பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 07. சிவலிங்கம் ( சிவகுரு )

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்

பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும்

நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை

வரைத்து வலம்செயு மாறுஅறி யேனே.  1 

 

 

வரைத்து வலஞ்செய்யு மாறுஇங்குஒன்று உண்டு

நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி

உரைத்து அவன் நாமம் உணரவல் லார்க்குப்

புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே.  2 

 

 

ஒன்றெனக் கண்டேயெம் ஈசன் ஒருவனை

நன்றென்று அடியிணை நான்அவனைத்தொழ

வென்றுஐம் புலனும் மிகக்கிடந்து இன்புற

அன்றுஎன்று அருள்செய்யும் ஆதிப் பிரானே.  3 

 

 

மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன்

பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்

நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப்

பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே.  4 

 

 

மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று

ஆவி எழும்அள வன்றே உடலுற

மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்

பாவித்து அடக்கிற் பரகதி தானே.  5 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

முனையடுவார் நாயனார்
View Details
உக்கிர பாண்டியன் பிறப்பு
View Details
கருவூரார்
View Details