பத்தாம்-திருமுறை

9ம் தந்திரம் - 08.1 திருக்கூத்து தரிசனம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி

எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்

எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்

தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே.  1 

 

 

சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச்

சொற்பத மாம்அந்தச் சுந்தரக் கூத்தனைப்

பொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனை

அற்புதக் கூத்தனை யார்அறி வாரே.  2 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

ஸ்ரீ போடோ சித்தர் ஞானி
View Details
தாயுமானவர்
View Details
சேரனுக்கு நிருபம் கொடுத்தல்
View Details