பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 28. புருடன்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

வைகரி யாதியும் மாயா மலாதியும்

பொய்கரி யான புருடாதி பேதமும்

மெய்கரி ஞானம் கிரியா விசேடத்துச்

செய்கரி ஈசன் அனாதியே செய்ததே.  1 

 

 

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை

அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு

அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு

அணுவில் அணுவை அணுகலும் ஆமே.  2 

 

 

படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்

சுடர்கொண்டு அணுவினைத் தூவழி செய்ய

இடர்கொண்ட பாச இருளற ஓட்டி

நடர்கொண்ட நல்வழி நாடலும் ஆமே.  3 

 

 

அணுவுள் அவனும் அவனுள் அணுவும்

கணுஅற நின்ற கலப்பது உணரார்

இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்

தணிவற நின்றான் சராசரம் தானே.  4 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

விண்ணுலகம் சென்றுவிட்ட மலையத்துவஜனை அழைத்தல்
View Details
மாபாதகம் தீர்த்தல்
View Details
வேப்பிலைக்கட்டிச் சித்தர்
View Details