பத்தாம்-திருமுறை

9ம் தந்திரம் - 19. வரையுரை மாட்சி

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

தான்வரைவு அற்றபின் ஆரை வரைவது

தான்அவ னானபின் ஆரை நினைவது

காமனை வென்றகண்ணாரை உகப்பது

தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே.  1 

 

 

உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்

கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோ

திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்

புரையற்று இருந்தான் புரிசடை யோனே.  2 

 

 

மனமாயை மாயைஇம் மாயை மயக்கம்

மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை

பினைமாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா

தனைஆய்ந்து இருப்பது தத்துவந் தானே.  3 

 

திருச்சிற்றம்பலம்