பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 37. விசுவக் கிராசம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

அழிகின்ற சாயா புருடனைப் போலக்

கழிகின்ற நீரிற் குமிழியைக் காணில்

எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப்

பொழிகின்ற இவ்வுடற் போமப் பரத்தே.  1 

 

 

உடலும் உயிரும் ஒழிவற ஒன்றிற்

படருஞ் சிவசத்தி தாமே பரமாம்

உடலைவிட் டிந்த உயிரெங்கு மாகிக்

கடையுந் தலையுங் கரக்குஞ் சிவத்தே.  2 

 

 

செவிமெய்வாய் கண்மூக்குச் சேரிந் திரியம்

அவியின் றியமன மாதிகள் ஐந்துங்

குவிவொன் றிலாமல் விரிந்து குவிந்து

தவிர்வொன் றிலாத சராசரந் தானே.  3 

 

 

பரனெங்கு மாரப் பரந்துற்று நிற்கும்

திரனெங்கு மாகிச் செறிவெங்கு மெய்தும்

உரனெங்கு மாயுல குண்டு உமிழ்க்கும்

வரமிங்ஙன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே.  4 

 

 

அளந்து துரியத் தறிவினை வாங்கி

உளங்கொள் பரஞ்சகம் உண்ட தொழித்துக்

கிளர்ந்த பரஞ்சிவஞ்சேரக் கிடைத்தால்

விளங்கிய வெட்ட வெளியனு மாமே.  5 

 

 

இரும்பிடை நீரென என்னையுள் வாங்கிப்

பரம்பர மான பரமது விட்டே

உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி

இருந்தஎன் நந்தி இதயத்து ளானே.  6 

 

 

கரியுண் விளவின் கனிபோல் உயிரும்

உரிய பரமுமுன் னோதுஞ் சிவமும்

அரிய துரியமேல் அகிலமும் எல்லாம்

திரிய விழுங்குஞ் சிவபெரு மானே.  7 

 

 

அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன்

தந்தம் பரம்பரன் தன்னிற் பரமுடன்

நந்தமை யுண்டுமெய்ஞ் ஞானநே யாந்தத்தே

நந்தி யிருந்தனன் நாமறி யோமே.  8 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

நேச நாயனார்
View Details
அன்னக்குழி, வைகை அழைத்தல்
View Details
திருவாதவூரருக்கு உபதேசித்தல்
View Details