பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 35. இலக்கணாத் திரயம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

விட்ட விலக்கணைதான்போம் வியோமத்துத்

தொட்டு விடாத துபசாந்தத் தேதொகும்

விட்டு விடாதது மேவுஞ்சத் தாதியிற்

சுட்டு மிலக்கணா தீதஞ் சொருபமே.  1 

 

 

வில்லின் விசைநாணிற்கோத்திலக்கெய்தபின்

கொல்லுங் களிறைந்துங் கோலொடு சாய்ந்தன

இல்லு ளிருந்தெறி கூரும் ஒருவற்குக்

கல்கலன் என்னக் கதிரெதி ராமே.  2 

திருச்சிற்றம்பலம்