பத்தாம்-திருமுறை

9ம் தந்திரம் - 15. சிவ சொரூப தரிசனம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஓதும் மயிர்க்கால் தோறும் அமு தூறிய

பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்

ஆதி சொரூபங்கள் மூன்றுஅகன்று அப்பாலை

வேதம் ஓதும் சொரூபிதன் மேன்மையே.  1 

 

 

உணர்வும் அவனே உயிரும் அவனே

புணரும் அவனே புலவி அவனே

இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்

துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.  2 

 

 

துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரு

முன்னி அவர்தம் குறையை முடித்திடும்

மன்னிய கேள்வி மறையவன் மாதவன்

சென்னியுள் நின்றதோர் தேற்றத்தன் ஆமே.  3 

 

 

மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்

தன்னுற்ற சோதித் தலைவன் இணையிலி

பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்

என்னுற்று அறிவன்நான் என்விழித் தானே.  4 

 

 

சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம்

சித்தத்தின் நில்லாச் சிவானந்தப் பேரொளி

சுத்தப் பிரம துரியம் துரியத்துள்

உய்த்த துரியத்து உறுபே ரொளியே.  5 

 

 

பரன்அல்ல நீடும் பராபரன் அல்ல

உரன்அல்ல மீதுணர் ஒண்சுடர் அல்ல

தரன்அல்ல தான்அவை யாய்அல்ல வாகும்

அரன்அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே.  6 

 

 

முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்

பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா

சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலால்

சுத்தி யகன்றோர் சுகானந்த போதரே.  7 

 

 

துரிய அதீதம் சொல்லறும் பாழாம்

அரிய துரியம் அதீதம் புரியில்

விரியும் குவியும் விள்ளா மிளிரும்தன்

உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே.  8 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

பாண்டியனுக்காக தண்ணீர் பந்தல் அமைத்தல்
View Details
சமணர் ஏவிய யானை வதம்
View Details
கல்லுளிச் சித்தர்
View Details