பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 16. பிட்சா விதி

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

விச்சுக் கலம் உண்டு வேலிச்செய் ஒன்றுண்டு

உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது

அச்சம்கெட்டு அச்செயல் அறுத்துண்ண மாட்டாதார்

இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே.  1 

 

 

பிச்சையது ஏற்றான் பிரமன் தலைதன்னில்

பிச்சையது ஏற்றான் பிரியா அறஞ்செய்யப்

பிச்சையது ஏற்றான் பிரமன் சிரங்காட்டிப்

பிச்சையது ஏற்றான் பிரமன் பரமாகவே.  2 

 

 

பரந்துலகு ஏழும் படைத்த பிரானை

இரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும்

நிரந்தர மாக நினையும் அடியார்

இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே.  3 

 

 

வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன்

தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம்

பொரஇருந் தான்புக லேபுக லாக

வரஇருந் தால்அறி யான்என்ப தாமே.  4 

 

 

அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்

தங்கார் சிவனடி யார்சரீரத்திடைப்

பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும்

தங்கார் சிவனைத் தலைப்படு வாரே.  5 

 

 

மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும்

கையகம் நீண்டார் கடைத்தலைக் கேசெல்வர்

ஐயம் புகாமல் இருந்த தவசியர்

வையகம் எல்லாம் வரஇருந்தாரே.  6 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

மாயக் குதிரைகள் விற்றல்
View Details
நூல்களின் ஏற்ற தாழ்வு கண்டறிதல்
View Details
பாம்பாட்டிச் சித்தர்
View Details