியடர்த் தீருமைப் பாடுவார்

  சித்தநல் லவ்வடி யாரே.  8 

 

 

முயன்றவர் அருள்பெறு முதுகுன்ற மேவியன்

  றியன்றவ ரறிவரி யீரே

இயன்றவ ரறிவரி யீருமை யேத்துவார்

  பயன்றலை நிற்பவர் தாமே.  9 

 

 

மொட்டலர் பொழிலணி முதுகுன்ற மேவிய

  கட்டமண் தேரைக்காய்ந் தீரே

கட்டமண் தேரைக்காய்ந் தீருமைக் கருதுவார்

  சிட்டர்கள் சீர்பெறு வாரே.  10 

 

 

மூடிய சோலைசூழ் முதுகுன்றத் தீசனை

  நாடிய ஞானசம் பந்தன்

நாடிய ஞானசம் பந்தன செந்தமிழ்

  பாடிய அவர்பழி யிலரே. 11

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

சிறுத்தொண்ட நாயனார்
View Details
மாயப்பசு வதம்
View Details
ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்
View Details