பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

035 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

நீடு வண் புகழ்ச்சோழர் 

  நீர்நாட்டு இடை நிலவும்

மாடு பொன் கொழி 

  காவிரி வடகரைக் கீழ்பால்

ஆடு பூங்கொடி மாடம் 

  நீடிய அணி நகர் தான்

பீடு தங்கிய திருப் 

  பெரு மங்கலப் பெயர்த்தால்.  1 

 

 

இஞ்சி சூழ்வன எந்திரப் 

  பந்தி சூழ் ஞாயில்

மஞ்சு சூழ்வன வரை 

  எனஉயர் மணி மாடம்

நஞ்சு சூழ்வன நயனியர் 

  நளின மெல்லடிச் செம்

பஞ்சு சூழ்வன காளையர் 

  குஞ்சியின் பரப்பு.  2 

 

 

விழவு அறாதன விளங்கு 

  ஒளி மணி நெடுவீதி

முழவு அறாதன மொய் 

  குழலியர் நட அரங்கம்

மழவு அறாதன மங்கலம் 

  பொலி மணி முன்றில்

உழவு அறாத நல் 

  வளத்தன ஓங்கிருங் குடிகள்.  3 

 

 

நீரினில் பொலி சடை 

  முடி நெற்றி நாட்டத்துக்

காரினில் திகழ் கண்டர் 

  தம் காதலோர் குழுமி

பாரின் மிக்க தோர் 

  பெருமையால் பரமர்தாள் பரவும்

சீரின் மிக்கது சிவபுரி 

  எனத் தகும் சிறப்பால்.  4 

 

 

இன்ன வாழ்பதி அதன்இடை 

  ஏயர் கோக் குடிதான்

மன்னிய நீடிய வளவர் 

  சேனாபதிக் குடியாம்

தொன்மை மேவிய தொடர்ச்சியால் 

  நிகழ்வது தூய

பொன்னி நாட்டு வேளாண்மையில் 

  உயர்ந்த பொற்பினதால்.  5 

 

 

அங்கண் மிக்க அக்குடியினில் 

  அவதரித்து உள்ளார்

கங்கை வாழ்முடியார் தொண்டர் 

  கலிக்காமர் என்பார்

தங்கள் நாயகர் அடி 

  பணிவார் அடிச்சாந்து

பொங்கு காதலின் அவர்பணி 

  போற்றுதல் புரிந்தார்.  6 

 

 

புதிய நாள் மதிச்சடை 

  முடியார் திருப்புன்கூர்க்கு

அதிகம் ஆயின திருப்பணி 

  அநேகமும் செய்து

நிதியம் ஆவனநீறு உகந்தார் 

  கழல் என்று

துதியினால் பரவித் தொழுது 

  இன்புறு கின்றார்.  7 

 

 

நாவலூர் மன்னர் நாதனைத் 

  தூதுவிட்டு அதனுக்கு

இயாவர் இச்செயல் புரிந்தனர் 

  என்று அவர் இழிப்பத்

தேவர் தம்பிரான் அவர்திறம் 

  திருத்திய அதற்கு

மேவ வந்த அச்செயலினை 

  விளம்புவான் உற்றேன்.  8 

 

 

திருத் தொண்டத் தொகை 

  அருளித் திருநாவலூர் ஆளி

கருத்து ஒன்று காதலினால் 

  கனக மதில் திருவாரூர்

ஒருத்தர் கழல் முப்பொழுதும் 

  உருகிய அன்பொடு பணிந்து

பெருத்து எழும்மெய் அன்பினால் பிரியாது 

  அங்கு உறையும் நாள்.  9 

 

 

தாள் ஆண்மை உழவுதொழில் தன்மை 

  வளம் தலை சிறந்த

வேளாளர் குண்டை யூரக் கிழார் 

  எனும் மே தக்கோர்

வாளார் வெண் மதி அணிந்தார் 

  மறையவராய் வழக்கினில் வென்று

ஆளாகக் கொண்ட வர்தாள் 

  அடைந்து அன்பால் ஒழுகுவார்.  10 

 

 

செந் நெல்லும் பொன்னன்ன செழும் 

  பருப்பும் தீம்கரும் பின்

இன் னல்ல அமுதும் முதல் 

  எண்ணில் பெரும் பலவளங்கள்

மன்னிய சீர் வன் தொண்டர்க்கு 

  அமுதாக வழு வாமல்

பன் னெடு நாள் பரவையார் 

  மாளிகைக்குப் படி சமைத்தார்.  11 

 

 

ஆன செயல் அன்பின் வரும் 

  ஆர்வத்தால் மகிழ்ந்து ஆற்ற

வான முறை வழங்காமல் மா 

  நிலத்து வளம் சுருங்கப்

போனக நெல் படி நிரம்ப 

  எடுப்பதற்குப் போ தாமை

மானம் அழி கொள்கை யினால் 

  மனம் மயங்கி வருந்துவார்.  12 

 

 

வன் தொண்டர் திருவாரூர் மாளி 

  கைக்கு நெல் எடுக்க

இன்று குறை ஆகின்றது என் 

  செய்கேன் என நினைந்து

துன்று பெரும் கவலை யினால் 

  துயர் எய்தி உண்ணாதே

அன்று இரவு துயில் கொள்ள 

  அங்கணர் வந்துஅருள் புரிவார்.  13 

 

 

ஆரூரன் தனக்கு உன்பால் நெல் 

  தந்தோம் என்று அருளி

நீரூரும் சடை முடியார் நிதிக் 

  கோமான் தனை ஏவப்

பேரூர் மற்று அதன் எல்லை 

  அடங்கவும் நெல்மலைப் பிறங்கல்

காரூரும் நெடும் விசும்பும் கரக்க 

  நிறைந்து ஓங்கியது ஆல்.  14 

 

 

அவ்விரவு புலர் காலை உணர்ந்து 

  எழுவார் அது கண்டே

எவ் வுலகின் நெல் மலைதான் 

  இது என்றே அதிசயித்து

செவ்விய பொன் மலை வளைத்தார் 

   திரு அருளின் செயல் போற்றிக்

கொவ்வை வாய்ப் பரவையார் 

   கொழுநரையே தொழுது எழுவார்.  15 

 

 

நாவலூர் மன்னனார்க்கு நாயனார் 

  அளித்த நெல் இங்கு

யாவரால் எடுக்கல் ஆகும் இச் 

  செயல் அவர்க்குச் சொல்லப்

போவன் யான் என்று போந்தார் 

  புகுந்தவாறு அருளிச் செய்து

தேவர் தம் பெருமான் ஏவ 

  நம்பியும் எதிரே சென்றார்.  16 

 

 

குண்டையூர்க் கிழவர் தாமும் எதிர் 

  கொண்டு கோதில் வாய்மைத்

தொண்டனார் பாதம் தன்னில் தொழுது 

  வீழ்ந்து எழுந்து நின்று

பண்டெலாம் அடியேன் செய்த பணி 

  எனக்கு இன்று முட்ட

அண்டர் தம் பிரானார் தாமே 

  நெல்மலை அளித்தார் என்று.  17 

 

 

மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்று 

 நெல் மலையின் ஆக்கம்

இனி எனால் செய்யல்ஆகும் பணி 

  அன்று இது என்னக் கேட்டு

பனிமதி முடியார் அன்றே பரிந்து 

  உமக்கு அளித்தார் நெல்என்று

இனியன மொழிந்து தாமும் குண்டை 

  யூர் எய்த வந்தார்.  18 

 

 

விண் ணினை அளக்கும் நெல்லின் 

  வெற்பினை நம்பி நோக்கி

அண்ணலைத் தொழுது போற்றி 

  அதிசயம் மிகவும் எய்தி

எண்ணில் சீர்ப் பரவை இல்லத்து 

  இந்நெல்லை எடுக்க ஆளும்

தண்ணிலவு அணிந்தார் தாமே தரில் 

  அன்றி ஒண்ணாது என்று.  19 

 

 

ஆளிட வேண்டிக் கொள் வார் 

  அருகு திருப் பதியான

கோளி லியில் தம் பெருமான் 

  கோயிலினை வந்து எய்தி

வான் அளவு கண் மடவாள் 

  வருந்தாமே எனும் பதிகம்

மூள வரும் காதல் உடன் 

  முன் தொழுது பாடுதலும்.  20 

 

 

பகல்பொழுது கழிந்து அதன்பின் பரவை 

  மனை அளவு அன்றி

மிகப் பெருகும் நெல் உலகில் 

  விளங்கிய ஆரூர் நிறையப்

புகப் பெய்து தருவன நம் 

  பூதங்கள் என விசும்பில்

நிகர்ப்பு அரியது ஒருவாக்கு நிகழ்ந்தது 

  நின் மலன் அருளால்.  21 

 

 

தம்பிரான் அருள் போற்றித் தரையின் 

  மிசை விழுந்து எழுந்தே

உம்பரால் உணர்வு அரிய திருப் 

  பாதம் தொழுது ஏத்திச்

செம் பொன் நேர் சடையாரைப் 

  பிறபதியும் தொழுது போய்

நம்பர் ஆரூர் அணைந் தார் 

  நாவலூர் நாவலன் ஆர்.  22 

 

 

பூங்கோயில் மகிழ்ந்து அருளும் புரா 

  தனரைப் புக்கு இறைஞ்சி

நீங்காத பெரும் மகிழ்ச்சி உடன் 

  ஏத்திப் புறம் போந்து

பாங்கு ஆனார் புடை சூழ்ந்து 

  போற்றி இசைக்க பரவையார்

ஓங்கு திரு மாளிகை யினுள் 

  அணைந் தார் ஆரூரர்.  23 

 

 

கோவை வாய்ப் பரவையார் தாம் 

  மகிழும் படி கூறி

மேவி அவர் தம் மோடு 

  மிகஇன்புற்று இருந்து அதன்பின்

சேவின் மேல் உமையோடும் வருவார் 

  தம் திரு அருளின்

ஏவலி னால் அவ் விரவு 

  பூதங்கள் மிக்கு எழுந்து.  24 

 

 

குண்டையூர் நெல் மலையைக் குறள் 

  பூதப் படை கவர்ந்து

வண்டு லாம் குழல் பரவை 

  மாளிகையை நிறைவித்தே 

அண்டர்பிரான் திரு ஆரூர் அடங்கவும் 

  நெல் மலை ஆக்கி

கண்டவர் அற்புதம் எய்தும் காட்சி 

  பெற அமைத்தனவால்.  25 

 

 

அவ்விரவு புலர் காலை ஆரூரில் 

  வாழ் வார் கண்டு

எவ்வுலகில் விளைந்தன நெல் மலை 

  இவை என்று அதிசயித்து

நவ்வி மதர்த் திரு நோக்கின் 

  நங்கை புகழ்ப் பரவையார்க்கு

இவ் உலகு வாழ வரும் 

  நம்பி அளித்தன என்பார்.  26 

 

 

நீக்க அரிய நெல் குன்று தனை 

  நோக்கி நெறி பலவும்

போக்க அரிது ஆயிடக் கண்டு 

  மீண்டும் தம்இல் புகுவார்

பாக்கி யத்தின் திரு வடிவாம் 

  பரவையார்க்கு இந் நெல்லுப்

போக்கும் இடம் அரி தாகும் 

  எனப் பலவும் புகல்கின்றார்.  27 

 

 

வன்தொண்டர் தமக்கு அளித்த நெல் 

  கண்டு மகிழ் சிறப்பார்

இன்று உங்கள் மனை எல்லைக்கு 

  உள்படும் நெல்குன்று எல்லாம்

பொன் தங்கு மாளிகையில் புகப் 

  பெய்து கொள்க என

வென்றி முரசு அறை வித்தார் 

  மிக்க புகழ் பரவையார்.  28 

 

 

அணி ஆரூர் மருகு அதனில் 

  ஆளிஅங்குப் பறை அறைந்த

பணியாலே மனை நிறைத்துப் பாங்கு 

  எங்கும் நெல் கூடு

அணி யாமல் கட்டி நகர் 

  களி கூரப் பரவையார்

மணியாரம் புனை மார்பின் வன் 

  தொண்டர் தமைப் பணிந்தார்.  29 

 

 

நம்பி ஆரூர் திருவா ரூரில் 

  நயந்து உறை நாள்

செம்பொன் புற்றுஇடம் கொண்டு வீற்று 

  இருந்த செழும் தேனைக்

தம் பெரிய விருப்பி னொடும் 

  தாழ்ந்து உணர்வினால் பருகி

இம் பருடன் உம்பர் களும் 

  அதிச யிப்ப ஏத்தினார்.  30 

 

 

குலவு புகழ்க் கோட்புலியார் குறை 

  யிரந்து தம் பதிக்கண்

அலகில் புகழ் ஆரூரர் எழுந்து 

  அருள அடி வணங்கி

நிலவிய வன்தொண்டர் அஃது இசைந்து 

  அதன்பின் நேர் இறைஞ்சி

பலர் புகழும் பண்பினார் மீண்டும் 

  தம் பதி அணைந்தார்.  31 

 

 

தேவர் ஒதுங்க திருத் தொண்டர் 

  மிடையும் செல்வத் திருவாரூர்

காவல் கொண்டு தனியாளும் கடவுள் 

  பெருமான் கழல் வணங்கி

நாவலூரர் அருள் பெற்று நம்பர் 

  பதிகள் பிற நண்ணிப்

பாவை பாகர்தமைப் பணிந்து பாடும் 

  விருப்பில் சென்று அணைவார்.  32 

 

 

மாலும் அயனும் உணர்வு அரியார் 

  மகிழும் பதிகள்பல வணங்கி

ஞாலம் நிகழ் கோட்புலியார் தம் 

  நாட்டியத்தான் குடி நண்ண

ஏலும் வகையால் அலங்கரித்து அங்கு 

  அவரும் எதிர்கொண்டு இனிதுஇறைஞ்சிக்

கோல மணி மாளிகையின் கண் 

  ஆர்வம் பெருகக்கொடு புக்கார்.  33 

 

 

தூய மணிப்பொன் தவிசில் எழுந்து 

  அருளி இருக்கத்தூ நீரால்

சேய மலர்ச்சேவடி விளக்கித் தெளித்துக் 

  கொண்ட செழும் புனலால்

மேய சுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களிப்ப

ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார்.  34 

 

 

பூந்தண் பனிநீர் கொடு சமைத்த 

  பொருவுஇல் விரைச்சந்தனக் கலவை    

வாய்ந்த அகிலின் நறும் சாந்து வாசம் 

  நிறைமான் மதச் சேறு      

தோய்ந்த புகை நாவியின் நறுநெய் 

  தூயபசும் கர்ப்பூரம் உடன்       

ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய 

  எண்ணில் மணிப்பாசனத்து ஏந்தி.  35 

 

 

வேறு வேறு திருப்பள்ளித் தாமப் 

  பணிகள் மிக எடுத்து

மாறிலாத மணித் திரு ஆபரண 

  வருக்கம் பல தாங்கி

ஈறில் விதத்துப் பரிவட்டம் ஊழின் 

  நிரைத்தே எதிர் இறைஞ்சி

ஆறு புணைந்தார் அடித்தொண்டர் அளவுஇல் 

  பூசை கொள அளித்தார்.  36 

 

 

செங்கோல் அரசன் அருள் உரிமைச் 

  சேனாபதி ஆம் கோட்புலியார்

நங் கோமானை நாவலூர் நகரார் 

  வேந்தை நண் பினால்

தங்கோ மனையில் திருஅமுது செய்வித்து 

  இறைஞ் சித்தலை சிறந்த

பொங்கு ஓதம்போல் பெரும் காதல் 

  புரிந்தார் பின்னும் போற்றுவா.  37 

 

 

ஆன விருப்பின் மற்று அவர்தாம் 

  அருமையால் முன் பெற்று எடுத்த

தேனார் கோதைச் சிங்கடியார் தமையும் 

  அவர்பின் திரு உயிர்த்த

மானார் நோக்கின் வனப்பகையார் தமையும் 

  கொணர்ந்து வன் தொண்டர்

தூ நாண் மலர்த்தாள் பணிவித்துத் 

  தாமும் தொழுது சொல்லுவார்.  38 

 

 

அடியேன் பெற்ற மக்கள் இவர் 

  அடிமைஆகக் கொண்டு அருளிக்

கடிசேர் மலர்த்தாள் தொழுது உய்யக்கருணை 

  அளிக்க வேண்டும் எனத்

தொடிசேர் தளிக்கை இவர் எனக்குத் 

  தூய மக்கள் எனக்கொண்டப்

படியே மகண்மையாக் கொண்டார் பரவையார் 

  தம் கொழு நனார்.  39 

 

 

கோதை சூழ்ந்த குழலாரைக் குறங்கின் 

  வைத்து கொண்டு இருந்து

காதல் நிறைந்த புதல்வியராம் கருத்து 

  உட்கசிவால் அணைத்து உச்சி

மீது கண்ணீர் விழ மோந்து 

  வேண்டுவனவும் கொடுத்து அருளி

நாதர் கோயில் சென்று அடைந்தார் 

  நம்பி தம்பிரான் தோழர்.  40 

 

 

வென்றி வெள்ளேறு உயர்த்து அருளும் 

  விமலர் திருக்கோபுரம் இறைஞ்சி

ஒன்றும் உள்ளத் தொடும் அன்பால் 

  உச்சி குவித்த கரத்தொடும்

சென்று புக்குப் பணிந்து திருப்பதிகம் 

  பூணாண் என்று எடுத்துக்

 கொன்றை முடியார் அருள் உரிமை 

  சிறப்பித்தார் கோட்புலியாரை.  41 

 

 

சிறப்பித்து அருளும் திருக்கடைக் காப்பு 

  அதன் இடைச் சிங்கடியாரைப்

பிறப்பித்து எடுத்த பிதாவாகத் தம்மை 

  நினைத்த பெற்றி யினால்

மறப்பில் வகைச் சிங்கடிஅப்பன் என்றே 

  தம்மை வைத்து அருளி

நிறப்பொற்பு உடைய இசைபாடி நிறைந்த 

  அருள் பெற்று இறைஞ்சுவார்.  42 

 

 

அங்கு நின்றும் எழுந்து அருளி 

  அளவில் அன்பின் உள்மகிழச்

செங்கண் நுதலார் மேவு திருவலி 

  வலத்தைச் சேர்ந்து இறைஞ்சி

மங்கை பாகர் தமைப் பதிகம் 

  வலிவலத்துக் கண்டேன் என்று

எங்கும் நிகழ்ந்த தமிழ் மாலை 

  எடுத்துத் தொடுத்த இசைபுனைவார்.  43 

 

 

நன்று மகிழும் சம்பந்தர் நாவுக் 

  கரசர் பாட்டு உகந்தீர்

என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து 

  ஏத்திஅருள் பெற்று எழுந்துஅருளி

மன்றின் இடையே நடம் புரிவார் 

  மருவு பெருமைத் திருவாரூர்

சென்று குறுகிப் பூங்கோயில் பெருமான் 

  செம்பொன் கழல் பணிந்து.  44 

 

 

இறைஞ்சிப் போந்து பரவையார் திரு 

  மாளிகையில் எழுந்து அருளி

நிறைந்த விருப்பின் மேவும் நாள் 

  நீடு செல்வத் திருவாரூர்ப்

புறம்பு நணிய கோயில்களும் பணிந்து 

  போற்றிப் புற்று இடமாய்

உறைந்த பெருமான் கழல் பிரியாது 

  ஓவாஇன்பம் உற்று இருந்தார்.  45 

 

 

செறிபுன் சடையார் திருவாரூர்ப் திருப் 

  பங்குனி உத்திரத் திருநாள்

குறுக வரலும் பரவையார் கொடைக்கு 

  விழாவில் குறைவறுக்க

நிறையும் பொன் கொண்டு அணைவதற்கு 

  நினைந்து நம்பி திருப்புகலூர்

இறைவர் பாதம் பணிய எழுந்து 

  அருளிச்சென்று அங்கு எய்தினார்.  46 

 

 

சென்று விரும்பித் திருப்புகலூர் தேவர் 

  பெருமான் கோயில் மணி  

முன்றில் பணிந்து வலம்கொண்டு முதல்வர் 

  முன்பு வீழ்ந்து இறைஞ்சித் 

தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த 

  அன்பில் துதித்து எழுந்து     

நின்று பதிக இசைபாடி நினைந்த 

  கருத்து நிகழ் விப்பார்.  47 

 

 

சிறிது பொழுது கும்பிட்டுச் சிந்தை 

  முன்னம் அங்கு ஒழிய

வறிது புறம்போந்து அருளி அயல் 

  மடத்தில் அணையார் வன்தொண்டர் 

அறிவுகூர்ந்த அன்பர் உடன் அணி 

  முன்றிலின் ஓர்அருகு இருப்ப

மறி வண்கையார் அருளேயோ மலர்கண் 

  துயில் வந்து எய்தியதால்.  48 

 

 

துயில் வந்து எய்தத் தம்பிரான் 

  தோழர் அங்குத் திருப்பணிக்குப்

பயிலும் சுடுமண் பலகை பல 

  கொணர்வித்து உயரம் பண்ணித்தேன்

அயிலும் சுரும்பார் மலர்ச் சிகழி 

  முடிமேல் அணியா உத்தரிய

வெயில் உந்திய வெண்பட்டு அதன்மேல் 

  விரித்துப் பள்ளி மேவினார்.  49 

 

 

சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் 

  அளவில் துணைமலர்க் கண் 

பற்றும் துயில் நீங்கிடப் பள்ளி 

  உணர்ந்தார் பரவை கேள்வனார் 

வெற்றி விடையார் அருளாலே வேமண் 

  கல்லே விரிசுடர்ச் செம்  

பொற்றிண் கல்லாயின கண்டு புகலூர் 

  இறைவர் அருள் போற்றி.  50 

 

 

தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து 

  துணைக்கைக் கமல முகைதலைமேல்

கொண்டு கோயில் உள் புக்குக் 

  குறிப்பில் அடங்காப் பேர்அன்பு

மண்டு காதல் உற வணங்கி 

  வாய்த்த மதுர மொழிமாலை

பண்டு அங்கு இசையில் தம்மையே  

 புகழ்ந்து என்று எடுத்துப் பாடினார்.  51 

 

 

பதிகம் பாடித் திருக்கடைக்காப் பணிந்து 

  பரவிப் புறம் போந்தே எதிரில் 

இன்பம் இம்மையே தருவார் அருள் 

  பெற்று எழுந்து அருளி நிதியின் 

குவையும் உடன் கொண்டு நிறையும் 

  நதியும் குறை மதியும் பொதியும் 

சடை யார் திருப் பனையூர் 

  புகுவார் புரிநூல் மணி மார்பர்.  52 

 

 

செய்ய சடையார் திருப் பனையூர்ப் 

  புறத்துத் திருக் கூத்தொடும் காட்சி

எய்த அருள் எதிர்சென்று அங்கு 

  எழுந்த விருப்பால் விழுந்து இறைஞ்சி

ஐயர் தம்மை அரங்கு ஆட 

  வல்லார் அவரே அழகியர் என்று

உய்ய உலகு பெறும் பதிகம் 

  பாடி அருள் பெற்று உடன்போந்தார்.  53 

 

 

வளம் மல்கியசீர்ப் திருப்பனையூர் வாழ்வார் 

  ஏத்த எழுந்து அருளி அளவில் 

செம் பொன் இட்டி கைகள் 

  ஆள்மேல் நெருங்கி அணி ஆரூர்த் 

தளவ முறுவல் பரவையார் தம் 

  மாளி கையில் புகத் தாமும்     

உளமன்னிய தம் பெரு மானார் 

  தம்மை வணங்கி உவந்து அணைந்தார்.  54 

 

 

வந்து பரவைப் பிராட் டியார் 

  மகிழ வைகி மருவும் நாள் 

அந்தண் ஆரூர் மருங்கு அணிய 

  கோயில் பலவும் அணைந்து இறைஞ்சிச் 

சிந்தை மகிழ விருப் பினொடும் 

  தெய்வப் பெருமாள் திருவாரூர் 

முந்தி வணங்கி இனிது இருந்தார் 

  முனைப் பாடியார் தம் காவலனார்.  55 

 

 

பல நாள் அமர்வார் பரமர் திரு 

  அருளால் அங்கு நின்றும் போய்ச்

சிலை மா மேரு வீரனார் 

  திரு நன்னிலத்துச் சென்று எய்தி

வலமாக வந்து கோயிலின் 

  உள் வணங்கி மகிழ்ந்து பாடினார்

தலமார்கின்ற தண் இயல் வெம்மை 

  யினான் என்னும் தமிழ் மாலை.  56 

 

 

பாடி அங்கு வைகிய பின் 

  பரமர் வீழி மிழலையினில்

நீடு மறையால் மேம்பட்ட அந்தண் 

  ஆளர் நிறைந்து ஈண்டி

நாடு மகிழ அவ்அளவு நடைக் 

  காவணம் பாவாடை உடன்

மாடு கதலி பூகம் நிரை 

  மல்க மணித்தோரணம் நிரைத்து.  57 

 

 

வந்து நம்பி தம்மை எதிர் 

  கொண்டு புக்கார் மற்றவரும்

சிந்தை மலர்ந்து திரு வீழிமிழலை 

  இறைஞ்சிச் சேண் விசும்பின்

முந்தை இழிந்த மொய் ஒளிசேர் 

  கோயில் தன்னை முன்வணங்கி

பந்தம் அறுக்கும் தம் பெருமான் 

  பாதம் பரவிப் பணிகின்றார்.  58 

 

 

படங்கொள் அரவில் துயில் வோனும் 

  பதுமத் தோனும் பரவிய

விடங்கன் விண்ணேர் பெருமானை விரவும் 

  புளகம் உடன் பரவி

அடங்கல் வீழி கொண்டு இருந்தீர் 

  அடியேனுக்கும் அருளும் எனத்

தடம்கொள் செஞ்சொல் தமிழ் மாலை 

சாத்தி அங்குச் சாரும்நாள்.  59 

 

 

வாசி அறிந்து காசு அளிக்க 

  வல்ல மிழலை வாணர்பால்

தேசு மிக்க திருஅருள் முன் 

  பெற்று திருவாஞ்சியத்து அடிகள்

பாசம் அறுத்து ஆட்கொள்ளும் 

  தாள்பணிந்து பொருவனார் என்னும்

மாசில் பதிகம் பாடி அமர்ந்து 

  அரிசில்கரைப் புத்தூர் அணைந்தார்.  60 

 

 

செழுநீர் நறையூர் நிலவு திருச் 

  சித்தீச்சரமும் பணிந்து ஏத்தி

விழுநீர் மையினில் பெரும் தொண்டர் 

  விருப்பின் ஓடும் எதிர்கொள்ள

மழுவோடு இளமான் கரதலத்தில் உடையார் 

  திருப் புத்தூர் வணங்கி

தொழுநீர் மையினில் துதித்து ஏத்தித்

   தொண்டர்சூழ உறையும் நாள்.  61 

 

 

புனிதனார் முன் புகழ்த் துணையார்க்கு 

  அருளும் திறமும் போற்றிசைத்து

முனிவர் போற்ற எழுந்து அருளி  

 மூரி வெள்ளக் கங்கையினில்

பனிவெண் திங்கள்அணி சடையார் பதிகள் 

  பலவும் பணிந்து போந்து 

இனிய நினைவில் எய்தினார் இறைவர் 

  திருவா வடு துறையில்.  62 

 

 

விளங்கும் திருவாவடு துறையில் மேயார் 

  கோயில் புடைவலம் கொண்டு

உளம் கொண்டு உருகும் அன்பினுடன் 

  உள்புக்கு இறைஞ்சி ஏத்துவார்

வளம் கொள் பதிகம் மறையவன் 

  என்று எடுத்து வளவன் செங்கணான்

தளம் கொள் பிறப்பும் சிறப்பித்துத் 

  தமிழ்சொல் மாலை சாத்தினார்.  63 

 

 

சாத்தி அங்கு வைகு நாள் 

  தயங்கும் அன்பருடன் கூடப்

பேர்த்தும் இறைஞ்சி அருள் பெற்றுப் 

  பெண்ணோர் பாகத்து அண்ணலார்

தீர்தப் பொன்னித் தென் கரைமேல் 

  திகழும் பதிகள் பல பணிந்து

மூர்த்தியார் தம்இடை மருதை அடைந்தார் 

  முனைப் பாடித் தலைவர்.  64 

 

 

மன்னு மருதின் அமர்ந்த வரை 

  வணங்கி மதுரச்சொல் மலர்கள்

பன்னிப் புனைந்து பணிந்து ஏத்திப் 

  பரவிப்போந்து தொண்டர் உடன்

அந்நல் பதியில் இருந்து அகல்வார் 

  அரனார் திருநாகேச்சரத்தை

முன்னி புக்கு வலம் கொண்டு 

  முதல்வர் திருத்தாள் வணங்கினார்.  65 

 

 

பெருகும் பதிகம் பிறைஅணி வாள் 

  நுதலாள் பாடிப்பெயர்ந்து நிறை

திருவின் மலியும் சிவபுரத்துத் தேவர் 

  பெருமான் கழல் வணங்கி

உருகும் சிந்தை உடன் போந்தே 

  உமையோர் பாகர் தாம்மகிழ்ந்து

 மருவும் பதிகள் பிறபணிந்து கலைய 

  நல்லூர் மருங்கு அணைந்தார்.  66 

 

 

செம்மை மறையோர் திருக்கலைய நல்லூர் 

  இறைவர் சேவடிக் கீழ்

மும்மை வணக்கம் பெற இறைஞ்சி 

  முன்பு பரவித்தொழுது எழுவார்

கொம்மை மருவு குரும்பை முலை 

  உமையாள் என்னும் திருப்பதிகம்

மெய்ம்மைப் புராணம் பலவும் மிகச் 

  சிறப்பித்து இசையின் விளம்பினார்.  67 

 

 

அங்கு நின்று திருக்குட மூக்கு 

  அணைந்து பணிந்து பாடிப்போய்

மங்கைப்பாகர் வலம் சுழியை மருவிப் 

  பெருகும் அன்பு உருகத்

தங்கு காதல் உடன் வணங்கித் 

  தமிழால் பரசி அரசினுக்குத்

திங்கள் முடியார் அடி அளித்த 

  திருநல்லூரைச் சென்று அணைந்தார்.  68 

 

 

நல்லூர் இறைவர் கழல் போற்றி 

  நவின்று நடுவர் நம்பர்பதி

எல்லாம் இறைஞ்சி ஏத்திப் போந்து 

  இசையால் பரவும் தம்உடைய

சொல்லூ தியமா அணிந்தவர் தம் 

  சோற்றுத்துறையின் மருங்கு எய்தி

அல்லூர் கண்டர் கோயிலின் உள்அடைந்து 

  வலம் கொண்டு அடிபணிவார்.  69 

 

 

அழல்நீர் ஒழுகி அனைய எனும் 

  அம்சொல் பதிகம் எடுத்துஅருளிக்

கழல் நீடிய அன்பினில் போற்றும் 

  காதல் கூரப் பரவியபின்

கெழு நீர்மையினில் அருள் பெற்றுப் 

  போந்து பரவையார் கேள்வர்

முழுநீறு அணிவார் அமர்ந்த பதி 

  பலவும் பணிந்து முன்னுவார்.  70 

 

 

தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து 

  திரு ஐயாறு அதனை

மேவி வணங்கிப் பூந்துருத்தி விமலர் 

  பாதம் தொழுது இறைஞ்சிச்

சேவில் வருவார் திருஆலம் பொழிலில் 

  சேர்ந்து தாழ்ந்து இரவு

பாவு சயனத்து அமர்ந்தருளிப் 

  பள்ளி கொள்ளக் கனவின்கண்.  71 

 

 

மழபாடியினில் வருவதற்கு நினைக்க  

  மறந் தாயோ என்று

குழகு ஆகியதம் கோலம் எதிர்காட்டி 

  அருளக் குறித்து உணர்ந்து

நிழலார் சோலைக் கரைப் பொன்னி 

  வடபால் ஏறி நெடுமாடம்

அழ கார் வீதி மழபாடி 

  அணைந்தார் நம்பி ஆரூரர்.  72 

 

 

அணைந்து திருக்கோபுரம் இறைஞ்சி அன்பர் 

  சூழ உடன் புகுந்து

பணம்கொள் அரவம் அணிந்தார் முன்பணிந்து 

  வீழ்ந்து பரம் கருணைக்

குணம்கொள் அருளின் திறம் போற்றிக் 

  கொண்ட புளகத்துடன் உருகிப்

புணர்ந்த இசையால் திருப்பதிகம் பொன்னார் 

  மேனி என்று எடுத்து.  73 

 

 

அன்னே உன்னை அல்லல் யான் 

  ஆரை நினைக்கேன் என ஏத்தி

தன்னேர் இல்லாப் பதிக மலர் 

  சாத்தித் தொழுது புறம்பு அணைந்து

மன்னும் பதியில் சில நாள்கள் 

  வைகித் தொண்டர் உடன் மகிழ்ந்து

பொன்னிக் கரையின் இரு மருங்கும் 

  பணிந்து மேல் பால் போதுவார்.  74 

 

 

செய்ய சடையார் திரு ஆனைக் 

  காவில் அணைந்து திருத் தொண்டர்

எய்த முன் வந்து எதிர் 

  கொள்ள இறைஞ்சிக் கோயில் உள் புகுந்தே

ஐயர் கமலச் சேவடிக் கீழ் 

  ஆர்வம் பெருக விழுந்து எழுந்து

மெய்யும் முகிழ்ப்பக் கண் பொழி 

  நீர் வெள்ளம் பரப்ப விம்முவார்.  75 

 

 

மறைகளாய நான்கும் என மலர்ந்த 

  செம் சொல் தமிழ் பதிகம்

நிறையும் காதல் உடன் எடுத்து 

  நிலவும் அன்பர் தமை நோக்கி

இறையும் பணி வார் எம்மையும் 

  ஆள் உடையார் என்று ஏத்துவார்

உறையூர்ச் சோழன் மணி யாரம் 

  சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி.  76 

 

 

வளவர் பெருமான் மணி யாரம் 

  சாத்திக் கொண்டு வரும் பொன்னிக்

கிளரும் திரை நீர் மூழ் 

  குதலும் வழுவிப் போகக் கேதமுற

அளவில் திருமஞ்சனக் குடத்துள் அது 

  புக்கு ஆட்ட அணிந்து அருளித்

தளரும் அவனுக்கு அருள் புரிந்த 

  தன்மை சிறக்கச் சாற் றினார்.  77 

 

 

சாற்றி அங்குத் தங்கு நாள் 

  தயங்கும் பவளத் திரு மேனி

நீற்றர் கோயில் எம் மருங்கும் 

  சென்று தாழ்ந்து நிறை விருப்பால்

போற்றி அங்கு நின்றும் போய்ப் 

  பொருவில் அன்பர் மருவிய தொண்டு

ஆற்றும் பெருமை திருப்பாச்சில் 

  ஆச்சிராமம் சென்று அடைந்தார்.  78 

 

 

சென்று திருக் கோபுரம் இறைஞ்சித் 

  தேவர் மலிந்த திருந்து மணி

முன்றில் வலம் கொண்டு உள்அணைந்து 

  முதல்வர் முன்னம் வீழ்ந்து இறைஞ்சி

நன்று பெருகும் பொருள் காதல்

   நயப்புப் பெருக நாதர் எதிர்

நின்று பரவி நினைந்த பொருள் 

  அருளாது ஒழிய நேர் நின்று.  79 

 

 

அன்பு நீங்கா அச்சம் உடன் 

  அடுத்த திருத்தோழமைப் பணியால்

பொன் பெறாத திருஉள்ளம் புழுங்க 

  அழுங்கிப் புறம்பு ஒருபால்

முன்பு நின்ற திருத்தொண்டர் முகப்பே 

  முறைப்பாடு உடையார்போல்

என்பு கரைந்து பிரானார் மற்று 

  இலையோ என்ன எடுக்கின்றார்.  80 

 

 

நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி 

  நிலத்து இடைப்புலம் கெழும் பிறப்பால்

உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து 

  அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி

எத்தனை அருளாது ஒழியினும் பிரானார் 

  இவர் அலாது இல்லையோ என்பார்

வைத்தனன் தனக்கே தலையும் என் 

  நாவும் என வழுத்தினார் வழித்தொண்டர்.  81 

 

 

இவ்வகை பரவித் திருக்கடைக் காப்பும் 

  ஏசின வல்ல என்று இசைப்ப

மெய்வகை விரும்பு தம் பெருமானார் 

  விழுநிதிக் குவை அளித்து அருள

மைவளர் கண்டர் கருணையே பரவி 

  வணங்கி அப்பதி இடை வைகி

எவ்வகை மருங்கும் இறைவர் தம்பதிகள் 

  இறைஞ்சி அங்கு இருந்தனர் சிலநாள்.  82 

 

 

அப்பதி நீங்கி அருளினால் போகி 

  ஆவின் அஞ்சு ஆடுவார் நீடும்

எப்பெயர்ப் பதியும் இருமருங்கு இறைஞ்சி 

  இறைவர் பைஞ் ஞீலியை எய்திப்

பைப்பணி அணிவார் கோபுரம் இறைஞ்சிப் 

  பாங்கு அமர் புடை வலம்கொண்டு

துப்புஉறழ் வேணியார் கழல் தொழுவார் 

  தோன்றும் கங் காளரைக் கண்டார்.  83 

 

 

கண்டவர் கண்கள் காதல் நீர் 

  வெள்ளம் பொழிதரக்கை குவித்து இறைஞ்சி

வண்டறை குழலார் மனம் கவர் 

  பலிக்கு வரும் திருவடிவு கண்டவர்கள்

கொண்டதுஓர் மயலால் வினவு கூற்று 

  ஆகக் குலவுசொல் கார்உலாவிய என்று

அண்டர் நாயகரைப் பரவி ஆரணிய 

  விடங்கராம் அருந் தமிழ் புனைந்தார்.  84 

 

 

பரவி அப்பதிகத் திருக்கடைக் கப்புச் 

  சாத்தி முன்பணிந்து அருள் பெற்றுக்

கரவில் அன்பர்கள் தம்கூட்டமும் தொழுது 

  கலந்துஇனிது இருந்து போந்து அருளி

விரவிய ஈங்கோய் மலை முதல் ஆக விமலர் தம் பதி பல வணங்கிக்

குரவலர் சோலை அணி திருப் பாண்டிக் கொடு முடி அணைந்தனர் கொங்கில்.  85 

 

 

கொங்கினில் பொன்னித் தென் கரைக்கறையூர்க் 

  கொடுமுடிக் கோயில் முன் குறுகிச்

சங்கவெண் குழையார் உழை வலம் 

  செய்து சார்ந்துஅடி அன்பினில் தாழ்ந்து

பொங்கிய வேட்கை பெருகிடத் தொழுது 

  புனிதர் பொன் மேனியை நோக்கி

இங்கு இவர்தம்மை மறக்க ஒண்ணாது 

  என்று எழுந்த மெய்க்குறிப்பினில் எடுப்ப.  86 

 

 

அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம 

  அஞ்சு எழுத்து அறியஎப் பொழுதும்

எண்ணிய நாவே இன்சுவை பெருக 

  இடைஅறாது இயம்பும் என்றும் இதனைத்

திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்றுப் 

  பற்றுஇலேன் எனச் செழும் தமிழால்

நண்ணிய அன்பில் பிணிப்பு உற 

  நவின்றார் நமச்சிவாயத் திருப் பதிகம்.  87 

 

 

உலகுஎலாம் உய்ய உறுதி ஆம்பதிகம் 

  உரைத்து மெய் உணர்வு அறாஒருமை

நிலவிய சிந்தை உடன் திருஅருளால் 

  நீங்குவார் பாங்கு நல் பதிகள்

பலவும் முன் பணிந்து பரமர்தாள் 

  போற்றிப் போந்து தண்பனி மலர்ப்படப்பைக்

குலவும் அக்கொங்கில் காஞ்சிவாய்ப் பேரூர் 

  குறு கினார் முறுகும் ஆதரவால்.  88 

 

 

அத் திருப்பதியை அணைந்து முன் 

  ஆண்டவர் கோயில் உள் புகுந்து

மெய்த்தவர் சூழ வலம் கொண்டு 

  முன்பு மேவுவார் தம்எதிர் விளங்க

நித்தனார் தில்லை மன்றுள் நின்று 

  ஆடல் நீடிய கோலம் நேர்காட்டக்

கைத்தலம் குவித்துக் கண்கள் ஆனந்தக் 

  கலுழி நீர் பொழிதரக் கண்டார்.  89 

 

 

காண்டலும் தொழுது வீழ்ந்து உடன் எழுந்து 

  கரைஇல் அன்பு என்பினை உருக்கப்

பூண்ட ஐம்புலனில் புலப்படா இன்பம் 

  புணர்ந்து மெய் உணர்வினில் பொங்கத் 

தாண்டவம் புரியும் தம் பிரானாரைத் 

  தலைப்படக் கிடைத்த பின் சைவ

ஆண்தகையாருக்கு அடுத்த அந்நிலைமை 

  விளைவை யார்அளவு அறிந்து உரைப்பார்.  90 

 

 

அந் நிலை நிகழ்ந்த ஆரருள் பெற்ற 

  அன்பு அனார் இன்ப வெள்ளத்து

மன்னிய பாடல் மகிழ்ந்து உடன் பரவி 

  வளம்பதி அதன் இடை மருவி

பொன் மணி மன்றுள் எடுத்த சேவடியார் 

  புரி நடம் கும்பிடப் பெற்றால்

என் இனிப்புறம் போய் எய்துவது என்று 

  மீண்டு எழுந்து அருளுவதற்கு எழுவார்.  91 

 

 

ஆயிடை நீங்கி அருளினால் செல் வார் 

  அரு வரைச் சுரங்களும் பிறவும்

பாயும் நீர் நதியும் பலபல கடந்து 

  பரமர் தம் பதிபல பணிந்து

மேய வண் தமிழால் விருப் பொடும் 

  பரவி வெஞ்சமாக் கூடலும் பணிந்து

சேயிடை கழியப் போந்து வந்து அடைந்தார் 

  தென் திசை கற்குடி மலையில்.  92 

 

 

வீடு தரும் இக் கல் குடியில் 

  விழுமி யாரைப் பணிந்து இறைஞ்சி

நீடு விருப் பில் திருப் பதிகம் 

  நிறைந்த சிந்தை உடன் பாடிப்

பாடும் விருப்பில் தொண்ட ருடன் பதிகள் 

  பலவும் அணைந்து இறைஞ்சி

தேடும் இருவர் காண்ப அரியார் திரு 

  வாறை மேல் சென்று அணைந்தார்.  93 

 

 

செம்பொன் மேரு சிலை வளைத்த 

  சிவனார் ஆறைமேல் தளியில்

நம்பர்பாதம் பணிந்து இறைஞ்சி நாளும் 

  மகிழ்வார்க்கு அருள் கூட

உம்பர் போற்றும் தானங்கள் பலவும் 

  பணிந்து போந்து அணைவார்

இம்பர் வாழ இன் னம்பர் 

  நகரைச் சேர எய்தினார்.  94 

 

 

ஏரின் மருவும் இன்னம்பர் மகிழ்ந்த 

  ஈசர் கழல் வணங்கி

ஆரும் அன்பில் பணிந்து ஏத்தி 

  ஆராஅருளால் அங்கு அமர்வார் 

போரின் மலியும் கரிஉரித்தார் மருவும் 

  புறம் பயம் போற்றச்

சேரும் உள்ளம் மிக்குஎழ மெய்ப் 

  பதிகம் பாடிச் செல்கின்றார்.  95 

 

 

அங்கம் ஓதி ஓர் ஆறை மேல்தளி 

  என்று எடுத்து அமர் காதலில்

பொங்கு செந் தமிழால் விரும்பு புறம் 

  பயந்து தொழப் போதும் என்று

எங்கும் மன்னிய இன் இசை பதிகம் 

  புணைந்து உடன் எய் தினார்

திங்கள் சூடிய செல் வர் மேவும் 

 திருப் புறம் பயம் சேரவே.  96 

 

 

அப் பதிக் கண் அமர்ந்த தொண்டரும் 

  அன்று வெண்ணெய் நல் ஊரினில்

ஒப் பரும் தனி வேதியன் பழ 

  ஓலை காட்டி நின்று ஆண்டவர்

இப்பதிக் கண் வந்து எய்த என்ன 

  தவங்கள் என்று எதிர் கொள்ளவே

முப் புரங்கள் எரித்த சேவகர் கோயில் 

 வாயி லின் முன் னினார்.  97 

 

 

நீடு கோபுரம் முன்பு இறைஞ்சி 

  நிலாவு தொண்ட ரொடுள்ளணைந்து

ஆடல் மேவிய அண்ணலார் அடி 

  போற்றி அஞ்சலி கோலிநின்று

ஏடுஉலாம் மலர்தூவி எட்டினொடு 

  ஐந்தும் ஆகும் உறுப்பினால்

பீடு நீடு நிலத்தின் மேல் 

  பெருகப் பணிந்து வணங்கினார்.  98 

 

 

அங்கு நீடு அருள்பெற்று உள் ஆர்வம் 

  மிகப்பொழிந்து எழும் அன்பினால்

பொங்கு நாள் மலர் பாதம் முன்பணிந்து 

  ஏத்தி மீண்டும் புறத்து அணைந்து

எங்கும் ஆகி நிறைந்து நின் றவர் 

  தாம் மகிழ்ந்த இடங் களில்

தங்கு கோலம் இறைஞ் சுவார் அருள் 

  தாவில் அன்பரோடு எய்தினார்.  99 

 

 

வம்பு நீடு அலங்கல் மார்பின் 

  வன்தொண்டர் வன்னி கொன்றை

தும்பை வெள் அடம்பு திங்கள் 

  தூயநீறு அணிந்த சென்னித்

தம்பிரான் அமர்ந்த தானம் பல 

  பல சார்ந்து தாழ்ந்து

கொம் பனார் ஆடல் நீடு 

  கூடலை யாற்றூர் சார.  100 

 

 

செப்பரும் பதியில் சேரார் 

 திருமுது குன்றை நோக்கி

ஒப்பரும் புகழார் சொல்லும் 

  ஒரு வழி உமையாளோடு

மெய்ப்பரம் பொருளாய் உள்ளார் 

  வேதியர் ஆகி நின்றார்

முப்புரி நூலும் தாங்கி 

  நம்பி ஆரூரர் முன்பு.  101 

 

 

நின்றவர் தம்மை நோக்கி நெகிழ்ந்த 

  சிந்தை யராய்த் தாழ்வார்

இன்றி யாம் முதுகுன்று எய்த 

  வழி எமக்கு இயம்பும்என்ன

குன்ற வில் லாளி யாரும் 

  கூடலை யாற்றூர் ஏறச்

சென்றது இவ் வழிதான் என்று 

  செல்வழித் துணையாய்ச் செல்ல.  102 

 

 

கண்டவர் கைகள் கூப்பித் தொழுது 

  பின் தொடர்வார்க் காணார்

வண்டலர் கொன் றையாரை வடிவுடை 

  மழு என்று ஏத்தி

அண்டர் தம் பெருமான் போந்த 

  அதிசயம் அறியேன் என்று

கொண்டு எழும் விருப் பினோடும் 

  கூடலை யாற்றூர் புக்கார்.  103 

 

 

கூடலை ஆற்றூர் மேவும் கொன்றை 

  வார் சடை யினார்தம்

பீடு யர் கோயில் புக்குப் 

  பெருகிய ஆர்வம் பொங்க

ஆடகப் பொது வில் ஆடும் 

  அறைகழல் வணங்கிப் போற்றி

நீடு அருள் பெற்றுப் போந்து 

  திருமுது குன்றில் நேர்ந்தார்.  104 

 

 

தட நிலைக் கோபுரத்தைத் தாழ்ந்து 

  முன் இறைஞ்சிக் கோயில்

புடை வலம் கொண்டு புக்குப் 

  போற்றினர் தொழுது வீழ்ந்து

நடம் நவில்வாரை நஞ்சி இடை 

  எனும் செம் சொல்மாலைத்

தொடை நிகழ் பதிகம் பாடித் 

  தொழுதுகை சுமந்து நின்று.  105 

 

 

நாதர்பால் பொருள் தாம் வேண்டி 

  நண்ணிய வண்ணம் எல்லாம்

கோதறு மனத்துள் கொண்ட குறிப் 

  பொடும் பரவும் போது

தாது அவிழ் கொன்றை வேய்ந்தார் 

  தரஅருள் பெறுவார் சைவ

வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் 

  வெண் பொடியும் பாட.  106 

 

 

பனி மதிச் சடையார் தாமும் 

  பன்னிரண் டாயிரம் பொன்

நனி அருள் கொடுக்கும் ஆற்றால் 

  நல்கிட உடைய நம்பி

தனி வரும் மகிழ்ச்சி பொங்கத் 

  தாழ்ந்து எழுந்து அருகுசென்று

கனி விடம் மிடற்றினார் முன் 

  பின்ஒன்று கழறல் உற்றார்.  107 

 

 

அருளும் இக் கனகம் எல்லாம் 

  அடியனேற்கு ஆரூர் உள்ளோர்

மருளுற வியப்ப அங்கே வரப் 

  பெற வேண்டும் என்னத்

தெருளுற எழுந்த வாக்கால் செழு 

  மணி முத்தாற்றில் இட்டிப்

பொருளினை முழுதும் ஆரூர்க் குளத்தில் 

  போய்க் கொள்க என்றார்.  108 

 

 

என்று தம்பிரானார் நல்கும் இன் 

  அருள் பெற்ற பின்னர்

வன்தொண்டர் மச்சம் வெட்டிக்கைக் கொண்டு 

  மணி முத்து ஆற்றில்

பொன் திரள் எடுத்து நீருள் 

  புகவிட்டுப் போது கின்றார்

அன்று எனை வலிந்து ஆட்கொண்ட 

  அருள் இதில் அறிவேன்என்று.  109 

 

 

மேவிய காதல் தொண்டு விரவு 

  மெய் விருத்தி பெற்றார்

ஆவி யின் விருத்தி ஆன 

  அந்தணர் புலியூர் மன்றில்

காவியங் கண்டர் கூத்து கண்டு 

  கும்பி டுவது என்று

வாவி சூழ்தில்லை மூதூர் வழிக் 

  கொள்வான் வணங்கிப் போந்தார்.  110 

 

 

மாடுள பதிகள் சென்று வணங்கிப் 

  போய் மங்கை பாகர்

நீடிய கடம்பூர் போற்றி நிறைந்த 

  ஆனந் தக் கூத்தர்

ஆடிய தில்லை மூதூர் அணைந்து 

  அணி வாயில் புக்குச்

சேடுயர் மாடம் மன்னும் செழும் 

  திரு வீதி சார்ந்தார்.  111 

 

 

பொன் திரு வீதி தாழ்ந்து 

  புண்ணிய விளைவாய் ஓங்கும்

நல்திரு வாயில் நண்ணி நறை 

  மலி அலங்கல் மார்பர்

மற்றதன் முன்பு மண்மேல் வணங்கி 

  உள்புகுந்து பைம் பொன்

சுற்று மாளிகை சூழ்வந்து தொழுது 

  கை தலைமேல் கொள்வார்.  112 

 

 

ஆடிய திரு முன்பான 

  அம் பொனின் கோபுரத்தின்

ஊடுபுக்கு இறைஞ்சி ஓங்கும் 

  ஒளிவளர் கனக மன்றில்

நாடகச் செய்ய தாளை நண் 

  ணுற உள் நிறைந்து

நீடும் ஆனந்த வெள்ளக் 

  கண்கள் நீர் நிறைந்து பாய.  113 

 

 

பரவுவாய் குளறிக் காதில் படி 

  திருப் படியைத் தாழ்ந்து

விரவு மெய் அங்கம் ஐந்தும் 

  எட்டினும் வணங்கி வேட்கை

உர னுறு திருக்கூத்து உள்ளம் 

  ஆர்தரப் பெருகி நெஞ்சில்

கரவு இலாத அவரைக் கண்ட 

  நிறைவு தம்கருத்தில் கொள்ள.  114 

 

 

மடித்து ஆடும் அடிமைக்கண் என்று எடுத்து 

  மன்உயிர் கட்கு அருளும் ஆற்றல்

அடுத்து ஆற்று நல் நெறிக்கண் நின்றார்கள் 

  வழுவி நரகு அணையா வண்ணம்

தடுப் பானைப் பேரூரில் கண்ட நிலை 

  சிறப்பித்துத் தனிக்கூத்து என்றும்

நடிப் பானை நாம் மனமே பெற்றவாறு 

  எனும் களிப்பால் நயந்து பாடி.  115 

 

 

மீளாத அருள் பெற்றுப் புறம் போந்து 

  திரு வீதி மேவித் தாழ்ந்தே

ஆளான வன் தொண்டர் அந்த ணர்கள் 

  தாம் போற்ற அமர்ந்து வைகி

மாளாத பேர் அன்பால் பொன் பதியை 

  வணங்கிப் போய் மறலி வீழத்

தாள் ஆண்மை கொண்டவர் தம் கருப் 

  பறியலூர் வணங்கிச் சென்று சார்ந்தார்.  116 

 

 

கூற்று உதைத்தார் திருக் கொகுடிக் கோயில் 

  நண்ணிக் கோபுரத்தைத் தொழுதுபுகுந்து அன்பர்சூழ  

ஏற்ற பெருங் காதலினால் இறைஞ்சி ஏத்திஎல்லை 

  இலாப் பெருமகிழ்ச்சி மனத்தில் எய்தப்

போற்றி சைத்துப் புறத்து அணைந்தப் பதியில் 

  வைகிப்புனிதர் அவர்தமை நினையும் இன்பம்கூறி

சாற்றிய மெய்த்திருப் பதிகம் சிம்மாந்து என்னும் 

  தமிழ்மாலை புனைந்து அங்குச்சாரும் நாளில்.  117 

 

 

கண் நுதலார் விரும்பு கருப்பறியலூரைக் கை 

  தொழுது நீங்கிப் போய்க் கயல்கள் பாயும்

மண்ணி வளம்படிக் கரையை நண்ணி அங்கு 

  மாதுஒரு பாகத்தவர்தாள் வணங்கிப் போற்றி

எண்ணில் புகழ்ப் பதிகமும் முன்னவன் என்று 

  ஏத்தி ஏகுவார் வாழ்கொளிபுத்தூர் எய்தாது

புண்ணி யனார் போம் பொழுது நினைந்து 

  மீண்டுபுகுகின்றார் தலைக்கலன் என்று எடுத்துப்போற்றி.  118 

 

 

திருப்பதிகம் பாடியே சென்று அங்கு எய்தித் 

  தேவர் பெருமானார் தம்கோயில் வாயில்

உருப் பொலியும் மயிர்ப்புளகம் விரவத் தாழ்ந்தே 

  உள்அணைந்து பணிந்து ஏத்திஉருகும் அன்பால்

பொருப்பரையன் மடப்பாவை இடப் பாலானைப் போற்றி 

  இசைத்துப் புறம்போந்து தங்கிப்பூ மென்

கருப்பு வயல் வாழ்கொளி புத்தூரை நீங்கிக்கான் 

  நாட்டு முள்ளூரில் கலந்த போது.  119 

 

 

கான் நாட்டு முள்ளூரைச் சாரும் போது 

  கண்நுதலார் எதிர்காட்சி கொடுப்பக் கண்டு

தூநாண் மென்மலர்க் கொன்றைச் சடையார் செய்ய 

  துணைப் பாதமலர் கண்டு தொழுதேன்என்று

வான்ஆளும் திருப் பதிகம் வள்வாய் என்னும் வன் 

 தமிழின் தொடைமாலை மலரச் சாத்தித்

தேன்ஆரும் மலர்ச்சோலை மருங்கு சூழ்ந்த திரு

  எதிர்கொள் பாடியினை எய்தச் செல்வார்.  120 

 

 

எத்திசையும் தொழுது ஏத்த மத்தயானை எடுத்து 

  எதிர்கொள் பாடியினை அடைவோம் என்னும்

சித்தநிலைத் திருப்பதிகம் பாடி வந்து செல்வம்மிகு 

  செழும் கோயில் இறைஞ்சி நண்ணி

அத்தர்தமை அடிவணங்கி அங்கு வைகி அருள் 

  பெற்றுத் திரு வேள்விக்குடியில் எய்தி

முத்திதரும் பெருமானைத் துருத்தி கூட மூப்பதிலை 

  எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார்.  121 

 

 

காட்டு நல் வேள்விக் கோலம் 

  கருத்துற வணங்கிக் காதல்

நாட்டிய உள்ளத் தோடு நம்பி 

 ஆரூ ரர் போற்றி

ஈட்டிய தவத்தோர் சூழ அங்கு 

  நின்று ஏகி அன்பு

பூட்டி ஆட் கொண்டார் மன்னும் 

  தானங்கள் இறைஞ்சிப் போந்து.  122 

 

 

எஞ்சாத பேர் அன்பில் திருத் 

  தொண்டர் உடன் எய்தி

நஞ்சாரும் கறை மிடற்றார் இடம் 

  பலவும் நயந்து ஏத்தி

மஞ்சாரும் பொழில் உடுத்த மலர்த் 

  தடங்கள் புடை சூழும்

செஞ்சாலி வயல் மருதத் திருவா 

  ரூர் சென்று அடைந்தார்.  123 

 

 

செல்வ மலி திருவாரூர்த் 

  தேவரொடு முனிவர்களும்

மல்கு திருக் கோபுரத்து வந்து 

  இறைஞ்சி உள்புக்கு அங்கு

எல்லை இலாக்காதல் மிக எடுத்த 

  மலர்க் கை குவித்துப்

பல்கு திருத் தொண்டர் உடன் 

  பரமர் திருமுன் அணைந்தார்.  124 

 

 

மூவாத முதல் ஆகி நடு 

  வாகி முடி யாத

சே வாரும் கொடி யாரைத் 

  திரு மூலட் டானத்துள்

ஓவாத பெரும் காதல் உடன் 

  இறைஞ்சிப் புறம் போந்து

தாவாத புகழ்ப் பரவையார் திரு 

  மாளிகை சார்ந் தார்.  125 

 

 

பொங்கு பெரு விருப்பினொடு புரி 

  குழலார் பலர் போற்றப்

பங்கயக் கண் செங் கனிவாய்ப் 

  பரவையார் அடி வணங்கி

எங்களையும் நினைந்து அருளிற்று என 

  இயம்ப இனிது அளித்து

மங்கை நல்லார் அவரோடு மகிழ்ந்து 

  உறைந்து வைகும் நாள்.  126 

 

 

நாயனார் முது குன்றர் நமக்கு 

  அளித்த நல் நிதியம்

தூய மணி முத்தாற்றில் புக 

  விட்டேம் துணைவர் அவர்

கோயிலின் மாளிகை மேல் பாற் 

  குளத்தில் அவர் அருளாலே

போய் எடுத்துக் கொடு போதப் 

  போது வாய் எனப்புகல.  127 

 

 

என்ன அதிசயம் இது தான் 

  என் சொன்னவாறு என்று

மின்இடையார் சிறு முறுவல் உடன் 

  விளம்ப மெய் உணர்ந்தார்

நன் நுதலாய் என்னு டைய 

  நாதன் அருளால் குளத்தில்

பொன் அடைய எடுத்து உனக்குத் 

  தருவது பொய்யாது என்று.  128 

 

 

ஆங்கு அவரும் உடன்போத அளவு 

  இறந்த விருப்பின் உடன்

பூங் கோயில் உள் மகிழ்ந்த 

  புராதனரைப் புக்கு இறைஞ்சி

ஓங்கு திருமாளிகையை வலம் வந்து 

  அங்கு உடன் மேலைப்

பாங்கு திருக் குளத்து அணைந்தார் 

  பரவையார் தனித் துணைவர்.  129 

 

 

மற்றதனில் வட கீழ்பால் கரை 

  மீது வந்து அருளி

முற்று இழையார் தமை நிறுத்தி 

  முனைப் பாடித் திருநாடர்

கற்றை வார் சடையாரைக் கை 

  தொழுது குளத்தில் இழிந்து

அற்றை நாள் இட்டு எடுப்பார் 

  போல் அங்குத் தடவுதலும்.  130 

 

 

நீற்றழகர் பாட்டு உவந்து திரு 

  விளை யாட்டினில் நின்று

மாற்றுறு செம் பொன் குளத்து 

  வருவியாது ஒழிந்து அருள

ஆற்றினில் இட்டுக் குளத்தில் தேடு 

  வீர் அருள் இதுவோ

சாற்றும் எனக்கோல் தொடியார் மொழிந்து 

  அருளத் தனித் தொண்டர்.  131 

 

 

முன்செய்த அருள் வழியே முருகு 

  அலர் பூங்குழல் பரவை

தன் செய்ய வாயில் நகை 

  தாராமே தாரும் என

மின்செய்த நூல் மார்பின் வேதியர் 

  தாம் முது குன்றில்

பொன் செய்த மேனி இனீர் 

  எனப் பதிகம் போற்றிசைத்து.  132 

 

 

முட்ட இமை யோர் அறிய முது குன்றில் தந்த பொருள்

சட்ட நான் பெறாது ஒழிந்த தளர்வினால் கையறவாம்

இட்டளத்தை இவள் எதிரே கொடுத்து அருளும் எனும் திருப்பாட்டு

எட்டளவும் பொன் காட்டாது ஒழிந்து அருள ஏத்துவார்.  133 

 

 

ஏத்தாதே இருந்து அறியேன் எனும் 

  திருப்பாட்டு எவ்வுலகும்

காத்தாடும் அம்பலத்துக் கண்ணு

  ளனாம் கண் நுதலைக்

கூத்தாதந்து அருள்வாய் இக் 

  கோமளத்தின் முன் என்று

நீத்தாரும் தொடர் அரியநெறி 

  நின்றார் பரவுதலும்.  134 

 

 

கொந்து அவிழ் பூங்கொன்றை 

  முடிக் கூத்தனார் திரு அருளால்

வந்து எழும் பொன்திரள் எடுத்து 

  வரன்முறையால் கரை ஏற்ற

அந்தரத்து மலர் மாரி  

 பொழிந்து இழிந்தது அவனியுளோர்

இந்த அதிசயம் என்னேயார் 

  பெறுவார் எனத் தொழுவார்.  135 

 

 

ஞாலம் வியப்பு எய்த வரும் 

  நல் கனக மிடை எடுத்து

மூலம் எனக் கொடு போந்த 

  ஆணியின் முன் உரைப் பிக்க

நீல மிடற்றவர் அருளால் 

  உரை தாழப் பின்னும் நெடு

மால் அயனுக்கு அரிய கழல் 

  வழுத் தினார் வன் தொண்டர்.  136 

 

 

மீட்டும் அவர் பரவுதலும் மெய் 

  அன்பர் அன்பில் வரும்

பாட்டு வந்து கூத்து உவந்தார் 

  படுவாசி முடிவு எய்தும்

ஓட்டறு செம்பொன் ஓக்க 

  ஒரு மாவும் குறையாமல்

காட் டுதலும் மகிழ்ந்து எடுத்துக் 

  கொண்டு கரை ஏறினார்.  137 

 

 

கரை ஏறிப் பரவையார் உடன் 

 கனகம் ஆனது எலாம்  

நிரையே ஆளில் சுமத்தி நெடு 

 நிலை மாளிகை போக்கித்

திரை யேறும் புனல் சடிலத் 

  திரு மூலத் தானத்தார்

விரை யேறு மலர் பாதம் 

  தொழுது அணைந்தார் வீதியினில்.  138 

 

 

வந்து திரு மாளிகையின் உள் 

  புகுந்து மங்கல வாழ்த்து

அந்தமிலா வகை ஏத்தும் அளவு 

  இறந்தார் ஒலி சிறப்பச்

சிந்தை நிறை மகிழ்ச்சி உடன் 

  சேயிழை யாருடன் அமர்ந்தார்

கந்த மலி மலர்ச் சோலை 

  நாவலர் தம் காவலனார்.  139 

 

 

அணி ஆரூர் மணி புற்றின் 

  அமர்ந்தருளும் பரம் பொருளைப்

பணிவார் அங்கு ஒரு நாளில் 

  பாராட்டும் திருப் பதிகம்

தணி யாத ஆனந்தம் தலை 

  சிறப்பத் தொண்டர் உடன்

துணிவு ஆய பொருள் வினவித் 

  தொழுது ஆடிப் பாடுவார்.  140 

 

 

பண்ணி றையும் வகை பாறு 

  தாங்கி என எடுத்து அருளி

உண்ணி றையும் மனக் களிப்பால் 

  உறு புளகம் மயிர் முகிழ்ப்ப

கண்ணி றையும் புனல் பொழி 

  யக் கரை இகந்த ஆனந்தம்

எண்ணி றைந்த படி தோன்ற

  ஏத்தி மகிழ்ந்து இன் புற்றார்.  141 

 

 

இன் புற்று அங்கு அமர்நாளில் 

  ஈறில் அரு மறை பரவும்

வன் புற்றின் அரவு அணிந்த  

 மன்ன வனார் அருள் பெற்றே

அன் புற்ற காதல் உடன் 

  அளவு இறந்த பிற பதியும்

பொன் புற்கு என்றிட ஒளிரும் 

  சடை யாரைத் தொழப் போவார்.  142 

 

 

பரிசன மும் உடன் போதப் 

  பாங்கு அமைந்த பதிகள் தொறும்

கரி யுரிவை புனைந்தார் தம் 

  கழல் தொழுது மகிழ்ந்து ஏத்தித்

துரிசறு நல் பெரும் தொண்டர் 

  நள் ளாறு தொழு வதற்குப்

புரிவுறு மெய்த் திருத்தொண்டர் எதிர் 

  கொள்ளப் புக்கு அணைந்தார்.  143 

 

 

விண் தடவு கோபுரத்தைப் பணிந்து 

  கரம் மேல் குவித்துக்

கொண்டு புகும் தண் ணலார் 

  கோயிலினை வலம் செய்து

மண்டிய பேர் அன்பி னொடு 

 மன்னும் திரு நள்ளாறர் 

புண்டரிகச் சேவடிக் கீழ் பொருந்த 

  நிலம் மிசைப் பணிந்தார்.  144 

 

 

அங்கண் ணரைப் பணிந்து ஏத்தி 

  அருளினால் தொழுது போய்

மங்குல் அணி மணி மாடத் 

  திருக்கடவூர் வந்து எய்தித்

திங்கள் வளர் முடியார் தம் 

  திரு மயானமும் பணிந்து

பொங்கும் இசைப் பதிகம் மருவார் 

  கொன்றை எனப் போற்றி.  145 

 

 

திரு வீரட் டானத்துத் தேவர் 

 பிரான் சினக் கூற்றின்

பொரு வீரந் தொலைத்த கழல்  

  பணிந்து பொடியார் மேனி

மருஈரத் தமிழ் மலை புனைந்து 

  ஏத்தி மலை வளைத்த

பெருவீரர் வலம் புரத்துப் பெருகு 

  ஆர்வத் தொடும் சென்றார்.  146 

 

 

வரையோடு நிகர் புரிசை வலம் 

  புரத்தார் கழல் வணங்கி

உரை ஓசைப் பதிகம் எனக்கு 

  இனிஓதிப் போய்ச் சங்கம்

நிரையோடு துமித் தூப மணித் 

  தீபம் நித்திலப் பூம்

திரை ஓதம் கொண்டு இறைஞ்சும் 

  திருச் சாய்க்காடு எய்தினார்.  147 

 

 

தேவர் பெருமான் தன்னைத் திருச் 

  சாய்க் காட்டினில் பணிந்து

பாவலர் செம் தமிழ் மாலைத் 

  திருப் பதிகம் பாடிப்போய்

மேவலர் தம் புரம் எரித்தார் 

  வெண்காடு பணிந்து ஏத்தி

நாவலர் காவலர் அடைந்தார் நனி 

  பள்ளித் திரு நகரில்.  148 

 

 

நனிபள்ளி அமர்ந்த பிரான் கழல் 

  வணங்கி நல் தமிழின்

புனித நறும் தொடை புணைந்து 

  திருச்செம்பொன் பள்ளி முதல்

பனி மதிசேர் சடையார் தம் 

  பதிபலவும் பணிந்து போய்த்

தனி விடை மேல் வருவார் 

  தம் திருநின்றியூர் சார்ந்தார்.  149 

 

 

நின்றியூர் மேயாரை நேயத்தால் 

  புக்கு இறைஞ்சி

ஒன்றிய அன்பு உள்உருகப் 

  பாடுவார் உடையஅரசு

என்றும் உலகு இடர் 

  நீங்கப்பாடிய ஏழ்எழுநூறும்

அன்று சிறப்பித்து அம்சொல் 

  திருப்பதிகம் அருள் செய்தார்.  150 

 

 

அப்ப தியில் அன்பருடன் அமர்ந்து 

  அகல்வார் அகல் இடத்தில்

செப்ப அரிய புகழ் நீடூர் 

  பணியாது செல் பொழுதில்

ஒப்பஅரிய உணர்வினால் நினைந்து 

  அருளி தொழல் உறுவார்

மெய்ப்பொருள் வண் தமிழ் மலை 

  விளம்பியே மீண்டு அணைந்தார்.  151 

 

 

மடல் ஆரும் புனல் நீடூர் 

  மருவினர் தாள் வணங்காது

விடல் ஆமே எனும் காதல் 

  விருப்பு உறும் அத்திருப்பதிகம்

அடல் ஆர் சூலப் படையார் 

  தமைப் பாடி அடிவணங்கி

உடல்ஆரும் மயிர்ப் புளகம் மிகப் 

  பணிந்து அங்கு உறைகின்றார்.  152 

 

 

அம்கண் இனிது அமர்ந்து அருளால் 

  திருப்புன் கூர் அணைந்து இறைஞ்சிக்

கொங்கு அலரும் மலர்ச் சோலைத் 

  திருக் கோலக்கா அணையக்

கங்கை சடைக் கரந்தவர் தாம் எதிர் காட்சி கொடுத்து அருளப்

பொங்கு விருப்பால் தொழுது திருப்பதிகம் போற்றி இசைப்பார்.  153 

 

 

திருஞான சம்பந்தர் திருக்

  கைகளால் ஒற்றிப்

பெருகுஆர்வத்துடன் பாட பிஞ்ஞ 

  கனார் கண்டுஇரங்கி

அருளாலே திருத்தாளம் அளித்

  தபடி சிறப்பித்துப்

பொருள் மாலைத் திருப்பதிகம் 

  பாடியே போற்றிஇசைத்தார்.  154 

 

 

மூவாத முழு முதலார் 

  முதல் கோலக்கா அகன்று

தாவாதபுகழ் சண்பை வலம் 

  கொண்டு தாழ்ந்து இறைஞ்சி

நாவார் முத்தமிழ் விரகர் 

  நற்பதங்கள் பரவிப் போய்

மேவார் தம் புரம் 

  செற்றார் குருகாவூர் மேவுவார்.  155 

 

 

உண் நீரின் வேட்கை உடன் 

  உறுபசியால் மிக வருந்தி

பண்நீர்மை மொழிப் பரவையார் 

  கொழுநர் வரும் பாங்கர்க்

கண் நீடுதிரு நுதலார் காதல் 

  வரக் கருத்து அறிந்து

தண்ணீரும் பொதி சோறும் 

  கொண்டு வழிச் சார்கின்றார்.  156 

 

 

வேனில் உறுவெயில் வெம்மை தணிப்

  பதற்கு விரைக் குளிர் மென்

பான் நல் மலர்த்தடம் போலும் 

  பந்தர் ஒருபால் அமைத்தே

ஆன மறை வேதியராய் அருள் 

  வேடம் கொண்டி ருந்தார் 

மான் அமரும் திருக் கரத்தார் 

  வன்தொண்டர் தமைப் பார்த்து.  157 

 

 

குருகாவூர் அமர்ந்து அருளும் குழகர் 

  வழி பார்த் திருப்பத்

திருவா ரூர்த் தம்பிரான் தோழர் 

  திருத் தொண்டர் உடன்

வருவார் அப்பந்தர் இடைப் புகுந்து 

  திரு மறைவர் பால்

பெருகு ஆர்வம் செல இருந்தார் 

  சிவாயநம எனப் பேசி.  158 

 

 

ஆலநிழல் கீழ் இருந்தார் அவர் 

  தம்மை எதிர் நோக்கிச்

சால மிகப் பசித்தீர் இப் 

  பொதி சோறு தருகின்றேன்

காலம் இனித்தாழாமே கைக் கொண்டு 

  இங்கு இனிது அருந்தி

ஏல நறும்குளிர் தண்ணீர் குடித்து 

  இளைப்பு தீரும் என.  159 

 

 

வன்தொண்டர் அது கேட்டு மறை 

  முனிவர் தரும் பொதி சோறு

இன்று நமக்கு எதிர் விலக்கல் 

  ஆகாது என்று இசைந்து அருளிப்

பொன் தயங்கு நூல் மார்பர் 

  தரும் பொதிசோறு அது வாங்கிச்

சென்று திருத் தொண்ட ருடன் 

  திரு அமுது செய்து அருளி.  160 

 

 

எண் நிறைந்த பரிசனங்கள் எல்

  லாரும் இனிது அருந்தப்

பண்ணியபின் அம் மருங்கு பசித்து 

  அணைந் தார்களும் அருந்த

உண்ணி றைந்த ஆர முதாய் 

  ஒரு காலும் உலவாதே

புண்ணி யனார் தாம் அளித்த 

  பொதி சோறு பொலிந்ததால்.  161 

 

 

சங்கரனார் திரு அருள் போல் 

  தண்ணீரின் சுவை ஆர்ந்து

பொங்கி வரும் ஆதரவால் அவர் 

  நாமம் புகழ்ந்து ஏத்தி

அங்கு அயர்வால் பள்ளி அமர்ந்துஅருகு 

  அணைந்தார் களும் துயிலக்

கங்கை சடைக் கரந்தார் அப் 

  பந்தரொடும் தாம் கரந்தார்.  162 

 

 

சித்த நிலை திரியாத திரு 

  நாவ லூர் மன்னர்

அத் தகுதி யினில் பள்ளி 

  உணர்ந் தவரை காணாமை

இத்த னையா மாற்றம் அறிந் 

  திலேன் என எடுத்து

மெய்த் தகைய திருப் பதிகம் 

  விளம்பியே சென்று அடைந்தார்.  163 

 

 

குரு காவூர் அமர்ந்து அருளும் 

  குழகனார் கோயி லினுக்கு

அருகார் பொன் கோபுரத்தை அணைந்து 

  இறைஞ்சி உள் புக்கு

வருகாதல் கூர வலம் கொண்டு 

  திரு முன் வணங்கிப்

பருகா இன் அமு தத்தைக் 

  கண் களால் பருகினார்.  164 

 

 

கண்ணார்ந்த இன் அமுதை கை 

  ஆரத் தொழுது இறைஞ்சிப்

பண் ணார்ந்த திருப் பதிகம் 

  பாடியே பணிந்து ஏத்தி

உண் ணாடும் பெரும் காதல் 

  உடையவர்தாம் புறத்து எய்தி

நண்ணும் ஆர்வத் தொண்டருடன் அங்கு 

  இனிது நயந்து இருந்தார்.  165 

 

 

அந் நாளில் தம் பெருமான் 

 அருள் கூடப் பணிந்து அகன்று

மின் னார் செஞ்சடை முடியார் 

  விரும்பும் இடம் பல வணங்கிக்

கன் னாடும் எயில் புடை 

  சூழ் கழிப்பாலை தொழுது ஏத்தி

தென் னாவலூர் மன்னர் 

  திருத் தில்லை வந்து அடைந்தார்.  166 

 

 

சீர்வளரும் திருத்தில்லைத் திரு 

  வீதி பணிந்து புகுந்து

ஏர்வலர் பொன் திரு மன்றுள் 

  எடுத்த சேவடி இறைஞ்சிப்

பார்வளர மறை வளர்க்கும் பதி 

  அதனில் பணிந்து உறைவார்

போர் வளர் மேருச்சிலையார் திருத்தினை 

  மா நகர் புகுந்தார்.  167 

 

 

திருத்தினை மாநகர் மேவும் சிவக் 

  கொழுந்தைப் பணிந்து போய்

நிருத்தனார் அமர்ந்து அருளும் நிறை 

  பதிகள் பல வணங்கிப்

பொருத்த மிகும் திருத் தொண்டர் 

  போற்று திரு நாவலூர்

கருத்தில் வரும் ஆதரவால் கை 

  தொழச் சென்று எய்தினார்.  168 

 

 

திருநாவலூர் மன்னர் சேர்கின்றார் 

  எனக் கேட்டுப்

பெரு நாமப் பதியோரும் 

  தொண்டர்களும் பெருவாழ்வு

வருநாள்என்று அலங்கரித்து வந்து 

  எதிர்கொண்டு உள்அணையச்

செருநாகத்து உரிபுனைந்தார் செழுங்கோயில் 

  உள் அணைந்தார்.  169 

 

 

மேவிய அத் தொண்டர் குழாம் 

  மிடைந்து அர என்று எழும் ஓசை

மூவு லகும் போய் ஒலிப்ப 

  முதல் வனார் முன்பு எய்தி

ஆவி யினும் அடைவு டையார் 

  அடிக் கமலத்து அருள் போற்றிக்

கோவலன் நான் முகன் எடுத்துப் 

  பாடியே கும் பிட்டார்.  170 

 

 

நலம் பெருகும் அப்பதியில் 

  நாடி அன்பொடு நயந்து

குலம் பெருகும் திருத்தொண்டர் 

  குழாத்தோடும் இனிது அமர்ந்து

சலம் பெருகும் சடைமுடியார் 

  தாள் வணங்கி அருள்பெற்றுப்

பொலம் புரிநூல் மணிமார்பர் 

  பிறபதியும் தொழப் போவார்.  171 

 

 

தண்டகமாந் திருநாட்டுத் தனி 

  விடையார் மகிழ்விடங்கள்

தொண்டர் எதிர்கொண்டு அணையத் 

  தொழுது போய்த்தூய நதி

வண்டறை பூம்புறவு மலை 

  வளமருதம் பலகடந்தே

எண்திசை யோர் பரவு 

  திருக்கழுக் குன்றை எய்தினார்.  172 

 

 

தேன் ஆர்ந்த மலர்ச் சோலை 

  திருக்கழுக் குன்றத்து அடியார்

ஆனாத விருப் பினொடும் எதிர் 

  கொள்ள அடைந்து அருளித்

தூநாள் வெண்மதி அணிந்த சுடர்க் 

  கொழுந் தைத் தொழுது இறைஞ்சி

பா நாடும் இன் இசை 

  யின் திருப் பதிகம் பாடினார்.  173 

 

 

பாடிய அப்பதியின் கண் இனிது 

  அமர்ந்து பணிந்து போய்

நாடிய நல்லுணர்வின் ஒடும் திருக் 

  கச்சூர் தனை நண்ணி

ஆடக மாமதில் புடை சூழ் 

  ஆலக் கோயிலின் அமுதைக்

கூடிய மெய்அன்பு உருகக் கும் 

  பிட்டுப் புறத்து அணைந்தார்.  174 

 

 

அணைந்து அருளும் அவ்வேலை 

  அமுது செயும் பொழுதாகக்

கொணர்ந்த அமுது சமைத்து 

  அளிக்கும் பரிசனமும் குறுகாமை

தணந்த பசி வருத் 

  தத்தால் தம்பிரான் திருவாயில்

புணர்ந்த மதில் புறத்து 

  இருந்தார் முனைப்பாடி புரவலனார்.  175 

 

 

வன்தொண்டர் பசி தீர்க்க மலையின் 

  மேல் மருந்து ஆனார்

மின்தங்கு வெண் தலையோடு ஒழிந்து 

  ஒரு வெற்றோடு ஏந்தி

அன்று அங்கு வாழ்வார் ஓர் 

  அந்த ணராய்ப் புறப்பட்டுச்

சென்று அன்பர் முகம் நோக்கி 

  அருள் கூறச் செப்புவார்.  176 

 

 

மெய்ப் பசியால் மிகவருந்தி இனைத்து

  இருந்தீர் வேட் கைவிட

இப் பொழுதே சோறிரந்து இங்கு 

  யான் உமக்குக் கொணர்கின்றேன்

அப்புறம் நீர் அகலாதே சிறிது 

  பொழுது அமரும் எனச்

செப்பி அவர் கச்சூர் மனை 

  தோறும் சென்றிரப்பார்.  177 

 

 

வெண் திரு நீறு அணி திகழ 

  விளங்குநூல் ஒளி துளங்கக்

கண்டவர்கள் மனம் உருகக் கடும் 

  பகல்போது இடும் பலிக்குப்

புண்டரிகக் கழல் புவிமேல் பொருந்த 

  மனை தொறும் புக்குக்

கொண் டுதாம் விரும்பி ஆட் 

  கொண்டவர் முன் கொடுவந்தார்.  178 

 

 

இரந்து தாம் கொடு வந்த 

  இன் அடிசிலும் கறியும்

அரந்தை தரும் பசி தீர 

  அருந்துவீர் என அளிப்ப

பெருந்தகையார் மறையவர் தம் பேர் 

  அருளின் திறம் பேணி

நிரந்த பெரும் காத லினால் 

  நேர் தொழுது வாங்கினார்.  179 

 

 

வாங்கிய அத்திரு அமுது வன் 

  தொண்டர் மருங்கு அணைந்த

ஓங்கு தவத் தொண்டருடன் உண்டு 

  அருளி உவந்து இருப்ப

ஆங்கு அருகு நின்றார் போல் அவர் 

  தம்மை அறி யாமே

நீங் கினார் எப் பொருளும் 

  நீங்காத நிலைமை யினார்.  180 

 

 

திரு நாவலூ ராளி சிவ 

  யோகி யார் நீங்க  

வரு நாம மறைய வனார் 

  இறையவனார் என மதித்தே

பெரு நாதச்சிலம்பு அணி சேவடி 

  வருந்த பெரும்பகல் கண்

உருநாடி எழுந்து அருளிற்று என் 

  பொருட்டாம் என உருகி.  181 

 

 

முதுவாயோரி என்று எடுத்து முதல்

  வனார் தம் பெரும் கருணை

அதுவாம் இது என்று அதிசயம் வந்து 

  எய்தக் கண்ணீர் மழை அருவி

புதுவார் புனலின் மயிர்ப் புளகம் 

  புதையப் பதிகம் போற்றி இசைத்து

மதுவார் இதழி முடி யாரைப் 

  பாடி மகிழ்ந்து வணங் கினார்.  182 

 

 

வந்தித்து இறைவர் அருளால் போய் 

 மங்கை பாகர் மகிழ்ந்த இடம்

முந்தித் தொண்டர் எதிர் கொள்ளப் 

  புக்கு முக் கண் பெருமானைச்

சிந்தித்திட வந்து அருள் செய் 

  கழல் பணிந்து செஞ்சொல் தொடைபுனைந்தே

அந்திச் செக்கர்ப் பெருகு ஒளியார் 

  அமரும் காஞ்சி மருங்கு அணைந்தார்.  183 

 

 

அன்று வெண் ணெய் நல்லூரில் 

  அரியும் அயனும் தொடர் அரிய

வென்றி மழ வெள் விடை 

  உயர்த்தார் வேத முதல்வராய் வந்து

நின்று சபைமுன் வழக்கு உரைத்து 

  நேரே தொடர்ந்து ஆட்கொண்டவர் தாம்

இன்று இங்கு எய்தப் பெற்றோம் 

 என்று எயில்சூழ்காஞ்சி நகர் வாழ்வார்.  184 

 

 

மல்கு மகிழ்ச்சி மிகப் பெருக 

  மறுகு மணித் தோரணம் நாட்டி

அல்கு தீபம் நிறை குடங்கள் 

  அகிலின் தூபம் கொடி எடுத்துச்

செல்வ மனைகள் அலங் கரித்து 

  தெற்றி ஆடல் முழவு அதிரப்

பல்கு தொண்டருடன் கூடிப் பதியின் 

 புறம் போய் எதிர் கொண்டார்.  185 

 

 

ஆண்ட நம்பி எதிர் கொண்ட 

  அடி யார் வணங்க எதிர்வணங்கி

நீண்ட மதில் கோபுரம் கடந்து 

  நிறை மாளிகை வீதியில் போந்து

பூண்ட காதல் வாழ்த் தினுடன் 

 புனை மங்கல தூரியம் ஒலிப்ப

ஈண்டு தொண்டர் பெருகு திரு 

 ஏகாம் பரம் சென்று எய்தினார்.  186 

 

 

ஆழி நெடுமால் அயன் முதலாம் 

  அமரர் நெருங்கு கோபுரம் முன்

பூழியுற மண் மிசை மேனி 

  பொருந்த வணங்கிப் புகுந்து அருளிச்

சூழு மணி மாளிகை பலவும் 

  தொழுது வணங்கி வலம் கொண்டு

வாழி மணிப் பொன் கோயிலினுள் 

  வந்தார் அணுக்க வன் தொண்டர்.  187 

 

 

கைகள் கூப்பி முன் அணை 

  வார் கம்பை ஆறு பெருகிவர

ஐயர் தமக்கு மிக அஞ்சி 

  ஆரத் தழுவிக் கொண்டு இருந்த

மைஉலாவும் கரும் நெடும் கண் 

  மலை யாள் என்றும் வழிபடுபூஞ்

செய்ய கமலச் சேவடிக் கீழ்த் 

  திருந்து காத லுடன் வீழ்ந்தார்.  188 

 

 

வீழ்ந்து போற்றிப் பரவ சமாய் 

 விம்மி எழுந்து மெய்யன்பா ல்

வாழ்ந்த சிந்தை உடன் பாடிமாறா 

  விருப்பில் புறம் போந்து

சூழ்ந்த தொண்டருடன் மருவும்நாளில் 

  தொல்லைக் கச்சி நகர்த்

தாழ்ந்த சடை யார் ஆலயங்கள் 

  பலவும் சார்ந்து வணங்குவார்.  189 

 

 

சீரார் காஞ்சி மன்னும் திருக் 

  காமக் கோட்டம் சென்று இறைஞ்சி

நீரார் சடையார் அமர்ந்து அருளும் 

  நீடு திரு மேற்றளி மேவி

ஆரா அன்பில் பணிந்து ஏத்தும் 

  அளவில் நுந்தா ஒண் சுடராம்

பாரார் பெருமைத் திருப் பதிகம் 

  பாடி மகிழ்ந்து பர வினார்.  190 

 

 

ஓண காந்தன் தளி மேவும் 

  ஒருவர் தம்மை உரிமையுடன்

பேணி அமைந்த தோழமையால் பெருகும் 

  அடிமைத் திறம் பேசிக்

காண மோடு பொன்வேண்டி நெய்யும் 

  பாலும் கலை விளங்கும்

யாணர்ப்பதிகம் எடுத்து ஏத்தி எண்ணில் 

  நிதிபெற்று இனிது இருந்தார்.  191 

 

 

அங்கண் அமர்வார் அனே கதங்கா 

  பதத்தை எய்தி உள்ள ணைந்து

செங்கண் விடையார் தமைப் பணிந்து 

  தேன் நெய்புரிந்து என்று எடுத்ததமிழ் 

தங்கும் இடமாம் எனப் பாடித் 

  தாழ்ந்து பிறவும் தானங்கள்

பொங்கு காத லுடன் போற்றிப் 

  புரிந்தபதியில் பொருந்து நாள்.  192 

 

 

பாடல் இசையும் பாணியினால் பாவைத் 

  தழுவக் குழைக் கம்பர்

ஆடல் மருவும் சேவடிகள் 

  பரவிப் பிரியாது அமர்கின்றார்

நீட மூதூர்ப் புறத்து இறைவர் 

  நிலவும் பதிகள் தொழவிருப்பால்

மாடம் நெருங்கு வன் பார்த்தான் 

  பனம்காட்டூரில் வந்து அடைந்தார்.  193 

 

 

செல்வம் மல்கு திருப்பனங் காட்டூரில் 

  செம் பொன் செழும் சுடரை

அல்லல் அறுக்கும் அரு மருந்தை 

  வணங்கி அன்பு பொழி கண்ணீர்

மல்க நின்று விடையின் மேல் 

  வருவான் எனும் வண்தமிழப் பதிகம்

நல்ல இசையின் உடன் பாடிப் 

  போந்து புறம்பு நண் ணுவார்.  194 

 

 

மன்னும் திருமால் பேறு அணைந்து 

  வணங்கிப் பரவித் திரு வல்லம்

தன்னுள் எய்தி இறைஞ்சிப் போய்ச்

  சாரும் மேல் பால் சடைக்கற்றைப்

பின்னல் முடியார் இடம் பலவும் 

  பேணி வனங்கிப் பெரும் தொண்டர் 

சென்னி முகில் தோய் தடம் 

  குவட்டுத் திருக் திருக்காளத்தி மலைசேர்ந்தார்.  195 

 

 

தடுக் கலா காப் பெருங் காதல் 

தலை நின்று அருளும் கண்ணப்பர்

இடுக்கண் களைந்து ஆட் கொண்டு 

  அருளும் இறைவர் மகிழ்ந்த காளத்தி

அடுக் கல் சேர அணைந்து 

  பணிந்து அருளால் ஏறி அன்பாறும்

அடுப்பத் திருமுன் சென்று எய்தி 

  மலை மேல் மருந்தை வணங்கினார்.  196 

 

 

வணங்கி உள்ளம் களி கூர 

  மகிழ்ந்து போற்றி மதுர இசை

அணங்கு செண் டாடு எனும் 

  பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர்

மணம் கொள் மலர்ச்சேவடி பணிந்து 

  வாழ்ந்து போந்து மன்னும் பதி

இணங்கு தொண்ட ருடன் கெழுமி 

  இன்புற்று இருக்கும் அந் நாளில்.  197 

 

 

வட மாதிரத்துப் பருப் பதம் 

  திருக் கேதார மலையும் முதல்

இடமா அரனார் தாம் உவந்த 

  எல்லாம் இங்கே இருந்து இறைஞ்சி

நடம் ஆடிய சேவடி யாரை 

 நண்ணி னார் போல் உள் நிறைந்து

திடமாம் கருத்தில் திருப் பதிகம் 

  பாடிக் காதல் சிறந்து இருந்தார்.  198 

 

 

அங்கு சிலநாள் வைகிய பின் 

  அருளால் போந்து பொரு விடையார்

தங்கும் இடங்கள் எனைப் பலவும் 

  சார்ந்து தாழ்ந்து தமிழ் பாடிப்

பொங்கு புணிரிக் கரை மருங்கு 

  புவியுள் சிவ லோகம் போலத்

திங்கள் முடியார் அமர்ந்த திரு 

  ஒற்றி யூரைச் சென்று அடைந்தார்.  199 

 

 

அண்ணல் தொடர்ந்து ஆவணம் காட்டி 

  ஆண்ட நம்பி எழுந்து அருள

எண்ணில் பெருமை ஆதி புரி 

  இறைவர் அடியார் எதிர் கொள்வார்

வண்ண வீதி வாயில் தொறும் 

  வாழை கமுகு தோர ணங்கள்

சுண்ண நிறை பொன் குடம் 

  தூப தீபம் எடுத்துத் தொழ எழுங்கால்.  200 

 

 

வர மங்கல நல்லியம் முழங்க 

  வாச மாலை அணி அரங்கில்

புர மங்கையர்கள் நடம் ஆடப் 

  பொழியும் வெள்ளப் பூ மாரி

அர மங்கையரும் அமரர் களும் 

  வீச அன்பர் உடன் புகுந்தார்

பிரமன் தலையில் பலியு வந்த 

  பிரா னார் விரும்பும் தொண்டர்.  201 

 

 

ஒற்றி ஊரின் உமை யோடும் 

  கூட நின்றார் உயர் தவத்தின்

பற்று மிக்க திருத்தொண்டர் பரந்த 

  கடல் போல் வந்து ஈண்டிச்

சுற்றம் அணைந்து துதி செய்யத் 

  தொழுது தம் பிரான் அன்பர்

கொற்ற மழ வேறு உடையவர்  

 தம் கோயில் வாயில் எய்தினார்.  202 

 

 

வானை அளக்கும் கோபு ரத்தை 

  மகிழ்ந்து பணிந்து புகுந்து வளர்

கூனல் இளம் வெண்பிறைச் சடையார் 

  கோயில் வலம் கொண்டு எதிர்குறுகி

ஊனும் உயிரும் கரைந்து உருக 

  உச்சி குவித்த கையின் உடன்

ஆன காதல் உடன் வீழ்ந் 

  தார் ஆரா அன்பின் ஆரூரர்.  203 

 

 

ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் 

  என்ன எழுத்து அறியும்

நாட்ட மலரும் திருநுதலார் நறும் 

  பொன் கமலச் சேவடியில்

கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து 

  கோதில் அமுத இசை கூடப்

பாட்டும் பாடி பரவி எனும் 

  பதிகம் எடுத்துப் பாடினார்.  204 

 

 

பாடி அறிவு பரவசமாம் பரிவு 

  பற்றப் புறம் போந்து

நீடுவிருப்பில் பெரும் காதல் நிறைந்த 

 அன்பர் பலர் போற்றத்

தேடும் அயனும் திரு மாலும் 

  அறிதற்கு அரிய திருப்பாதம்

கூடும் காலங்களில் அணைந்து பரவிக் 

  கும்பிட்டு இனிது இருந்தார்.  205 

 

 

இந்த நிலமையார் இவர் இங்கு 

  இருந்தார் முன்பே இவர்க்காக

அந்தண் கயிலைமலை நீங்கி அருளால் 

  போந்த அநித் திதையார்

வந்து புவி மேல் அவதரித்து 

  வளர்ந்து பின்பு வன்தொண்டர்

சந்தவிரை சூழ் புயம் சேர்ந்த 

  பரிசு தெரியச் சாற்றுவாம்.  206 

 

 

நாலாம் குலத்தில் பெருகு நலம் 

  உடையார் வாழும் ஞாயிற்றின்

மேலாங் கொள்கை வேளாண்மை மிக்க 

  திரு ஞாயிறு கிழவர்

பாலாதரவு தரும் மகளர் ஆகிப் 

  பார் மேல் அவதரித்தார்

ஆலாலஞ் சேர் கறை மிடற்றார் 

  அருளால் முன்னை அநிந்திதையார்.  207 

 

 

மலையான் மடந்தை மலர்ப் பாதம் 

  மறவா அன்பால் வந்த நெறி

தலையாம் உணர்வு வந்து அணையத் 

  தாமே அரிந்த சங்கி லியார்

அலையார் வேல் கண் சிறு 

  மகளிர் ஆயத் தோடும் விளையாட்டு

நிலை யாயின அப் பருவங்கள்  

 தோறும் நிகழ நிரம் புவார்.  208 

 

 

சீர்கொள் மரபில் வரும் செயலே 

  அன்றித் தெய்வ நிகழ் தன்மை

பாரில் எவரும் அதி சயிக்கும் 

  பண்பில் வளரும் பைந் தொடியார்

வாரும் அணிய அணியவாம் வளர் 

  மென் முலைகள் இடை வருத்தச்

சாரும் பதத்தில் தந்தையார் தம் 

 கண் மனைவி யார்க்கு உரைப்பார்.  209 

 

 

வடிவும் குணமும் நம்முடைய மகட்கு 

  மண் உள் ளோர்க்கு இசையும்

படிவம் அன்றி மேல் பட்ட 

  பரி சாம் பான்மை அறிகிலோம்

கடிசேர் மணமும் இனி நிகழும் 

  காலம் என் னக் கற்புவளர்

கொடியே அனைய மனை வியார் 

  ஏற்கும் ஆற்றாக் கொடும் என்றார்.  210 

 

 

தாய ரோடு தந்தையார் பேசக்

   கேட்ட சங்கி லியார்

ஏயு மாற்றம் அன்றி எம் 

  பெருமான் ஈசன் திரு அருளே

மேய ஒருவர்க்கு உரியது யான்வேறு என் 

  விளையும் என வெருவுற்(று)

ஆயஉணர்வு மயங்கி மிக அயர்ந்தே 

  அவனி மேல் விழுந்தார்.  211 

 

 

பாங்கு நின்ற தந்தையார் தாயார் 

  பதைத்துப் பரிந்து எடுத்தே

ஏங்கும் உள்ளத்தினர் ஆகி இவளுக்கு 

  என்னே உற்றது எனத்

தாங்கிச் சீத விரைப் பனி நீர் 

  தெளித்து தைவந்தது நீங்க

வாங்குசிலை நன்னுதலாரை வந்தது உனக்கு 

  இங்கு என்? என்றார்.  212 

 

 

என்று தம்மை ஈன்று எடுத்தார் 

  வினவ மறை விட்டு இயம்புவார்

இன்று என்திறத்து நீர் மொழிந்த 

  இது என் பரிசுக்கு இசையாது

வென்றி விடையார் அருள் செய்தார் 

  ஒருவர்க்கு உரியேன் யான் இனிமேல்

சென்று திரு ஒற்றியூர் அணைந்து 

  சிவனார் அருளில் செல்வன் என.  213 

 

 

அந்த மாற்றம் கேட்டவர் தாம் 

  அயர்வும் பயமும் அதிசயமும்

வந்த உள்ளத்தினர் ஆகி மற்ற 

  மாற்றம் மறைத்து ஒழுகப்

பந்தம்நீடும் இவர் குலத்து நிகர் 

 ஆம் ஒருவன் பரிசு அறியான்

சிந்தை விரும்பி மகள்பேச விடுத்

  தான் சிலரும் சென்று இசைத்தார்.  214 

 

 

தாதை யாரும் அது கேட்டுத் தன்மை 

  விளம்பத் தகாமை யினால்

ஏதம் எய்தாவகை மொழிந்து போக்க 

  அவர் ஆங்கு எய்தாமுன்

தீதுஅங்கு இழைத்தே இறந்தான் போல் 

  செல்ல விடுத்தார் உடன்சென்றான்

மாதராரைப் பெற்றார் மற்று அதனைக் 

  கேட்டு மனம் மருண்டார்.  215 

 

 

தையலார் சங்கிலியார் தம் திறத்துப் 

  பேசத் தகா வார்த்தை

உய்ய வேண்டும் நினைவு உடையார்

 உரையார் என்றுஅங்கு உலகுஅறியச்

செய்த விதிபோல் இது நிகழச் 

  சிறந்தார்க்கு உள்ளபடி செப்பி

நையும் உள்ளத்துடன் அஞ்சி நங்கை 

  செயலே உடன் படுவார்.  216 

 

 

அணங்கே ஆகும் இவள் செய்கை 

  அறிந்தோர் பேச அஞ்சுவரால்

வணங்கும் ஈசர் திறம் அன்றி வார்த்தை 

 அறியாள் மற்று ஒன்றும்

குணங்கள் இவையாம் இனி இவள்தான்  

  குறித்த படியே ஒற்றிநகர்ப்

பணம் கொள் அரவச் சடை

  யார் சடை யார்தம் 

பால் கொண்டு அணை வோம் 

  எனப் பக ர்வார்.  217 

 

 

பண்ணார் மொழிச் சங்கிலியாரை நோக்கிப் 

  பயந்தா ரொடும் கிளைஞர்

தெண்ணீர் முடியார் திரு வொற்றியூரில் 

  சேர்ந்து செல் கதியும்

கண்ணார் நுதலார் திரு அருளால் 

  ஆகிக் கன்னி மாடத்துத்

தண்ணார் தடம்சூழ் அந்நகரில் தங்கிப் 

  புரிவீர் தவம் என்று.  218 

 

 

பெற்ற தாதை சுற்றத்தார் பிறை 

  சேர் முடியார் விதியாலே

மற்றுச் செயல் ஒன்று அறியாது 

  மங்கையார் சங்கிலியார் தாம்

சொற்ற வண்ணம் செயத் துணிந்து 

  துதைந்த செல்வத்தொடும் புரங்கள்

செற்ற சிலையார் திருவொற்றியூரில் 

  கொண்டு சென்று அணைந்தார்.  219 

 

 

சென்னி வளர் வெண்பிறை அணிந்த 

  சிவனார் கோயிலுள் புகுந்து

துன்னும் சுற்றத் தொடும் பணிந்து 

  தொல்லைப் பதியோர் இசைவினால்

கன்னிமாடம் மருங்கு அமைத்துக் கடிசேர் 

  முறைமை காப்பு இயற்றி

மன்னும் செல்வம் தக வகுத்துத் 

 தந்தையார் வந்து அடிவணங்கி.  220 

 

 

யாங்கள் உமக்குப் பணி செய்ய 

  ஈசற்கு ஏற்ற பணி விரும்பி

ஓங்கு கன்னி மாடத்தில் உறை

  கின்றீர் என்று உரைக் கின்றார்

தாங் கற்கு அரிய கண்கள் 

  நீர்த் தாரை ஒழுகத் தரியாதே

ஏங்கு சுற்றத் தொடும் இறைஞ் 

  சிப் போனார் எயில்  சூழ்தம்பதியில்.  221 

 

 

காதல் புரிந்து தவம் புரியும் 

  கன்னியார் அங்கு அமர்கின்றார்

பூத நாதர் கோயிலினில் காலம் 

  தோறும் புக்கு இறைஞ்சி

நீதி முறைமை வழுவாது தமக்கு 

  நேர்ந்த பணி செய்யச்

சீதமலர்ப் பூ மண்டபத்து திரைசூழ் 

  ஒருபால் சென்று இருந்து.  222 

 

 

பண்டு கயிலைத் திருமலையில் செய்யும் 

  பணியின் பான்மை மனம்

கொண்ட உணர்வு தலை நிற்பக் 

  குலவு மலர்மென் கொடிஅனையார்

வண்டு மருவும் திரு மலர் மெல் 

  மாலை காலங்களுக்கு ஏற்ப

அண்டர் பெருமான் முடிச் சாத்த 

  அமைத்து வணங்கி அமரும்நாள்.  223 

 

 

அந்தி வண்ணத்து ஒருவர் திரு 

  அருளால் வந்த ஆரூரர்

கந்த மாலைச் சங்கிலியார் தம்மைக் 

  காதல் மணம் புணர

வந்த பருவம் ஆதலால் வகுத்த 

  தன்மை வழு வாத

முந்தை விதியால் வந்து ஒருநாள் 

  முதல்வர் கோயிலுள் புகுந்தார்.  224 

 

 

அண்டர் பெருமான் அந்த ணராய் 

  ஆண்ட நம்பி அங்கணரைப்

பண்டை முறைமை யால் பணிந்து 

  பாடிப் பரவிப் புறம்போந்து

தொண்டு செய்வார் திருத் தொழில்கள் 

  கண்டு தொழுது செல்கின்றார்

புண்டரீகத் தடம் நிகழ் பூந்திரு

  மண்டபத் தின் உள்புகுந்தார்.  225 

 

 

அன்புநாரா அஞ்சு எழுத்து நெஞ்சு 

  தொடுக்க அலர் தொடுத்தே

என்பு உள் உருக்கும் அடியாரைத் 

  தொழுது நீங்கி வேறுஇடத்து

முன்பு போல திரைநீக்கி முதல்வர் 

  சாத்தும் பணி கொடுத்து

மின்போல் மறையும் சங்கிலியார் தம்மை 

  விதியால் கண் உற்றார்.  226 

 

 

கோவா முத்தும் சுரும்பு ஏறாக்கொழு 

  மென் முகையும் அனையாரைச்

சேவார் கொடியார் திருத் தொண்டர் 

  கண்டபோது சிந்தை நிறை

காவாதவர் பால் போய் விழத் 

  தம்பால் காமனார் துரந்த

பூ வாளிகள் வந்துற வீழத் தரியார் 

  புறமே போந்து உரைப்பார்.  227 

 

 

இன்னபரிசு என்று அறி அரிதால் ஈங்கு 

  ஓர் மருங்கு திரைக்கு உள்ளால்

பொன்னும் மணியும் மலர்ந்த ஒளி 

  அமுதில் அளா விப்பு தியமதி

தன்னுள் நீர் மையால் குழைத்துச் 

  சமைத்த மின்னுக் கொடி போல்வாள்

என்னை உள்ளம் திரிவித்தாள் யார் 

  கொல் என்று அங்கு இயம்புதலும்.  228 

 

 

அருகு நின்றார் விளம்புவார் அவர்

  தாம் நங்கை சங்கிலியார்

பெருகும் தவத்தால் ஈசர் பணி 

  பேணும் கன்னியார் என்ன

இருவரால் இப்பிறவியை எம் பெருமான் 

  அருளால் எய்து வித்தார்

மருவும் பரவை ஒருத்தி இவள் 

  மற்றையவளாம் என மருண்டார்.  229 

 

 

மின்னார் சடையார் தமக்காளாம் விதியால் 

  வாழும் எனை வருத்தித்

தன்னார் அருளால் வரும்பேறு தவத்தால் 

  அணையா வகை தடுத்தே

என்னாருயிரும் எழில் மலரும் கூடப் 

  பிணைக்கும் இவள் தன்னைப்

பொன்னார் இதழி முடியார் முடியார்பால் 

  பெறுவேன் என்று போய்ப்புக்கார்.  230 

 

 

மலர்மேல் அயனும் நெடுமாலும் வானும்

  நிலனும் கிளைத்து அறியா

நிலவு மலரும் திரு முடியும் 

  நீடும் கழலும் உடையாரை

உலகம் எலாம் தாம் உடையா 

  ராயும் ஓற்றியூர் அமர்ந்த

இலகு சோதி பரம்பொருளை இறைஞ்சி 

  முன் நின்று ஏத்துவார்.  231 

 

 

மங்கை ஒருபால் மகிழ்ந்ததுவும் அன்றி 

  மணிநீள் முடியின் கண்

கங்கை தன்னைக் கரந்து அருளும் 

  காதல் உடையீர் அடியேனுக்(கு)

இங்கு நுமக்குத் திருமாலை தொடுத்து 

  என்உள்ளத்து தொடை அவிழ்த்த

திங்கள் வதனச் சங்கிலியைத் தந்து 

  என்வருத்தம் தீரும் என.  232 

 

 

அண்ணலார் முன் பலவும் அவர் 

  அறிய உணர்த்திப்புறத்து அணைந்தே

எண்ணம் எல்லாம் உமக்கு அடிமை 

  யாமாறு எண்ணும் என்நெஞ்சில்

திண்ணம் எல்லாம் உடை வித்தாள் 

  செய்வது ஒன்றும் அறியேன்யான்

தண்ணிலா மின் ஒளிர் பவளச் 

  சடையீர் அருளும் எனத்தளர்வார்.  233 

 

 

மதிவாண் முடியார் மகிழ் கோயில் 

  புறத்தோர் மருங்கு வந்து இருப்பக்

கதிரோன் மேலைக் கடல் காண 

  மாலைக் கடலைக் கண்டு அயர்வார்

முதிரா முலையார் தம்மை மணம் 

  புணர்க்க வேண்டி முளரி வளை

நிதியான் நண்பர் தமக்கு அருளும் 

  நண்பால் நினைந்து நினைந்து அழிய.  234 

 

 

உம்பர் உய்ய உலகு உய்ய 

  ஓலவேலை விடம் உண்ட

தம்பிரான் ஆனார் வன் தொண்டர் 

  தம்பால் எய்திச் சங்கிலியை

இம்பர் உலகில் யாவருக்கும் எய்த 

  ஒண்ணா இரும் தவத்துக்

கொம்பை உனக்குத் தருகின்றோம் 

  கொண்ட கவலை ஒழிகஎன்ன.  235 

 

 

அன்று வெண்ணெய் நல்லூரில் வலிய 

  ஆண்டு கொண்டு அருளி

ஒன்றும் அறியா நாயேனுக்குக் உறுதி 

  அளித்தீர் உயிர் காக்க

இன்றும் இவளை மணம் புணர்க்க ஏன்று 

  நின்றீர் எனப் போற்றி

மன்றல் மலர்ச்சேவடி இணைக்கீழ் வணங்கி 

  மகிழ்ந்தார் வன் தொண்டர்.  236 

 

 

ஆண்டு கொண்ட அந்தணனார் அவருக்கு 

  அருளிக் கருணை யினால்

நீண்ட கங்குல் யாமத்து நீங்கி 

  வானில் நிறை மதியம்

தீண்டு கன்னி மாடத்துச் சென்று 

  திகழ் சங்கிலி யாராம்

தூண்டு சோதி விளக்கு அனையார் 

  தம்பால் கனவில் தோன்றினார்.  237 

 

 

தோன்றும் பொழுதில் சங்கிலி யார்

  தொழுது விழுந்து பரவசமாய்

ஆற்ற அன்பு பொங்கி எழுந்(து)அடியேன் 

  உய்ய எழுந்து அருளும்

பேற்றுக்கு என்யான் செய்வது எனப்பெரிய 

  கருணை பொழிந்து அனைய

நீற்றுக் கோல வேதியரும் நேர் 

  நின்று அருளிச் செய்கின்றார்.  238 

 

 

சாரும் தவத்துச் சங்கிலி! கேள்;சால

  என்பால் அன்பு டையான்

மேரு வரையின் மேம் பட்ட 

  தவத்தான் வெண்ணெய் நல்லூரில்

யாரும் அறிய யான் ஆள 

  உரியான் உன்னை எனை இரந்தான்

வார்கொள் முலையாய்! நீஅவனை மனத்தால் 

  அணைவாய் மகிழ்ந்து என்றார்.  239 

 

 

ஆதிதேவர் முன் நின்று அங்கு 

  அருளிச்செய்த பொழுதின் கண்

மாதரார் சங்கிலியாரும் மாலும் 

  அயனும் அறிவு அரிய

சீத மலர் தாமரை அடிக்கீழ் 

  சேர்ந்து வீழ்ந்து செந்நின்று

வேத முதல்வர் முன் நடுக்கம் 

  எய்தித் தொழுது விளம்புவார்.  240 

 

 

எம்பிரானே! நீர் அருளிச் செய்

  தார்க்கு உரியேன் யான் இமையோர்

தம் பிரானே அருள் தலைமேல்

   கொண்டேன் தக்க விதி மணத்தால்

நம்பி ஆரூர ருக்கு என்னை 

  நல்கி அருளும் பொழுது இமயக்

கொம்பின் ஆகங் கொண்டீர்க்குக் கூறும் 

  திறம் ஒன்று உளது என்பார்.  241 

 

 

பின்னும் பின்னல் முடியார் முன் 

  பெருக நாணித் தொழுது உரைப்பார்

மன்னும் திருவா ரூரின் கண் 

  அவர் தாம் மிகவும் மகிழ்ந்து உறைவது

என்னும் தன்மை அரிந்து அருளும் 

  எம் பிராட்டி திருமுலை தோய்

மின்னும் புரிநூல் அணி மார்பீர் 

  என்றார் குன்றா விளக்கு அனையார்.  242 

 

 

மற்றவர் தம் உரைகொண்டு வன்

  தொண்டர் நிலை மையினை

ஒற்றி நகர் அமர்ந்த பிரான் 

  உணர்ந்து அருளி உரைசெய்வார்

பொன் தொடியாய்! உனை இகந்து 

  போகா மைக்கு ஒரு சபதம்

அற்ற முறு நிலைமை யினால் 

  அவன் செய்வான் எனஅருளி.  243 

 

 

வேய்அனைய தோளியார் பால் 

  நின்று மீண்டு அருளித்

தூயமனம் மகிழ்து இருந்த 

  தோழனார் பால் அணைந்து

நீஅவளை மணம் புணரும் நிலை 

  உரைத்தோம் அதற்கு அவள்பால்

ஆயதொரு குறை உன்னால் அமைப்

  பதுள என்று அருள.  244 

 

 

வன் தொண்டர் மனம் களித்து 

  வணங்கி அடியேன் செய்ய

நின்ற குறையாது என்ன நீ 

  அவளை மணம் புணர்தற்(கு)

ஒன்றி உடனே நிகழ்வது ஒரு 

  சபதம் அவள் முன்பு

சென்று கிடைத்து இவ்விரவே செய்க 

  என அருள் செய்தார்.  245 

 

 

என் செய்தால் இது முடியும் அது 

  செய்வன் யான் அதற்கு

மின்செய்த புரி சடையீர் அருள் 

  பெறுதல் வேண்டும் என

முன் செய்த முறுவலுடன் முதல்வர் 

  அவர் முகம் நோக்கி

உன்செய்கை தனக்கு இனிஎன் வேண்டுவது 

  என்று உரைத்து அருள.  246 

 

 

வம்புஅணி மென் முலை அவர்க்கு 

  மனம் கொடுத்த வன்தொண்டர்

நம்பர் இவர் பிற பதியும் 

  நயந்த கோலம் சென்று

கும் பிடவே கடவேனுக்கு இது 

  விலக்காம் எனக் குறிப்பால்

தம் பெருமான் திருமுன்பு தாம் 

  வேண்டும் குறை இரப்பார்.  247 

 

 

சங்கரர் தாள் பணிந்து இருந்து 

  தமிழ் வேந்தர் மொழிகின்றார்

மங்கை அவள் தனைப் பிரியா 

  வகை சபதம் செய்வதனுக்(கு)

அங்கு அவளோடு யான் வந்தால் 

  அப்பொழுது கோயில் விடத்

தங்கும் இடம் திரு மகிழ்க் கீழ்க் 

  கொள வேண்டும் எனத்தாழ்ந்தார்.  248 

 

 

தம்பிரான் தோழர் அவர் தாம் 

  வேண்டிக் கொண்டு அருள

உம்பர் நாய கரும் அதற்கு 

  உடன் பாடு செய்வாராய்

நம்பி! நீ சொன்னபடி நாம் 

  செய்தும் என்று அருள

எம்பி ரானே! அரியது இனி 

 எனக்கு என்? எனஏத்தி.  249 

 

 

அஞ்சலி சென்னியில் மன்ன அருள் 

  பெற்றுப் புறம் போதச்

செஞ்சடையார் அவர் மாட்டுத் திரு 

  விளையாட் டினை மகிழ்ந்தோ

வஞ்சி இடைச் சங்கிலியார் வழி 

  அடிமைப் பெரு மையோ?

துஞ்சிருள் மீளவும் அணைந் தார் 

  அவர்க்கு உறுதி சொல்லுவார்.  250 

 

 

சங்கிலியார் தம் மருங்கு முன்பு 

  போல் சார்ந்து அருளி

நங்கை உனக்கு ஆரூரன் நயந்து 

  சூள் உறக் கடவன்

அங்கு நமக்கு எதிர் செய்யும் 

  அதற்கு நீ இசையாதே

கொங்கலர் பூ மகிழின் கீழ்க் கொள்க 

  எனக் குறித்து அருள.  251 

 

 

மற்றவரும் கை குவித்து மால் 

  அயனுக்கு அறிவரியீர்

அற்றம் எனக்கு அருள் புரிந்த 

  அதனில் அடியேன் ஆகப்

பெற்றது யான்எனக் கண்கள் பெரும் 

  தாரை பொழிந்து இழிய

வெற்றி மழ விடையார் தம் 

  சேவடிக்கீழ் வீழ்ந்து எழுந்தார்.  252 

 

 

தையலார் தமக்கு அருளிச் சடா 

  மகுடர் எழுந்து அருள

எய்திய போது அதிசயத்தால் உணர்ந்து 

  எழுந்த அவ்விரவின் கண்

செய்ய சடையார் அருளின் திறம் 

  நினைந்தே கண் துயிலார்

ஐயம் உடன் அருகு துயில் 

  சேடியரை அணைந்து எழுப்பி.  253 

 

 

நீங்கு துயில் பாங்கியர்க்கு நீங்கல் 

  எழுத்து அறியும் அவர்

தாம் கனவில் எழுந்து அருளித் 

  தமக்கு அருளிச்செய்தது எலாம்

பாங்கு அறிய மொழிய அவர் 

  பயத்தின் உடன் அதிசயமும்

தாங்கு மகிழ்ச் சியும் எய்தச் 

  சங்கிலியார் தமைப் பணிந்தார்.  254 

 

 

சேயிழையார் திருப் பள்ளி எழுச்

  சிக்கு மலர் தொடுக்கும்

தூய பணிப் பொழுது ஆகத்தொழில் 

  புரிவார் உடன் போதக்

கோயிலின் முன் காலம் அது 

  ஆகவே குரித்து அணைந்தார்

ஆய சபதம் செய்ய வரவு 

  பார்த்து ஆரூ ரர்.  255 

 

 

நின்றவர் அங்கு எதிர் வந்த 

  நேர்இழையார் தம் மருங்கு

சென்று அணைந்து தம் பெருமான் 

  திருஅருளின் திறம் கூற

மின்தயங்கு நுண் இடையார் விதி 

  உடன்பட்டு எதிர் விளம்பார்

ஒன்றிய நாண் ஒடு மடவாருடன் 

  ஒதுங்கி உட் புகுந்தார்.  256 

 

 

அங்கு அவர் தம் பின்சென்ற 

  ஆரூ ரர் ஆயிழையீர்!

இங்கு நான் பிரியாமை உமக்கு 

  இசையும் படி இயம்பத்

திங்கள் முடியார் திரு முன் 

  போதுவீர் எனச் செப்பச்

சங்கி லியார் கனவு உரைப்பக் 

  கேட்ட தாதியர் மொழிவார்.  257 

 

 

எம் பெரு மான் இதற்காக 

  எழுந்து அருளி இமயவர்கள்

தம் பெருமான் திருமுன்பு 

  சாற்றுவது தகாது என்ன

நம் பெருமான் வன் தொண்டர் 

  நாதர் செயல் அறியாதே

கொம்பு அனையீர் யான் செய்வது 

  எங்கு என்று கூறுதலும்.  258 

 

 

மாதர் அவர் மகிழ்க் கீழே 

  அமையும் என மனமருள்வார்

ஈதலர் ஆகிலும் ஆகும் இவர் 

  சொன்ன படி மறுக்கில்

ஆதலினால் உடன் படவே அமையும் 

  எனத் துணிந்து ஆகில்

போதுவீர் என மகிழ்க்கீழ் அவர் 

  போதப் போய் அணைந்தார்.  259 

 

 

தாவாத பெருந் தவத்துச் 

  சங்கிலி யாரும் காண

மூவாத திரு மகிழை 

  முக்காலும் வலம் வந்து

மேவாது இங்குயான் அகலேன் 

  என நின்று விளம்பினார்

பூவார் தண் புனல் பொய்கை 

  முனைப் பாடிப் புரவலனார்.  260 

 

 

மேவிய சீர் ஆரூரர் மெய்ச் 

  சபதம் வினை முடிப்பக்

காவியினேர் கண்ணாரும் கண்டு 

  மிக மனம் கலங்கிப்

பாவியேன் இது கண்டேன்தம் 

  பிரான் பணியால் என்று

ஆவிசோர்ந்து அழிவார் அங்குஒரு 

  மருங்கு மறைந்து அயர்ந்தார்.  261 

 

 

திருநா வலூ ராளி தம் 

  உடைய செயல் முற்றிப்

பொரு நாகத்து உரி புனைந்தார் 

  கோயிலின் உள்புகுந்து இறைஞ்சி

அருள் நாளும் தர இருந்தீர் 

  செய்தவாறு அழகு இதுஎனப்

பெருநாமம் எடுத்து ஏத்திப் பெரு 

  மகிழ்ச்சி உடன் போந்தார்.  262 

 

 

வார் புனையும் வன முலையார் 

  வன் தொண்டர் போனதன் பின்

தார் புனையும் மண்ட பத்துத் 

  தம் உடைய பணி செய்து

கார் புனையும் மணி கண்டர் 

  செயல் கருத்தில் கொண்டு இறைஞ்சி

 ஏர் புனையும் கன்னி மாடம் 

  புகுந் தார் இருள் புலர.  263 

 

 

அன்று இரவே ஆதிபுரி ஒற்றி 

  கொண்டார் ஆட் கொண்ட

பொன் திகழ் பூண் வன்தொண்டர் 

  புரிந்த வினை முடித்துஅருள

நின்ற புகழ்த் திரு ஒற்றியூர் 

  நிலவு தொண் டர்க்கு

மன்றல் வினை செய்வதற்கு மனம் கொள்ள உணர்த்துவார்.  264 

 

 

நம்பி யாரூர னுக்கு 

  நங்கை சங்கிலி தன்னை

இம்பர் ஞாலத்து இடை நம் 

  ஏவலினால் மணவினை செய்து

உம்பர்வாழ் உலகு அறிய 

  அளிப்பீர் என்று உணர்த்துதலும்

தம்பிரான் திருத்தொண்டர் அருள் 

  தலைமேல் கொண்டு எழுவார்.  265 

 

 

மண்ணிறைந்த பெரும் செல்வத்து 

  திரு ஒற்றியூர் மன்னும்

எண்ணிறைந்த திருத் தொண்டர் 

  எழில்பதியோர் உடன் ஈண்டி

உண்ணி றைந்த மகிழ்ச்சியுடன் 

  உம்பர் பூமழை பொழியக்

கண்ணிறைந்த பெரும் சிறப்பில் 

  கலியாணம் செய்து அளித்தார்.  266 

 

 

பண்டு நிகழ் பான்மையினால் 

  பசுபதி தன் அருளாலே

வண்டமர் பூங்குழலாரை மணம் 

  புணர்ந்த வன் தொண்டர்

புண்டரிகத்து அவள் வனப்பைப் 

  புறம் கண்ட தூநலத்தைக்

கண்டுகேட்டு உண்டு உயிர்த்துஉற்று 

  அமர்ந்து இருந்தார் காதலினால்.  267 

 

 

யாழின் மொழி எழில் முறுவல்இரு

  குழை மேல் கடைபிறழும்

மாழை விழிவன முலையார் மணி 

  அல்குல் துறை படிந்து

வீழும் அவர்க்கு இடைதோன்றி மிகும் 

  புலவி புணர்ச்சிக் கண்

ஊழியாம் ஒரு கணம் தான் 

  அவ்வூழி ஒருகணம் ஆம்.  268 

 

 

இந்நிலையில் பேர் இன்பம் இனிது 

  அமர்வார் இறை உறையும்

மன்னு புகழ் ஒற்றியூர் அதனில் 

  மகிழ் சிறப் பினால்

சென்னி மதிபுனைவார் தம் திருப் 

  பாதம் தொழுது இருந்தார்

முன்னிய காலங்கள் பல முறை

  மையினால் வந்து அகல.  269 

 

 

பொங்கு தமிழ்ப் பொதிய மலைப் 

  பிறந்து பூஞ் சந்தனத்தின்

கொங்கு அணைந்து குளிர்சாரல் இடை 

  வளர்ந்த கொழும் தென்றல்

அங்கு அணைய திருவாரூர் அணி 

  வீதி அழகர் அவர்

மங்கல நாள் வசந்தம் எதிர்கொண்டு 

  அருளும் வகை நினைந்தார்.  270 

 

 

வெண் மதியின் கொழுந்து அணிந்த 

  வீதி விடங்கப் பெருமான்

ஒண்ணு தலார் புடை பரந்த 

  ஓலக்கம் அதன் இடையே

பண் ணமரும் மொழிப் பரவையார் 

  பாடல் ஆடல் தனைக்

கண்ணுற முன் கண்டு கேட் 

  டார் போலக் கருதினார்.  271 

 

 

பூங்கோயில் அமர்ந் தாரை 

  புற்றிடங் கொண்டு இருந்தாரை

நீங்காத காதலினால் நினைந்

  தாரை நினை வாரைப்

பாங்காகத் தாம்முன்பு பணிய 

  வரும் பயன் உணர்வார்

ஈங்குநான் மறந்தேன் என்று 

  ஏசறவால் மிக அழிவார்.  272 

 

 

மின் னொளிர் செஞ்சடையானை 

  வேத முதல் ஆனானை

மன்னு புகழ்த் திருவாரூர் 

  மகிழ்ந்தானை மிக நினைந்து

பன்னிய சொல் பத்திமையும் 

  அடிமையையும் கை விடுவான்

என்னும் இசைத் திருப்பதிகம் 

  எடுத்து இயம்பி இரங்கினார்.  273 

 

 

பின்ஒரு நாள் திருவாரூர் தனைப் 

  பெருக நினைந்து அருளி

உன்ன இனியார் கோயில் புகுந்து 

  இறைஞ்சி ஒற்றி நகர்

தன்னை அகலப் புக்கார் தாம் 

  செய்த சபதத் தால்

முன் அடிகள் தோன் றாது 

  கண் மறைய மூர்ச்சித்தார்.  274 

 

 

செய் வதனை அறியாது திகைத்து 

  அருளி நெடிது உயிர்ப்பார்

மைவிரவு கண்ணார் பால் சூல் 

  உறவு மறுத்த அதனால்

இவ்வினை வந்து எய்தியது ஆம் 

  என நினைந்து எம்பெருமானை

எய்திய இத் துயர் நீங்கப் 

  பாடுவேன் என நினைந்து.  275 

 

 

அழுக்கு மெய் கொடு என்று எடுத்தசொல் 

  பதிகம் ஆதிநீள் புரி அண்ணலைஓதி

வழுத்து நெஞ்சொடு தாழ்ந்து நின்று உரைப்பார் 

  மாதோர் பாகனார் மலர்பதம் உன்னி

இழுக்கு நீக்கிட வேண்டும் என்று இரந்தே 

  எய்து வெம்துயர்க் கையற வினுக்கும்

பழிக்கும் வெள்கி நல்இசை கொடு பரவி 

  பணிந்து சாலவும் பலபல நினைவார்.  276 

 

 

அங்கு நாதர் செய்அருளது ஆக அங்கை 

  கூப்பி ஆரூர் தொழ நினைந்தே

பொங்கு காதல் மீளா நிலைமை யினால் 

  போதுவார் வழிகாட்ட முன் போந்து

திங்கள் வேணி யார் திரு முல்லைவாயில் 

  சென்று இறைஞ்சி நீடிய திருப்பதிகம்

சங்கி லிக்காக என் கணை மறைத்தீர் 

  என்று சாற்றிய தன்மையில் பாடி.  277 

 

 

தொண்டை மானுக்கு அன்று அருள்கொடுத்து அருளும் 

  தொல்லை வண்புகழ் முல்லை நாயகரைக்

கொண்ட வெந்துயர் களை எனப்பரவிக் குறித்த 

  காதலின் நெறிக் கொள வருவார்

வண்டுலா மலர்ச் சோலைகள் சூழ்ந்து மாட 

  மாளிகை நீடு வெண் பாக்கம்

கண்ட தொண்டர்கள் எதிர் கொள வணங்கிக் 

  காயும் நாகத்தர் கோயிலை அடைந்தார்.  278 

 

 

அணைந்த தொண்டர்கள் உடன் வலமாக அங்கண் 

  நாயகர் கோயில் முன் எய்திக்

குணங்கள் ஏந்தியே பரவி அஞ்சலியால் குவித்த 

  கைத்தலை மேற் கொண்டு நின்று

வணங்கி நீர்மகிழ் கோயில் உளீரே என்ற 

  வன்தொண்டர்க்கு ஊன்று கோல் அருளி

இணங் கிலா மொழியால் உளோம் போகீர் 

  என்று இயம்பினார் ஏதிலார் போல.  279 

 

 

பிழை உள்ளன பொறுத்திடுவர் 

  என்று எடுத்துப் பெண் பாகம்

விழைவடிவில் பெருமானை வெண்

  பாக்கம் மகிழ்ந் தானை

இழைஎன மாசுணம் அணிந்த 

  இறை யானைப் பாடினார்

மழை தவழும் நெடும் 

  புரிசை நாவலூர் மன்னவனார்.  280 

 

 

முன் நின்று முறைப்பாடு 

  போல் மொழிந்த மொழிமாலைப்

பன்னும் இசைத் திருப் 

  பதிகம் பாடியபின் பற்றாய

என்னுடையபிரான் அருள் இங்கு 

  இத்தனை கொலாம் என்று

மன்னுபெரும் தொண்டர் உடன் 

  வணங்கியே வழிக் கொள்வார்.  281 

 

 

அங்கணர் தம்பதி அதனை அகன்று 

  போய் அன்பர் உடன்

பங்கயப் பூந்தடம் பணை சூழ் 

  பழையனூர் உழை எய்தித்

தங்குவார் அம்மைத் திருத் தலை

  யாலே வலம் கொள்ளும்

திங்கள் முடியார் ஆடும் திரு

  வாலங் காட்டின் அயல்.  282 

 

 

முன்நின்று தொழுது ஏத்தி முத்தா 

  என்று எடுத்து அருளிப்

பன்னும் இசைத் திருப்பதிகம் பாடி 

  மகிழ்ந்து ஏத்து வார்

அந் நின்று வணங்கிப் போய்த் 

  திருவூறல் அமர்ந்து இறைஞ்சிக்

கன்னிமதில் மணி மாடக் காஞ்சி 

  மா நகர் அணைந்தார்.  283 

 

 

தேன் நிலவு பொழில் கச்சித்  

  திருக்காமக் கோட் டத்தில்

ஊனில் வளர் உயிர்க்கு எல்லாம் 

  ஒழியாத கருணை யினால்

ஆனதிரு அறம் புரக்கும் அம்மை 

  திருக் கோயிலின் முன்

வானில் வளர் திருவாயில் வணங்

  கினார் வன் தொண்டர்.  284 

 

 

தொழுது விழுந்து எழுந்து அருளால் 

  துதித்துப்போய் தொல் உலகம்

முழுதும் அளித்து அழித்து ஆக்கும் முதல்

  வர் திரு ஏகம்பம்

பழுதில் அடியார் முன்பு புகப் 

  புக்குப் பணி கின்றார்

இழுதை யேன் திருமுன்பே என் 

  மொழிவேன் என்று இறைஞ்சி.  285 

 

 

விண் ஆள்வார் அமுது உண்ண 

  மிக்கபெரும் விடம் உண்ட

கண் ணாளா கச்சி ஏகம் 

  பனே கடை யானேன்

எண்ணாத பிழை பொறுத்து இங்கு 

  யான் காண எழில்பவள

வண்ணா கண் அளித்து அருளாய் 

  என வீழ்ந்து வணங்கினார்.  286 

 

 

பங்கயச் செங்கைத் தளிரால் பனி

  மலர் கொண்டு அருச்சித்துச்

செங் கயற் கண் மலைவல்லி 

  பணிந்த சேவடி நினைந்து

பொங்கிய அன்பொடு பரவிப் 

  போற்றிய ஆரூ ரருக்கு

மங்கைத் தழுவக் குழைந்தார் மறைந்த 

  இடக் கண் கொடுத்தார்.  287 

 

 

ஞாலந் தான் இடந்தவனும் 

  நளிர் விசும்பு கடந்தவனும்

மூலந்தான் அறிவரியார் 

  கண் அளித்து முலைச்சுவட்டுக்

கோலந்தான் காட்டுதலும் குறுகி விழுந்து எழுந்து களித்து

ஆலந்தான் உகந்தவன் என்று எடுத்து ஆடிப் பாடினார்.  288 

 

 

பாடி மிகப் பரவசமாய்ப் பணி 

  வார்க்குப் பாவை உடன்

நீடிய கோலம் காட்ட நிறைந்த 

  விருப் புடன் இறைஞ்சிச்

சூடிய அஞ்சலி யினராய்த் தொழுது 

  புறம் போந்து அன்பு

கூடிய மெய்த் தொண்டர் உடன் 

  கும்பிட்டு அங்கு இனிது அமர்வார்.  289 

 

 

மா மலையாள் முலைச்சுவடும் வளைத்

  தழும்பும் அணிந்த மதிப்

பூ மலிவார் சடை யாரைப் 

  போற்றி அருளது ஆகத்

தே மலர்வார் பொழில் காஞ்சித் 

  திருநகரம் கடந்து அகல்வார்

பா மலர் மாலைப் பதிகம் 

  திருவாரூர் மேல் பரவி.  290 

 

 

அந்தியும் நண்பகலும் என எடுத்து 

  ஆர்வத் துடன் நசையால்

எந்தை பிரான் திருவாரூர் என்று 

  கொல் எய்துவது என்று

சந்த இசை பாடிப் போய்த் 

  தாங்க அரிய ஆதரவு

வந்து அணைய அன்பர் உடன் 

  மகிழ்ந்து வழி கொள்கின்றார்.  291 

 

 

மன்னு திருப் பதிகள் தொறும் 

  வன்னி யொடு கூவிளமும்

சென்னிமிசை வைத்து உவந்தார் கோயிலின் 

  முன் சென்று இறைஞ்சிப்

பன்னு தமிழ்த் தொடை சாத்திப் 

  பரவியே போந்து அணைந்தார்

அன்ன மலி வயல் தடங்கள் 

  சூழ்ந்த திரு ஆமாத்தூர்.  292 

 

 

அங்கணரை ஆமாத்தூர் அழகர் 

  தமை அடி வணங்கித்

தங்கும் இசைத்திருப் பதிகம் 

  பாடிப் போய்த் தாரணிக்கு

மங்கலமாம் பெரும் தொண்டை 

  வளநாடு கடந்து அணைந்தார்

செங்கண் வளவன் பிறந்த 

  சீர்நாடு நீர் நாடு.  293 

 

 

அந்நாட்டின் மருங்கு திரு அரத் 

  துறையைச் சென்று எய்தி

மின்னாரும் படை மழுவார் விரை 

  மலர்த்தாள் பணிந்து எழுந்து

சொன்மாலை மலர்க் கல்வாய் அகில் 

  என்னும் தொடை சாத்தி

மன்னார் வத்து திருத் தொண்டர் 

  உடன் மகிழ்ந்து வைகினார்.  294 

 

 

பரமர் திரு அரத் துறையைப் 

  பணிந்து போய்ப் பலபதிகள்

விரவி மழ விடை உயர்த்தார் 

  விரைமலர்த்தாள் தொழுது ஏத்தி

உரவு நீர்த் தடம் பொன்னி 

  அடைந்து அன்பருடன் ஆடி

அரவு அணிந்தார் அமர்ந்த திருவாவடு 

  தண் துறை அணைந்தார்.  295 

 

 

அங்கணைவார் தமை அடியார் எதிர் 

  கொள்ளப் புக்கு அருளிப்

பொங்கு திருக் கோயிலினைப் புடை

  வலம் கொண்டுள் ளணைந்து

கங்கை வாழ் சடையாய்  ஓர் 

  கண்ணிலேன் எனக் கவல்வார்

இங்கு எனக்கு ஆர்உறவு என்னும் 

  திருப்பதிகம் எடுத்து இசைத்தார்.  296 

 

 

திருப்பதிகம் கொடு பரவிப் பணிந்து 

  திரு அருளால் போய்

விருப்பி னொடும் திருத்துருத்தி தனை 

  மேவி விமலர் கழல்

அருத்தியினால் புக்கு இறைஞ்சி அடியேன் 

  மேல் உற்ற பிணி

வருத்தம் எனை ஒழித்து அருள

  வேண்டும் என வணங்குவார்.  297 

 

 

பரவியே பணிந்த வர்க்குப் பரமர் 

  திரு அருள் புரிவார்

விரவிய இப் பிணி அடையத் 

  தவிப் பதற்கு வேறு ஆக

வரமலர் வண்டறை தீர்த்த வட 

  குளித்துக் குளி என்னக்

கரவில் திருத் தொண்டர் தாம் 

  கை தொழுது புறப்பட்டார்.  298 

 

 

மிக்க புனல் தீர்த்தத்தின் முன் 

  அணைந்து வேதம் எலாம்

தொக்க வடிவாய் இருந்த துருத்

  தியார் தமைத் தொழுது

புக்கு அதனில் மூழ்குதலும் புதிய 

  பிணி அது நீங்கி

அக்கணமே மணி ஒளிசேர் 

  திரு மேனி ஆயினார்.  299 

 

 

கண்ட வர்கள் அதிசயிப்பக் 

  கரை யேறி உடைபுனைந்து

மண்டு பெரும் காதலினால் 

  கோயிலினை வந்து அடைந்து

தொண்டர் எதிர் மின்னுமா 

  மேகம் எனும் சொல்பதிகம்

எண் திசையும் அறிந்துய்ய 

  ஏழிசையால் எடுத்து இசைத்தார்.  300 

 

 

பண்ணிறைந்த தமிழ் பாடிப் பரமர் 

  திரு அருள் மறவாது

எண்ணிறைந்த தொண்டர் உடன் பணிந்து 

  அங்கண் உறைந் தேகி

உண்ணிறைந்த பதி பிறவும் உடையவர் 

  தாள் வணங்கிப் போய்

கண்ணி றைந்த திரு வாரூர் முன்

  தோன்றக் காண் கின்றார்.  301 

 

 

அன்று திரு நோக்கு ஒன்றால் 

  ஆரக்கண்டு இன்பு உறார்

நின்று நிலமிசை வீழ்ந்து நெடிது 

  உயிர்த்து நேர் இறைஞ்சி

வன் தொண்டர் திருவா ரூர் 

  மயங்கு மாலையில் புகுந்து

துன்று சடைத் தூவாயர் தமை 

  முன்னம் தொழ அணைந்தார்.  302 

 

 

பொங்கு திருத் தொண்டருடன் 

  உள்ளணைந்து புக்கு இறைஞ்சி

துங்க இசைத் திருப்பதிகம் 

  தூவாயா என்று எடுத்தே

இங்கு எமது துயர்களைந்து 

  கண்காணக் காட்டாய் என்று

அம்கணர் தம்முன் நின்றுபாடி 

  அருந் தமிழ் புணைந்தார்.  303 

 

 

ஆற ணியுஞ் சடையாரைத் தொழுது 

  புறம் போந்து அங்கண்

வேறு இருந்து திருத் தொண்டர் 

  விரவுவார் உடன் கூடி

ஏறுயர்த் தார் திருமூலட்டாத்து 

  உள் இடை தெரிந்து

மாறில் திரு அத்தயா மத்து 

  இறைஞ்ச வந்து அணைந்தார்.  304 

 

 

ஆதிதிரு அன்பர் எதிர் அணைய 

  அவர் முகம் நோக்கிக்

கோதில் இசை யால் குருகுபாய 

  எனக் கோத்து எடுத்தே

ஏதி லார் போல் வினவி 

  ஏசற வால் திருப்பதிகம்

காதல் புரி கைக் கிளையால் 

  பாடியே கலந்து அணைவார்.  305 

 

 

சீர் பெருகும் திருத் தேவாசிரியன் 

  முன் சென்று இறைஞ்சிக்

கார் விரவு கோபுரத்தைக் கை 

  தொழுதே உள் புகுந்து

தார் பெருகு பூங்கோயில் தனை 

  வணங்கி சார்ந்து அணைவார்

ஆர்வம் மிகு பெரும் காதலால் 

  அவனி மேல் வீழ்ந்தார்.  306 

 

 

வீழ்ந்து எழுந்து கை தொழுது 

  முன் நின்று விம்மியே

வாழ்ந்த மலர்க் கண் ஒன்றால் 

  ஆராமல் மனம் அழிவார்

ஆழ்ந்த துயர்க்கடல் இடை நின்று 

  அடியேனை எடுத்து அருளித்

தாழ்ந்த கருத் தினை நிரப்பிக் 

  கண்தாரும் எனத் தாழ்ந்தார்.  307 

 

 

திரு நாவலூர் மன்னர் திரு

  வாரூர் வீற்று இருந்த

பெரு மானைத் திரு மூலட் 

  டானம் சேர் பிஞ்ஞகனைப்

பருகா இன் அமுதைக் கண்

  களால் பரு குதற்கு

மருவார் வத்துடன் மற் றைகண் 

  தாரீர் என வணங்கி.  308 

 

 

மீளா அடிமைஎன எடுத்து மிக்க 

  தேவர் குலம் எல்லாம்

மாளமே நஞ்சு உண்டு அருளி 

  மன்னி இருந்த பெருமானைத்

தாளா தரிக்கும் மெய்அடியார் தமக்கு 

  ஆம்இடர் நீர்தரியீர் என்று

ஆளாம் திருத் தோழமைத் திறத்தால் 

  அஞ்சொல் பதிகம் பாடினார்.  309 

 

 

பூத முதல்வர் புற்றிடங் கொண்டு 

  இருந்த புனிதர் வன் தொண்டர்

காதல் புரிவேதனைக்கு இரங்கி கருணைத் 

  திரு நோக்கு அளித்து அருளிச்

சீதமலர்க் கண் கொடுத்து அருளச் 

 செவ்வே விழித்து முகம் மலர்ந்து 

பாத மலர்கள் மேல் பணிந்து 

  வீழ்ந் தார் உள்ளம் பரவசமாய்.  310 

 

 

விழுந்தும் எழுந்தும் பல முறையால் 

  மேவிப் பணிந்து மிகப் பரவி

எழுந்த களிப் பினால் ஆடிப் 

  பாடி இன்ப வெள் ளத்தில்

அழுந்தி இரண்டு கண் ணாலும் அம் 

 பொன் புற்றின் இடை எழுந்த

செந்தண் பவளச் சிவக் கொழுந்தின் 

  அருளைப் பருகித் திளைக் கின்றார்.  311 

 

 

காலம் நிரம்பத் தொழுது ஏத்திக் 

  கனக மணி மாளிகை கோயில்

ஞாலம் உய்யவரும் நம்பி நலம் 

  கொள் விருப்பால் வலம் கொண்டு

மாலும் அயனும் முறை இருக்கும் 

  வாயில் கழியப் புறம் போந்து

சீலம் உடைய அன்பர் உடன் 

  தேவாசி ரியன் மருங்கு அணைந்தார்.  312 

 

 

நங்கை பரவையார் தம்மை நம்பி 

  பிரிந்து போன அதன் பின்

தங்கு மணி மாளிகையின் கண் 

  தனிமை கூரத் தளர் வார்க்குக்

கங்குல் பகலாய்ப் பகல் கங்கு

  லாகிக் கழியா நாள் எல்லாம்

பொங்கு காதல் மீதூரப் புலர்வார் 

  சில நாள் போன அதன்பின்.  313 

 

 

செம்மை நெறி சேர் திரு 

  நாவலூரர் ஒற்றியூர் சேர்ந்து

கொம்மை முலையார் சங்கிலியார் தம்மைக் 

  குலவு மணம் புணர்ந்த

மெய்ம்மை வார்த்தை தாம் அவர்பால் 

  விட்டார்வந்து கட்டு உரைப்ப

தம்மை அறியா வெகுளியினால் தரியா 

  நெஞ்சி னொடும் தளர்வார்.  314 

 

 

மென் பூஞ் சயனத்து இடைத்துயிலும் 

  மேவார் விழித்தும் இனிது அமரார்

பொன் பூந்தவிசின் மிசை இனிஇரார் 

  நில்லார் செல்லார் புறம்பு ஒழியார்

மன்பூ வாளி மழை கழியார் 

  மறவார் நினையார் வாய் விள்ளார்

என்பூ டுருக்கும் புல வியோ 

  பிரிவோ இரண்டின் இடைப் பட்டார்.  315 

 

 

ஆன கவலைக் கை அறவால் 

  அழியும் நாளில் ஆரூரர்

கூனல்இளம் வெண் பிறைக் கண்ணி 

  முடியார் கோயில் முன்குறுகப்

பால் நல் விழியார் மாளிகையில் 

  பண்டு செல்லும் பரிசினால்

போன பெருமைப் பரிசனங்கள் புகுதப் 

  பெறாது புறம் நின்றார்.  316 

 

 

நின்ற நிலைமை அவர்கள் சிலர் 

  நிலவு திருவாரூரர் எதிர்

சென்று மொழிவார் திரு ஒற்றியூரில் 

  நிகழ்ந்த செய்கை எலாம்

ஒன்றும் ஒழியாவகை அறிந்து அங்கு 

  உள்ளார் தள்ள மாளிகையில்

இன்று புறமும் சென்று எய்தப் 

  பெற்றிலோம் என்று இறைஞ்சினார்.  317 

 

 

மற்ற மாற்றம் கேட்டு அழிந்த 

  மனத்தர் ஆகி வன்தொண்டர்

உற்றஇதனுக்கு இனி என்னோ செயல் 

  என்று உணர்வார் உலகுஇயல்பு

கற்ற மாந்தர் சிலர் தம்மைக் 

  காதல் பரவையார் கொண்ட

செற்ற நிலைமை அறிந்தவர்க்கு தீர்வு 

  சொல்லச் செல விட்டார்.  318 

 

 

நம்பி அருளால் சென்ற அவரும் 

  நங்கை பரவையார் தமது

பைம்பொன் மணி மாளிகை அணைந்து 

  பண்பு புரியும் பாங்கினால்

வெம்பு புலவிக் கடல் அழுந்தும் 

  மின்னேரிடையார் முன் எய்தி

எம் பிராட்டிக்கு இது தகுமோ 

  என்று பலவும் எடுத்துரைப்பார்.  319 

 

 

பேத நிலைமை நீதியினால் பின்னும் 

  பலவும் சொன்னவர் முன்

மாதர் அவரும் மறுத் துமனம் 

  கொண்ட செற்றம் மாற்றாராய்

ஏதம் மருவும் அவர்திறத்தில் இந்த 

  மாற்றம் இயம்பில் உயிர்

போதல் ஒழியாது என உரைத்தார் 

  அவரும் அஞ்சிப்புறம் போந்தார்.  320 

 

 

போந்து புகுந்த படி எல்லாம் 

  பூந்தண் பழன முனைப்பாடி

வேந்தர் தமக்கு விளம்புதலும் வெரு

  வுற்று அயர்வார் துயர்வேலை

நீந்தும் புணையாம் துணை காணார் 

  நிகழ்ந்த சிந்தாகுலம் நெஞ்சில்

காந்த அழிந்து தோய்ந்து எழார் 

  கங்குல் இடையாமகக் கடலுள்.  321 

 

 

அருகு சூழ்ந்தார் துயின்று திரு

  அந்தயாமம் பணி மடங்கிப்

பெருகு புவனம் சலிப்புஇன்றிப் பேயும் 

  உறங்கும் பிறங்கு இருள்வாய்

முருகு விரியும் மலர்க் கொன்றை 

  முடிமேல் அரவும் இளமதியும்

செருகும் ஒருவர் தோழர் தனி 

  வருந்தி இருந்து சிந்திப்பார்.  322 

 

 

முன்னை வினையால் இவ் வினைக்கு 

  மூலம் ஆனாள்பால் அணைய

என்னை உடையாய் நினைந்த அருளாய் 

  இந்தயாமத்து எழுந்து அருளி

அன்னம் அனையாள் புல வியினை 

  அகற்றில் உய்யலாம் அன்றிப்

பின்னை இல்லைச்செயல் என்று பெருமான் 

  அடிகள் தமை நினைந்தார்.  323 

 

 

அடியார் இடுக்கண் தரியாதார் ஆண்டு 

  கொண்ட தோழர் குறை

முடியாது இருக்க வல்லரே முற்றும் 

  அளித்தாள் பொற்றளிர்க் கைத்

தொடியார் தழும்பும் முலைச்சுவடும் உடையார் 

  தொண்டர் தாம் காணும்

படியால் அணைந்தார் நெடியோனும் 

  காணாஅடிகள் படி தோய.  324 

 

 

தம்பிரானார் எழுந்து அருளத் தாங்

  கற்கு அரிய மகிழ்ச்சியினால்

கம்பியா நின்ற அவயவங்கள் கலந்த 

  புளகம் மயிர் முகிழ்ப்ப

நம்பி ஆரூரரும் எதிரே நளின 

  மலர்க்கை தலைக் குவிய

அம்பிகா வல்லவர் செய்ய அடித் 

  தாமரையின் கீழ் விழுந்தார்.  325 

 

 

விழுந்து பரவி மிக்க பெரும் 

  விருப்பினோடும் எதிர் போற்றி

எழுந்த நண்பர் தமை நோக்கிஎன் 

  நீ உற்றது என்று அருள

தொழும் தம் குறையை விளம்புவார் யானே 

  தொடங்கும் துரிசு இடைப்பட்டு

அழுந்தும் என்னை இன்னம் எடுத்து 

  ஆளவேண்டும் உமக்கு என்று.  326 

 

 

அடியேன் அங்குத் திருவொற் றியூரில் 

  நீரே அருள் செய்ய

வடிவேல் ஒண்கண் சங்கிலியை மணம் 

  செய்து அணைந்ததிறம் எல்லாம்

கொடியேர் இடையாள் பரவைதான் அறிந்து 

  தன்பால் யான் குறுகில்

முடிவேன் என்று துணிந்து இருந்தாள்என் 

  நான் செய்வது எனமொழிந்து.  327 

 

 

நாயன்நீரே நான் உமக்கு இங்கு 

  அடியேன் ஆகில் நீர்எனக்குத்

தாயின் நல்ல தோழ ருமாம் 

  தம்பிர னாரே ஆகில்

ஆய அறிவும் இழந்து அழிவேன் 

  அயர்வு நோக்கி அவ்வளவும்

போய் இவ்விரவே பரவையுறு புலவி 

  தீர்த்துத் தாரும் என.  328 

 

 

அன்பு வேண்டும் தம் பெருமான் 

  அடியார் வேண்டிற்றே வேண்டி

முன்பு நின்று விண்ணப்பம் செய்த

  நம்பி முகம் நோக்கித்

துன்பம் ஒழிநீ யாம் உனக்கோர் 

  தூதன் ஆகி இப்பொழுதே

பொன்செய் மணிப்பூண் பரவைபால் போகின்றோம் 

  என்று அருள் செய்தார்.  329 

 

 

எல்லை இல்லாக் களிப்பினராய் இறைவர் 

  தாளில் விழுந்து எழுந்து

வல்லபரிசு எல்லாம் துதித்து வாழ்ந்து 

  நின்ற வன் தொண்டர்

முல்லை முகை வெண்ணகைப்பரவை முகில் 

  சேர் மாடத்து இடைசெல்ல

நில்லாது ஈண்ட எழுந்து அருளிநீக்கும் 

  புலவி எனத் தொழுதார்.  330 

 

 

அண்டர் வாழக் கருணை யினால் 

  ஆல காலம் அமுதாக

உண்ட நீலக் கோல மிடற்று 

  ஒருவர் இருவர்க்கு அறிவரியர்

வண்டு வாழும் மலர்க் கூந்தல் 

  பரவையார் மாளிகை நோக்கி

தொண்டனார் தம் துயர் நீக்க 

  தூதனாராய் எழுந்து அருள.  331 

 

 

தேவா சிரியன் முறை இருக்கும் 

  தேவர் எல்லாம் சேவித்துப்

போவார் தம்மில் வேண்டுவார் போத 

  ஒழிந்தார் புறத்து ஒழிய

ஓவா அணுக்கச் சேவ கத்தில் 

  உள்ளோர் பூத கணநாதர்

மூவா முனிவர் யோகி களின் 

  முதல் ஆனார்கள் முன்போக.  332 

 

 

அருகு பெரிய தேவ ருடன் அணைந்து 

  வரும் அவ்விருடிகளும்

மருவு நண்பின் நிதிக்கோனும் முதலாய் 

  உள்ளோர் மகிழ்ந்து ஏத்த

தெருவும் விசும்பும் நிறைந்து விரைச்செழும் 

  பூமாரி பொழிந்து அலையப்

பொருவில் அன்பர் விடும்தூதர் புனித 

  வீதியி னில் போத.  333 

 

 

மாலும் அயனும் காணாதார் மலர்த்தாள் 

  பூண்டு வந்து இறைஞ்சும்

காலம்இது என்றுஅங்கு அவரை அழைத்தால் 

  என்னக் கடல் விளைத்த

ஆலம் இருண்ட கண்டத்தான் அடித்தாமரை 

  மேல் சிலம்பு ஒலிப்ப

நீல மலர்க்கண் பரவையார் திரு

  மாளிகையை நேர் நோக்கி.  334 

 

 

இறைவர் விரைவின் எழுந்து அருள 

  எய்தும் அவர்கள் பின் தொடர

அறை கொள் திரை நீர் தொடர் 

  சடையில் அரவு தொடர அரியஇளம்

பிறை கொள் அருகு நறைஇதழிப் 

  பிணையல் சுரும்பு தொடர உடன்

மறைகள் தொடர வன் தொண்டர் 

  மனமும் தொடர வரும் பொழுது.  335 

 

 

பெரு வீரையினும் மிக முழங்கிப்

  பிறங்கு மத குஞ்சரம் உரித்து

மருவீர் உரிவை புனைந்தவர் தம் 

  மருங்கு சூழ்வார் நெருங் குதலால்

திரு வீதியினில் அழகர் அவர் 

  மகிழும் செல்வத் திருவா ரூர்

ஒரு வீதியிலே சிவ லோகம் 

  முழு தும் காண உளதாமால்.  336 

 

 

ஞாலம் உய்ய எழுந்து அருளும் 

  நம்பி தூதர் பரவையார்

கோல மணி மாளிகை வாயில் 

  குறுகுவார் முன் கூடத்தம்

பாலங்கு அணைந்தார் புறம் நிற்பப் 

  பண்டே தம்மை அர்ச்சிக்கும்

சீலம் உடைய மறை முனிவர்ஆகித் 

  தனியே சென்று அணைந்தார்.  337 

 

 

சென்று மணி வாயில் கதவம் 

  செறிய அடைத்த அதன் முன்பு

நின்று பாவாய் திறவாய் என்று 

  அழைப்ப நெறி மென் குழலாகும்

ஒன்றும் துயிலாது உணர்ந்து அயர்வார் 

  உடைய பெருமான் பூசனை செய்

துன்றும் புரிநூல் மணி மார்பர் 

  போலும் அழைத்தார் எனத் துணிந்து.  338 

 

 

பாதிமதி வாழ் முடியாரைப் பயில்

   பூசனையின் பணி புரிவார்

பாதி இரவில் இங்கு அணைந்தது 

  என்னோ என்று பயம் எய்திப்

பாதி உமையாள் திரு வடிவில் 

  பரமர் ஆவது அறியாதே

பாதிமதி வாண் நுதலாரும் பதைத்து 

  வந்து கடை திறந்தார்.  339 

 

 

மன்னும் உரிமை வன் தொண்டர் 

  வாயில் தூதா வாயில் இடை

முன் நின்றாரைக் கண்டு இறைஞ்சி 

  முழுதும் உறங்கும் பொழுதின் கண்

என்னை ஆளும் பெரு மான் 

  இங்கு எய்தி அருளினார் என்ன

மின்னும் மணி நூல் அணிமார்பீர் 

  எய்த வேண்டிற்று என் என்றார்.  340 

 

 

கங்கைநீர் கரந்த வேணி கரந்

  தவர் அருளிச் செய்வார்

நங்கைநீ மாறாது செய்யின் நான் 

  வந்து உரைப்பது என்ன

அங்கயல் விழியி னாரும் அதனை 

  நீர் அருளிச் செய்தால்

இங்கு எனக்கு இசையும் ஆகில் 

  இசையலாம் என்று சொல்லி.  341 

 

 

என் நினைந்து அணைந்து என்பால் 

  இன்னது என்றுஅருளிச் செய்தால்

பின்னை அதியலும் ஆகில் ஆம் 

  எனப் பிரானார் தாமும்

மின்னிடை மடவாய் நம்பி வர

  இங்கு வேண்டும் என்ன

நன் நுதலாரும் சால நன்று 

  நம் பெருமை என்பார்.  342 

 

 

பங்குனித் திருநாளுக்குப் பண்டு

  போல் வருவார் ஆகி

இங்கு எனைப் பிரிந்து போகி 

  ஒற்றியூர் எய்தி அங்கே

சங்கிலித் தொடக்கு உண்டா ருக்கு 

  இங்கு ஒருசார்வு உண்டோநீர்

கங்கு லின் வந்து சொன்ன 

  காரியம் அழகிது என்றார்.  343 

 

 

நாதரும் அதனைக் கேட்டு நங்கை 

  நீ நம்பி செய்த

ஏதங்கள் மனத்துக் கொள் ளாது 

  எய்திய வெகுளி நீங்கி

நோதக ஒழித்தற்கு அன்றே நுன்னை

  யான் வேண்டிக் கொண்டது

ஆதலின் மறுத்தல் செய்ய அடாது 

  என அருளிச் செய்தார்.  344 

 

 

அரு மறை முனிவரான ஐயரைத் 

  தைய லார் தாம்

கருமம் ஈதாக நீர்இக் கடைத் 

  தலை வருகை மற்(று)உம்

பெரு மைக்குத் தகுவது அன்றால் 

  ஒற்றியூர் உறுதி பெற்றார்

வருவதற்கு இசையேன் நீரும் போம் 

  என மறுத்துச் சொன்னார்.  345 

 

 

நம்பர் தாம் அதனைக் கேட்டு 

  நகையும் உட்கொண்டு மெய்ம்மைத்

தம்பரிசு அறியக் காட்டார் தனிப் 

  பெரும் தோழனார் தம்

வெம்புறு வேட்கை காணும் திரு

  விளை யாட்டின் மேவி

வம்பலர் குழலினார் தாம் மறுத் 

  ததே கொண்டு மீண்டார்.  346 

 

 

தூதரைப் போக விட்டு வரவு 

  பார்த் திருந்த தொண்டர்

நாதரை அறி விலாதே நன்

  நுதல் புலவி நீக்கிப்

போதரத் தொழுதேன் என்று புலம்

  புவார் பரவை யாரைக்

காதலில் இசைவு கொண்டு வருவதே 

  கருத்து உட் கொள்வார்.  347 

 

 

போய் அவள் மனையில் நண்ணும் 

  புண்ணியர் என் செய்தாரோ

நாயனார் தம்மைக் கண்டால் நன் 

  நுதல் மறுக்குமோ தான்

ஆயஎன் அயர்வு தன்னை அறிந்து 

  எழுந்து அருளினார் தாம்

சேயிழை துனி நீர்த்து அன்றி 

  மீள்வது செய்யார் என்று.  348 

 

 

வழி எதிர் கொள்ளச் செல்வர் 

  வரவு காணாது மீள்வர்

அழிவுற மயங்கி நிற்பர் அசை

  வுடன் இருப்பர் நெற்றி

விழி யவர் தாழ்த்தார் என்று 

  மீளவும் எழுவர் மாரன்

பொழி மலர் மாரி வீழ 

  ஒதுங்குவார் புன்கண் உற்றார்.  349 

 

 

பரவை யார் தம்பால் நம்பி 

  தூதராம் பாங்கில் போன

அரவணி சடையார் மீண்டே அறியும் 

  மாறு அணையும் போதில்

இரவும்தான் பகலாய் தோன்ற எதிர் 

  எழுந்து அணையை விட்ட

உரவு நீர் வெள்ளம் போல 

  ஓங்கிய களிப்பில் சென்றார்.  350 

 

 

சென்று தம் பிரானைத் தாழ்ந்து 

  திருமுகம் முறுவல் செய்ய

ஒன்றிய விளையாட்டு ஓரார் உறுதி 

  செய்து அணைந்தார் என்றே

அன்று நீர் ஆண்டு கொண்ட 

  அதனுக்குத் தகவே செய்தீர்

இன்று இவள் வெகுளி எல்லாம் 

  தீர்த்து எழுந்து அருளிஎன்றார்.  351 

 

 

அம் மொழி விளம்பும் நம்பிக்கையர் 

  தாம் அருளிச் செய்வார்

நம்மை நீ சொல்ல நாம்போய்ப் 

  பரவைதம் இல்லம் நண்ணிக்

கொம்மை வெம் முலை யினாள்க்கு 

  உன்திறம் எலாம் கூறக் கொள்ளாள்

வெம்மை தான் சொல்லி நாமே 

  வேண்டவும் மறுத்தாள் என்றார்.  352 

 

 

அண் ணலார் அருளிச் செய்யக் 

  கேட்ட ஆரூரர் தாமும்

துண்ணென நடுக்கம் உற்றே தொழுது 

  நீர் அருளிச் செய்த

வண்ணமும் அடி யாள் ஆன 

  பரவையோ மறுப்பாள் நாங்கள்

எண்ண ஆர் அடிமைக்கு என்பது 

 இன்று அறிவித்தீர் என்று.  353 

 

 

வானவர் உய்ய வேண்டி மறி

  கடல் நஞ்சை உண்டீர்

தானவர் புரங்கள் வேவ மூவரைத் 

  தவிர்த்து ஆட் கொண்டீர்

நான் மறைச் சிறுவர்க்காக காலனைக் காய்ந்து நட்டீர்

யான் மிகை உமக்கு இன்று ஆனால் என் செய்வீர் போதா என்றார்.  354 

 

 

ஆவதே செய்தீர் இன்று என் 

  அடிமை வேண்டா விட்டால்

பாவி யேன் தன்னை அன்றுவலிய 

  ஆள் கொண்டபற்று என்

நோவும் என்அழிவும் கண்டீர் நுடங்கு 

  இடை அவள்பால் இன்று

மேவுதல் செய்யீர் ஆகில் விடும்  

  உயிர் என்று வீழ்ந்தார்.  355 

 

 

தம்பி ரான் அதனைக் கண்டு 

  தரியாது தளர்ந்து வீழ்ந்த

நம்பியை அருளால்நோக்கி நாம் இன்னம் 

  அவள் பால்போய் அக்

கொம் பினை இப்போதே நீ 

  குறுகுமா கூறு கின்றோம்

வெம்புறு துயர் நீங்கு என்றார்வினை 

  எல்லாம் விளைக்க வல்லார்.  356 

 

 

மயங்கிய நண்பர் உய்ய வாக்கு 

  எனும் மதுர வாய்மை

நயம் கிளர் அமுதம் நல்க 

  நாவலூர் மன்னர் தாமும்

முயங்கிய கலக்கம் நீக்கி உம் 

  அடித் தொழும்பன் ஏனைப்

பயம் கெடுத்து இவ்வாறு அன்றோபணி 

  கொள்வது என்று போற்ற.  357 

 

 

அன்பர் மேல் கருணை கூர 

  ஆண்டவர் மீண்டும் செல்லப்

பின்பு சென்று இறைஞ்சி நம்பி 

  பேதுற வோடு மீண்டார்

முன்பு உடன் போதா தாரும் 

  முறைமையில் சேவித்து ஏகப்

பொன்புரி சடையார் மாதர் புனித 

  மாளி கையில் சென்றார்.  358 

 

 

மதி நுதல் பரவையார் தாம் 

  மறை யவர் போனபின்பு

முதிர் மறை முனியாய் வந்தார் 

  அருள்உடை முதல்வர் ஆகும்

அதி சயம் பலவும் தோன்ற 

  அறிவுற்றே அஞ்சிக் கெட்டேன்

எதிர்மொழி எம்பிரான் முன் என் 

  செய மறுத்தேன் என்பார்.  359 

 

 

கண்துயில் எய்தார் வெய்யகை யறவு 

  எய்தி ஈங்கு இன்று

அண்டர் தம்பி ரானார் தோழர்க்கு 

  ஆக அர்ச்சிப்பார் கோலம்

கொண்டு அணைந்த வரையான் உட்

  கொண்டிலேன் பாவியேன் என்று

ஒண்சுடர் வாயிலே பார்த்து உழைய 

  ரோடு அழியும் போதில்.  360 

 

 

வெறி யுறு கொன்றை வேணி 

  விமலரும் தாமாம் தன்மை

அறிவுறு கோலத் தோடும் அளவில் 

  பல் பூத நாதர்

செறிவுறு தேவர் யோக முனி

  வர்கள் சூழ்ந்து செல்ல

மறுவில் சீர் பரவையார் தம் 

  மாளிகை புகுந்தார் வந்து.  361 

 

 

பாரிடத் தலைவர் முன்னாம் பல் 

  கண நாதர் தேவர்

நேர் வுறு முனிவர் சித்தர் 

  இயக் கர்கள் நிறைதலாலே

பேரரு ளாளர் எய்தப் பெற்ற 

  மாளி கைதான் தென்பால்

சீர் வளர் கயிலை வெள்ளித் 

  திருமலை போன்றது அன்றே.  362 

 

 

ஐயர் அங்கு அணைந்த போதில் 

  அகில லோகத்து உள்ளாரும்

எய்தியே செறிந்து சூழ எதிர் 

  கொண்ட பரவையார் தாம்

மெய்யுறு நடுக்கத் தோடு மிக்கு 

  எழும் மகிழ்ச்சி பொங்கச்

செய்யதாள் இணை முன் சேர 

  விரைவினால் சென்று வீழ்ந்தார்.  363 

 

 

அரி அயற்கு அரியர் தாமும் 

  ஆயிழையாரை நோக்கி

உரிமையால் ஊரன் ஏவ மீளவும் 

  உன் பால் வந்தோம்

முருகலர் குழலாய் இன்னம் முன்பு 

  போல் மறாதே நின்பால்

பிரிவுற வருந்து கின்றான் வரப் 

  பெற வேண்டும் என்றார்.  364 

 

 

பெரும் தடம் கண்ணினாரும் பிரான் 

  முன்பு மிகவும் அஞ்சி

வருந்திய உள்ளத் தோடு மலர்க்கரம் 

  குழல் மேல் கொண்டே

அரும்திரு மறையோர் ஆகி அணைந்தீர் 

  முன் அடியேன் செய்த

இரும் தவப் பயனாம் என்ன 

  எய்திய நீரோ என்பார்.  365 

 

 

துளிவளர் கண்ணீர் வாரத் தொழுது 

  விண் ணப்பம் செய்வார்

ஒளிவளர் செய்ய பாதம் வருந்த 

  ஓர் இரவு மாறாது

அளி வரும் அன்பர்க்காக அங்கு 

  ஒடிங்கி உழல் வீராகி

எளி வருவீரும் ஆனால் என்செய் 

  கேன் இசையாது என்றார்.  366 

 

 

நங்கை நின் தன்மைக்கு ஏற்கும் 

  நன்மையே மொழிந்தாய் என்று

மங்கை யோர் பாகம் வைத்த 

  வள்ளலார் விரைந்து போக

திங்கள் வாள் நுதலினாரும் சென்று 

  பின்இறைஞ்சி மீண்டார்

எங்களை ஆளும் நம்பி தூதர் 

  மீண்டு ஏகு கின்றார்.  367 

 

 

ஆதியும் மேலும் மா லயன் 

  நாடற்கு அருளாதார்

தூதினில் ஏகித் தொண் டரை 

  ஆளும் தொழில் கண்டே

வீதியில் ஆடிப் பாடி 

  மகிழ்ந்தே மிடை கின்றார்

பூதியில் நீடும் பல் கண 

  நாதப் புகழ் வீரர்.  368 

 

 

அன் னவர் முன்னும் பின்னும் 

  மருங்கும் அணைவு எய்த

மின் இடையார் பால் அன்பரை 

  உய்க்கும் விரை வோடும்

சென் னியில் நீடும் கங்கை 

  ததும்ப திரு வாரூர்

மன்ன வனார் அம்மறைய வனார் 

  பால் வந் துற்றார்.  369 

 

 

அன் பரும் என்பால் ஆவி 

  அளிக்கும் படி போனார்

என் செய்து மீள்வார் இன்னமும் 

  என்றே இடர் கூரப்

பொன் புரி முந்நூல் மார்பினர் 

  செல்லப் பொலி வீதி

முன்புற நேரும் கண் இணை 

  தானும் முகி ழாரால்.  370 

 

 

அந் நிலைமைக் கண் மன்மதன் 

  வாளிக்கு அழிவார் தம்

மன் உயிர் நல்கும் தம் 

  பெருமானார் வந்து எய்த

முன் எதிர் சென்றே மூவுலகும் 

  சென்று அடையும் தாள்

சென்னியில் வைத்து என் சொல்

  லுவார் என்றே தெளியாதார்.  371 

 

 

எம் பெருமான் நீர் என் உயிர் 

  காவாது இடர் செய்யும்

கொம்பு அனையாள் பால் என் 

  கொடுவந்தீர் குறை என்னத்

தம் பெருமானும் தாழ் குழல் 

  செற்றம் தணி வித்தோம்

நம்பி இனிப்போய் மற்று அவள் 

  தன்பால் நணுகு என்ன.  372 

 

 

நந்தி பிரானார் வந்து அருள் 

  செய்ய நலம் எய்தும்

சிந்தையுள் ஆர்வம் கூர் களி 

  எய்தித் திகழ் கின்றார்

பந்தமும் வீடும் நீர் அருள் 

  செய்யும் படி செய்தீர்

எந்தை பிரானே என் இனி 

  என்பால் இடர் என்றார்.  373 

 

 

என்று அடி வீழும் நண்பர்தம் 

  அன்புக்கு எளிவந்தார்

சென்று அணை நீ அச்சேஇழை 

  பால் என்று அருள்செய்து

வென்று உயர் சேமேல் வீதி 

  விடங்கப் பெருமாள் தம்

பொன் திகழ் வாயில் கோயில் 

  புகுந்தார் புவி வாழ.  374 

 

 

தம்பிரான் ஆனார்பின் சென்று தாழ்ந்து 

  எழுந்து அருளால் மீள்வார்

எம்பி ரான் வல்லவாறு என்று 

  எய்திய மகிழ்ச்சி யோடும்

வம் பலர் குழலார் செம்பொன் 

  மாளிகை வாயில் நோக்கி

நம்பி ஆரூரர் காதல் நயந்து 

  எழுந்து அருளும் போது.  375 

 

 

முன் துயில் உணர்ந்து சூழ்ந்த 

  பரிசனம் மருங்கு மொய்ப்ப

மின் திகழ் பொலம் பூமாரி 

  விண்ணவர் பொழிந்து வாழ்த்த

மன்றல் செய் மதுர சீதம் 

  சீகரம் கொண்டு மந்தத்

தென்றலும் எதிர் கொண்டு எய்தும் 

  சேவகம் முன்பு காட்ட.  376 

 

 

மாலை தண் கலவைச் சேறுமான் 

  மதச் சாந்து பொங்கும்

கோல நல் பசும் கர்ப்பூரம் 

  குங்குமம் முதலாய் உள்ள

சாலும் மெய்க் கலன்கள் கூடச் 

  சாத்தும் பூண் ஆடைவர்க்கம்

பால னம் பிறவும் ஏந்தும் 

  பரிசனம் முன்பு செல்ல.  377 

 

 

இவ்வகை இவர் வந்து எய்த 

  எய்திய விருப் பினோடும்

மை வளர் நெடுங் கணாரும் 

  மாளிகை அடைய மன்னும்

செய்வினை அலங்காரத்துச் சிறப்பு 

  அணி பலவும் செய்து

நெய்வளர் விளக்குத் தூபம் நிறை 

  குடம் நிரைத்துப் பின்னும்.  378 

 

 

பூமலி நறும் பொன் தாமம்புனை 

  மணிக் கோவை நாற்றிக்

காமர் பொன் சுண்ணம் வீசிக் 

  கமழ்நறும் சாந்து நீவித்

தூ மலர் வீதி சூழ்ந்த 

  தோகையர் வாழ்த் தத்தாமும்

மாமணி வாயில் முன்பு வந்து 

  எதிர் ஏற்று நின்றார்.  379 

 

 

வண்டு லாம் குழலார் முன்பு 

  வன்தொண்டர் வந்து கூடக்

கண்ட போது உள்ளம் காதல் 

  வெள்ளத்தின் கரை காணாது

கொண்ட நாண் அச்சம் கூர 

  வணங்க அக் குரிசிலாரும்

தண் தளிர் செங்கை பற்றிக் 

  கொண்டு மாளிகையுள் சாந்தார்.  380 

 

 

இருவரும் தம் பிரானார் தாம் 

  இடை ஆடிச் செய்த

திரு அருள் கருணை வெள்ளத் 

  திறத்தினைப் போற்றிச் சிந்தை

மருவிய இன்ப வெள் ளத்து 

  அழுந்திய புணர்ச் சிவாய்ப்ப

ஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் 

  உயிர் ஒன்று ஆனார்.  381 

 

 

ஆரணக் கமலக் கோயில் மேவிப் 

  புற்றிடங் கொண்டு ஆண்ட

நீரணி வேணி யாரை நிரந்

  தரம் பணிந்து போற்றி

பாரணி விளக்கும் செஞ் சொல்

  பதிக மாலைகளும் சாத்தி

தாரணி மணிப்பூண் மார்பர் தாம் 

  மகிழ்ந்து இருந்த நாளில்.  382 

 

 

நம்பி ஆரூரர் நெஞ்சில் நடுக்கம் 

  ஒன்று இன்றி நின்று

தம் பிரானாரைத் தூது தையல் 

  பால் விட்டார் என்னும்

இம்பரின் மிக்க வார்த்தை ஏயர் 

  கோனார் தாம் கேட்டு

வெம்பினார் அதி சயித்தார் வெரு

  வினார் விளம்பல் உற்றார்.  383 

 

 

நாயனை அடி யான் ஏவும் 

  காரியம் நன்று சால

ஏயும் என்று இதனைச் செய்வான்

   தொண்டனாம் என்னே பாவம்

பேயனேன் பொறுக்க ஒண்ணாப் பிழை

  யினைச் செவியால் கேட்பது

ஆயின பின்னும் மாயாது இருந்தது 

  என் ஆவி என்பார்.  384 

 

 

காரிகை தன் பால் செல்லும் 

  காதலால் ஒருவன் ஏவப்

பாரிடை நடந்து செய்ய பாத

  தாம ரைகள் நோவத்

தேரணி வீதி யூடு செல்வது 

  வரு வது ஆகி

ஓரிரவு எல்லாம் தூதுக்கு உழல்

  வராம் ஒருவர் என்று.  385 

 

 

நம்பர் தாம் அடிமை ஆற்றார் 

  ஆகியே நண் ணினாரேல்

உம்பரார் கோனும் மாலும் அயனும் 

  நேர் உணர ஒண்ணா

எம் பிரான் இசைந்தால் ஏவப் 

  பெறுவதே இதனுக்கு உள்ளம்

கம்பியாது அவனை யான் முன்காணும் 

  நாள் எந்நாள் என்று.  386 

 

 

அரிவை காரணத் தினாலே 

 ஆளுடைப் பரமர் தம்மை

இரவினில் தூது போக ஏவி 

  அங்கு இருந்தான் தன்னை

வரவுஎதிர் காண்பேன் ஆகில் வருவது 

  என்னாம் கொல் என்று

விரவிய செற்றம் பற்றி விள்ளும் 

  உள்ளத் தர் ஆகி.  387 

 

 

ஈறிலாப் புகழின் ஓங்கும் ஏயர் 

 கோன்ஆர் தாம் எண்ணிப்

பேறிது பெற்றார் கேட்டுப் பிழை  

  உடன் படுவார் ஆகி

வேறினி இதற்குத் தீர்வு வேண் 

  டுவார் விரிபூங் கொன்றை

ஆறிடு சடைய னாருக்கு அதனை 

  விண் ணப்பம் செய்து.  388 

 

 

நாள் தொறும் பணிந்து போற்ற 

  நாதரும் அதனை நோக்கி

நீடிய தொண்டர் தம் முள் 

  இருவரும் மேவும் நீர்மை

கூடுதல் புரிவார் ஏயர் குரி

  சிலார் தம்பால் மேனி

வாடுறும் சூலை தன்னை அருளி

  னார் வருந்தும் ஆற்றால்.  389 

 

 

ஏதமில் பெருமைச் செய்கை ஏயர்தம் 

  பெரு மான் பக்கல்

ஆதியார் ஏவும் சூலை அனல்செய் 

  வேல் குடைவது என்ன

வேதனை மேல் மேல் செய்ய மிக 

  அதற்கு உடைந்து வீழ்ந்து

பூதநாயகர் தம் பொன் தாள் 

  பற்றியே போற்று கின்றார்.  390 

 

 

சிந்தையால் வாக்கால் அன்பர் திருந்து 

  அடி பேற்றி செய்ய

எந்தமை யாளும் ஏயர் காவலர் 

  தம் பால் ஈசர்

வந் துனை வருத்தும் சூலைவன் 

  தொண்டன் தீர்கில் அன்றி

முந்துற ஒழியாது என்று மொழிந்து 

  அருள் செய்யக் கேட்டு.  391 

 

 

எம்பிரான் எந்தை தந்தை தந்தை 

  எங் கூட்டம் எல்லாம்

தம்பிரான் நீரே என்று வழி 

  வழி சார்ந்து வாழும்

இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை 

  நின்று ஈரும் சூலை

வம்பு என ஆண்டுக் கொண்டான் 

  ஒருவனே தீர்ப்பான் வந்து.  392 

 

 

மற்றவன் தீர்க்கில் தீராது ஒழிந்து 

  எனை வருத்தல் நன்றால்

பெற்றம் மேல் உயர்த்தீர் செய்யும் 

  பெருமையை அறிந்தார் யாரே

உற் றவன் தொண்டற்கே ஆம் 

  உறுதியே செய்தீர் என்னக்

கற்றைவார் சடையார் தாமும் அவர் 

  முன்பு கரந்தார் அன்றே.  393 

 

 

வன் தொண்டர் தம்பால் சென்று 

  வள்ளலார் அருளிச் செய்வார்

இன்று நம் ஏவலாலே ஏயர்

  கோன் உற்ற சூலை

சென்று நீ தீர்ப்பாய் ஆகஎன்று 

  அருள் செயச் சிந்தையோடு

நன்று மெய்ம் மகிழ்ந்து போற்றி 

  வணங்கினார் நாவல் ஊரர்.  394 

 

 

அண் ணலார் அருளிச் செய்து 

  நீங்க ஆரூரர் தாமும்

விண்ணவர் தம்பிரான் ஆர் ஏவ

  லால் விரைந்து செல்வார்

கண்ணிய மனத் தின் மேவும் 

  காதலால் கலிக் காமர்க்குத்

திண்ணிய சூலை தீர்க்க வரு

  திறம் செப்பி விட்டார்.  395 

 

 

நாதர் தம் அருளால் நண்ணும் 

  சூலையும் அவர்பால் கேட்ட

கேதமும் வருத்த மீண்டும் வன்

  தொண்டர் வரவும் கேட்டு

தூத னாய் எம்பிரானை ஏவி

  னான் சூலை தீர்க்கும்

ஏதம் இங்கு எய்தஎய்தில் யான்  

 செய்வது என்னாம் என்பார்.  396 

 

 

மற்றவன் இங்கு வந்து தீர்பதன் 

 முன் நான் மாயப்

பற்றி நின்று என்னை நீங்காப் 

 பாதகச் சூலை தன்னை

உற்ற இவ் வயிற்றினோடும் கிழிப்பன் 

  என்று உடைவாள் தன்னால்

செற்றிட உயிரி னோடும் சூலையும் 

  தீர்ந் தது அன்றே.  397 

 

 

கரு தரும் பெருமை நீர்மைக் 

  கலிக் காமர் தேவியாரும்

பொரு வரும் கணவரோடு போ

  வது புரியும் காலை 

மருவி இங்கு அணைந்தார் நம்பி 

  என்று முன்வந்தார் கூற

ஒருவரும் அழுதல் செய்யாது ஒழிக 

  என்று உரைத்துப் பின்னும்.  398 

 

 

கணவர் தம் செய்கை தன்னைக் 

  கரந்து காவலரை நம்பி

அணைவுறும் பொழுது சால அலங்கரித்து 

  எதிர் போம் என்னப்

புணர் நிலை வாயில் தீபம் 

  பூரண கும்பம் வைத்துத்

துணர் மலர் மாலை தூக்கித்தொழுது 

  எதிர் கொள்ளச் சென்றார்.  399 

 

 

செம்மை சேர்சிந்தை மாந்தர் சென்று 

  எதிர் கொண்டு போற்ற

நம்மை ஆளுடைய நம்பி நகை 

  முகம் அவர்க்கு நல்கி

மெய்மையாம் விருப்பின் னோடும் மேவி 

  உள் புகுந்து மிக்க

மொய்ம் மலர்த் தவிசின் மீது 

  முகம் மலர்ந்து இருந்தபோது.  400 

 

 

பான்மை அர்ச் சனைகள் எல்லாம் 

  பண்பினில் வழாமை ஏய்ந்த

நான்மறை தொடர்ந்த வாய்மை நம்பி 

  ஆரூரர் கொண்டு இங்கு

யான் மிகவருந்து கின்றேன் ஏயர் 

  கோனார் தாம் உற்ற

ஊன வெஞ்சூலை நீங்கி உடன் 

  இருப் பதனுக்கு என்றார்.  401 

 

 

மாதர்தம் ஏவலாலே மனைத் தொழில் 

  மாக்கள் மற்று இங்கு

ஏதம் ஒன்று இல்லை உள்ளே 

  பள்ளி கொள்கின்றார் என்னத்

தீது அணைவில்லையேனும் என் 

  மனம் தெருளாது இன்னம்

ஆதலால் அவரைக் காண வேண்டும் 

  என்று அருளிச் செய்தார்.  402 

 

 

வன் தொண்டர் பின்னும் கூற 

  மற்றவர் தம்மைக் காட்டத்

துன்றிய குருதி சோரத் தொடர் 

  குடர் சொரிந்து உள்ளாவி

பொன் றியே கிடந்தார் தம்மைக் 

  கண்ட பின் புகுந்தவாறு

நன்றுஎன மொழிந்து நானும் நண்ணுவேன் 

  இவர் முன்பு என்பார்.  403 

 

 

கோளுறு மனத்தர் ஆகிக் குற்று 

  உடை வாளைப் பற்ற

ஆளுடைத் தம்பி ரானார் அருளி

  னால் அவரும் உய்ந்து

கேளிரே ஆகிக் கெட்டேன் என 

  விரைந்து எழுந்து கையில்

வாளினைப் பிடித்துக் கொள்ள வன் 

  தொண்டர் வணங்கி வீழ்ந்தார்.  404 

 

 

மற்றவர் வணங்கி வீழ வா

  ளினை மாற்றி ஏயர்

கொற்ற வனாரும் நம்பி குரை

  கழல் பணிந்து வீழ்ந்தார்

அற்றை நாள் நிகழ்ந்த இந்த 

  அதிசயம் கண்டு வானோர்

பொன்தட மலரின் மாரி பொழிந்

  தனர் புவனம் போற்ற.  405 

 

 

இருவரும் எழுந்து புல்லி இடை

   விடா நண்பினாலே

பொரு வரும் மகிழ்சி பொங்கத் 

  திருபுன்கூர் புனிதர் பாதம்

மருவினர் போற்றி நின்று வன் 

  தொண்டர் தம்பி ரானார்

அருளினை நினைந்தே அந்த ணாளன் 

  என்று எடுத்து பாடி.  406 

 

 

சிலபகல் கழிந்த பின்பு திரு

  முனைப் பாடி நாடர்

மலர் புகழ்த் திருவாரூரில் மகிழ்ந்

  துடன் வந்த ஏயர்

குல முதல் தலைவனாரும் கூடவே 

  குளிர் பூங் கோயில்

நிலவினார் தம்மைக் கும்பிட்டு உறைந்

  தனர் நிறைந்த அன்பால்.  407 

 

 

அங்கு இனிது அமர்ந்து நம்பி 

  அருளினால் மீண்டும் போந்து

பொங்கிய திருவின் மிக்க தம்

  பதி புகுந்து பொற்பில்

தங்கு நாள் ஏயர்கோனார் தமக்கு 

 ஏற்ற தொண்டு செய்தே

செங்கண் மால் விடையார் பாதம் 

  சேர்ந்தனர் சிறப் பினேடும்.  408 

 

 

நள்ளிருள் நாய னாரைத் தூது 

  விட்டு அவர்க்கே நண்பாம்

வள்ளலார் ஏயர் கோனார் மலர் 

  அடி வணங் கிப்புக்கேன்

உள்ளு ணர்வான ஞானம் முதலிய 

  ஒரு நான்கு உண்மை

தெள்ளு தீந்தமிழால் கூறும் திரு

  மூலர் பெருமை செப்ப.  409

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

திருவல்லம் பாம்பணையான் சித்தர்
View Details
நக்கீரருக்கு இலக்கணம் உபதேசித்தல்
View Details
அகத்தியர்
View Details