பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 20. முப்பரம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

தோன்றிஎன் உள்ளே சுழன்றுஎழு கின்றதோர்

மூன்று படிமண் டலத்து முதல்வனை

ஏன்றெய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி

நான்று நலம்செய் நலந்தரு மாறே.  1 

 

 

மன்று நிறைந்தது மாபர மாயது

நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்

கன்று நினைந்தெழு தாயென வந்தபின்

குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே.  2 

 

 

ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப்பரம்

கூறா உபதேசம் கூறில் சிவபரம்

வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்

பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.  3 

 

 

பற்றறப் பற்றில் பரம்பதி யாவது

பற்றறப் பற்றில் பரனறி வேபரம்

பற்றறப் பற்றினில் பற்றவல் லோர்கட்கே

பற்றறப் பற்றில் பரம்பர மாமே.  4 

 

 

பரம்பர மான பதிபாசம் பற்றாப்

பரம்பர மாகும் பரஞ்சிவ மேவப்

பரம்பர மான பரசிவா னந்தம்

பரம்பர மாகப் படைப்பது அறிவே.  5 

 

 

நனவில் கலாதியாம் நாலொன்று அகன்று

தனியுற்ற கேவலம் தன்னில் தானாகி

நினைவுற்று அகன்ற அதீதத்துள் நேயந்

தனையுற்று இடத்தானே தற்பர மாமே.  6 

 

 

தற்கண்ட தூயமும் தன்னில் விலாசமும்

பிற்காணும் தூடணம் தானும் பிறழ்வுற்றுத்

தற்பரன் கால பரமும் கலந்தற்ற

நற்பரா தீதமும் நாடுஅக ராதியே.  7 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

வெள்ளம் தடுத்தல்
View Details
புலிப்பாணி சித்தர்
View Details
பாண்டியனுக்காக தண்ணீர் பந்தல் அமைத்தல்
View Details