பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 42. முத்தியுடைமை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத்

தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி

மெய்த்தவஞ் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப்

பத்தியி லுற்றோர் பரானந்த போதரே.  1 

 

 

வளங்கனி தேடிய வன்றாட் பறவை

உளங்கனி தேடி யுழிதரும் போது

களங்கனி யங்கியிற் கைவிளக் கேற்றி

நலங் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே.  2 

 

திருச்சிற்றம்பலம்