பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 02. உடல்விடல்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

பண்ணாகும்1  காமம் பயிலும் வசனமும்

விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும்

புண்ணாம் உடலில் பொருந்தும் மனத்தையும்

அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே.  1 

 

 

அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவிகண்

கழிகின்ற காலவ் விரதங்கள் தானம்

மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி

ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே.  2 

 

 

இலையாம் இடையில் எழுகின்ற காமம்

முலைவாய நெஞ்சத்து மூழ்கும் உளத்துத்

தலையாய மின்னுடல் தாங்கித் திரியும்

சிலையாய சித்தம் சிவமுன் இடைக்கே.  3 

 

திருச்சிற்றம்பலம்