பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 23. பிண்டாதித்தன்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்

கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன்

கொன்று மலங்கள் குழல்வழி ஓடிட

வென்று விளங்கும் விரிசுடர் காணுமே.  1 

 

 

ஆதித்தன் ஓடி அடங்கும் இடங்கண்டு

சாதிக்க வல்லவர் தம்மை யுணர்ந்தவர்

பேதித்து உலகம் பிதற்றும் பிதற்றெல்லாம்

ஆதித்தனோடே அடங்குகின் றாரே.  2 

 

 

உருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்து

சொருகிக் கிடக்கும் துறையறி வார்இல்லை

சொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு

உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே.  3 

திருச்சிற்றம்பலம்