பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

055 காரிநாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

மறையாளர் திருக்கடவூர் வந்து 

  உதித்து வண் தமிழின்

துறை ஆன பயன் தெரிந்து 

  சொல் விளங்கிப் பொருள் மறையக்

குறையாத தமிழ்க் கோவை தம் 

  பெயரால் குலவும் வகை

முறையாலே தொகுத்து அமைத்து 

  மூவேந்தர் பால் பயில்வார்.  1 

 

 

அங்கு அவர் தாம் மகிழும் 

  வகை அடுத்தவுரை நயம் ஆக்கி

கொங்கலர்தார் மன்னவர் பால் பெற்ற 

  நிதிக் குவை கொண்டு

வெம் கண் அராவொடு கிடந்து 

  விளங்கும் இளம் பிறைச் சென்னிச்

சங்கரனார் இனிது அமரும் 

  தானங்கள் பல சமைத்தார்.  2 

 

 

யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப 

  மொழிப் பயன் இயம்பித்

தேவர்க்கு முதல்தேவர் சீர் 

  அடியார் எல்லார்க்கும்

மேவுற்ற இருநிதியம் மிக 

  அளித்து விடையவர்தம்

காவுற்ற திருக்கயிலை 

  மறவாத கருத்தினராய்.  3 

 

 

ஏய்ந்த கடல் சூழ் உலகில் 

  எங்கும் தம் இசை நிறுத்தி

ஆய்ந்த உணர்விடை அறா 

  அன்பினராய் அணி கங்கை

தோய்ந்த நெடும் சடையார்தம் 

  அருள் பெற்ற தொடர்பினால்

வாய்ந்த மனம் போலும் உடம்பும் 

  வடகயிலை மலை சேர்ந்தார்.  4 

 

 

வேரியார் மலர்க் கொன்றை 

  வேணியார் அடிபேணும்

காரியார் கழல் வணங்கி 

  அவர் அளித்த கருணையினால்

வாரியார் மதயானை வழுதியர் 

  தம் மதி மரபில்

சீரியார் நெடுமாறர் 

  திருத்தொண்டு செப்புவாம்.  5 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

சோமசுந்திரர்
View Details
வைகையாற்று வெள்ளம்
View Details
குறையாத அரிசி மூட்டை அளித்தல்
View Details