பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 12. கலவு செலவு

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

கேவலம் தன்னில் கலவச் சகலத்தின்

மேவும் செலவு விடவரு நீக்கத்துப்

பாவும் தனைக்காண்டல் மூன்றும் படர்வற்ற

தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.  1 

 

 

வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்

செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை

அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்

கல்லும் பிளந்து கடுவெளி யாமே.  2 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

திருநீலகண்ட நாயனார்
View Details
படையுடன் சோழனை மடுவில் வீழ்த்தல்
View Details
உக்கிர பாண்டியனுக்கு வளையம்ரூபவ் வேல்ரூபவ் சண்டாயுதம் கொடுத்தல்
View Details