பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 29. உபசாந்தம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே

பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே

சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்

சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.  1 

 

 

காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்

காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி

காரிய காரண வாதனைப் பற்றறப்

பாரண வும் உப சாந்தப் பரிசிதே.  2 

 

 

அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்

முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி

மன்னும் பரங்காட்சி யாவது உடனுற்றுத்

தன்னின் வியாத்தி தனில்உப சாந்தமே.  3 

 

 

ஆறாற மைந்துஆண வத்தையுள் நீக்குதல்

பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்தி

கூறாத சாக்கிரா தீதம் குருபரன்

பேறாம் வியாத்தம் பிறழ்உப சாந்தமே.  4 

 

 

வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப் போய்

ஏய்ந்த சிவமாத லின்சிவா னந்தத்துத்

தோய்ந்தறல் மோனச் சுகானுபவத் தோடே

ஆய்ந்துஅதில் தீர்க்கை யானதுஈர் ஐந்துமே.  5 

 

 

பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த்

திரையின்நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று

உரையுணர்ந்து ஆரமுது ஒக்க உணர்ந்துளோன்

கரைகண் டானுரை அற்ற கணக்கிலே.  6 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

உரோம முனி சித்தர்
View Details
கலசப்பாக்கம் மலப்பீடான் சித்தர் (பூண்டிச்சித்தர்)
View Details
திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
View Details