பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 10. அண்டாதி பேதம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம்

எறிகடல் ஏழின் மணல்அள வாகப்

பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்

செறியும் அண் டாசனத் தேவர் பிரானே.  1 

 

 

ஆனந்த தத்துவம் அண்டா சலத்தின்மேல்

மேனிஐந்தாக வியாத்தம்முப் பத்தாறாய்த் 

தான்அந்த மில்லாத தத்துவம் ஆனவை

ஈனமி லா அண்டத்து எண்மடங்கு ஆமே.  2 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

படை காட்டல்
View Details
சேரனுக்கு நிருபம் கொடுத்தல்
View Details
கடுவெளி சித்தர்
View Details