பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 39. ஞானி செயல்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

முன்னை வினைவரின் முன்னுண்டே நீங்குவர்

பின்னை வினைக்கணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள்

தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள்

நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே.  1 

 

 

தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை யவிழ்ப்பர்கள்

பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்

சென்னியின் வைத்த சிவனரு ளாலே.  2 

 

 

மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்

மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா

மனவாக்குக் கெட்டவர் வாதனை தன்னால்

தனைமாற்றி யாற்றத் தகுஞானி தானே.  3 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

நூல்களின் ஏற்ற தாழ்வு கண்டறிதல்
View Details
எறிபத்த நாயனார்
View Details
ஸ்ரீ போடோ சித்தர் ஞானி
View Details