பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 29. சீவன்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்

கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு

மேவிய கூறது ஆயிரம் ஆயினால்

ஆவியின் கூறுநூ றாயிரத்து ஒன்றே.  1 

 

 

ஏனோர் பெருமையன் ஆயினும் எம்மிறை

ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன்

வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்

தானே அறியும் தவத்தின் அளவே.  2 

 

 

உண்டு தெளிவன் உரைக்க வியோகமே

கொண்டு பயிலும் குணமில்லை யாயினும்

பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக்

கண்டு சிவனுருக் கொள்வர் கருத்துளே.  3 

 

 

மாயா உபாதி வசத்தாகும் சேதனத்து

ஆய குருஅரு ளாலே அதில்தூண்ட

ஓயும் உபாதியோடு ஒன்றின் ஒன் றாது உயிர்

ஆய துரியம் புகுந்தறி வாகவே.  4 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

குறையாத அரிசி மூட்டை அளித்தல்
View Details
திருக்கூத்து
View Details
மேருவிலிருந்து பொன் பறித்தல்
View Details