பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

053 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

வைய நிகழ் பல்லவர் 

  தம் குலமரபின் வழித்தோன்றி

வெய்ய கலியும் பகையும் மிகை 

  ஒழியும் வகை அடக்கிச்

செய்ய சடையார் சைவத் திரு 

  நெறியால் அரசு அளிப்பார்

ஐயடிகள் நீதியால் 

  அடிப்படுத்தும் செங்கோலார்.  1 

 

 

திருமலியும் புகழ் விளங்கச் 

  சேணிலத்தில் எவ்வுயிரும்

பெருமையுடன் இனிது அமரப் 

  பிற புலங்கள் அடிப்படுத்துப்

தருமநெறி தழைத்து ஓங்கத் 

  தாரணிமேல் சைவமுடன்

அருமறையின் துறை விளங்க 

  அரசு அளிக்கும் அந்நாளில்.  2 

 

 

மன்னவரும் பணி செய்ய 

  வடநூல் தென்தமிழ் முதலாம்

பன்னு கலைப் பணிசெய்யப் 

  பார் அளிப்பார் அரசாட்சி

இன்னல் என இகழ்ந்து அதனை 

  எழில் குமரன் மேல் இழிச்சி

நன்மை நெறித் திருத்தொண்டு 

  நயந்து அளிப்பார் ஆயினார்.  3 

 

 

தொண்டுரிமை புரக்கின்றார் சூழ்வேலை 

  உலகின் கண்

அண்டர் பிரான் அமர்ந்து 

  அருளும் ஆலயங்களான எலாம்

கண்டிறைஞ்சித் திருத்தொண்டின் கடன் 

  ஏற்ற பணி செய்த

வண் தமிழின் மொழி 

  வெண்பா ஓரொன்றா வழுத்துவார்.  4 

 

 

பெருத்தெழு காதலில் வணங்கிப் 

  பெரும்பற்றத் தண்புலியூர்த்

திருச்சிற்றம் பலத்து ஆடல் 

  புரிந்து அருளும் செய்ய சடை

நிருத்தனார் திருக்கூத்து நேர்ந்து 

  இறைஞ்சி நெடுந்தகையார்

விருப்பின் உடன் செந்தமிழின் வெண்பா 

  மென் மலர் புனைந்தார்.  5 

 

 

அவ்வகையால் அருள் பெற்று அங்கு 

  அமர்ந்து சில நாள் வைகி

இவ்வுலகில் தம் பெருமான் 

  கோயில்கள் எல்லாம் எய்திச்

செவ்விய அன்பொடு பணிந்து 

  திருப்பணி ஏற்றன செய்தே

எவ்வுலகும் புகழ்ந்து ஏத்தும் 

  இன்தமிழ் வெண்பா மொழிந்தார்.  6 

 

 

இந்நெறியால் அரன் அடியார் 

  இன்பமுற இசைந்த பணி

பன்னெடு நாள் ஆற்றியபின் 

  பரமர் திருவடி நிழல் கீழ்

மன்னு சிவலோகத்து வழி 

  அன்பர் மருங்கு அணைந்தார்

கன்னிமதில் சூழ் காஞ்சிக் 

  காடவரை யடிகளார்.  7 

 

 

பையரவ மணியாரம் 

  அணிந்தார்க்குப் பாவணிந்த

ஐயடிகள் காடவனார் அடி 

  இணைத்தாமரை வணங்கிக்

கையணிமான் மழு உடையார் கழல் 

  பணி சிந்தனை உடைய

செய்தவத்துக் கணம் புல்லர் 

  திருத்தொண்டு விரித்து உரைப்பாம்.  8 

 

 

உளத்தில் ஒரு துளக்கம் இலோம் 

  உலகு உய்ய இருண்ட திருக்

களத்தர் முது குன்றர் தரு 

  கனகம் ஆற்றினில் இட்டு

வளத்தின் மலிந்தேழ் உலகும் 

  வணங்கு பெரும் திருவாரூர்க்

குளத்தில் எடுத்தார் வினையின் குழிவாய் 

  நின்று எனை எடுத்தார்.  9 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

அந்தணப் பெண்ணின் கொலையைக் கண்டுபிடித்தல்
View Details
சாவளிகே சிவலிங்கேஸ்வர சித்தர்
View Details
வெள்ளம் தடுத்தல்
View Details